தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ராஜமௌலி கடந்த ஆண்டு பாகுபலி2 என்ற மிகப்பெரிய பிரம்மாண்ட படத்தை கொடுத்திருந்தார்.
எனவே அவரின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
யாருடைய படத்தை அடுத்து அவர் இயக்கப்போகிறார்? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அந்த போட்டோவில் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் ராஜமௌலியுடன் அமர்ந்துள்ளனர்.
எனவே ராஜமௌலியின் அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
இப்படத்தை ராஜமௌலி தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
Rajamoulis next film to feature Ram Charan and Jr NTR