ராஜமௌலியின் அண்ணன் இயக்கத்தில் ‘காட்சி நேரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாவீரன், நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ராஜமௌலி.

இவரது தந்தை விஜேந்திர பிரசாத்தும் திரைத்துறையை சார்ந்தவர்தான்.

தற்போது ராஜமௌலியின் அண்ணன் எஸ். எஸ்.காஞ்சியும் படத்தை இயக்க வந்துவிட்டார்.

இவர் இயக்கிய தெலுங்கு படம் இப்போது தமிழில் காட்சி நேரம் என்ற தலைப்பு வெளியாக உள்ளது.

இதில் ரணதீர், மீரா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

இது நவயுக தம்பதியைச் சுற்றி நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதை என தெரிய வந்துள்ளது.

இரண்டு முறையும் இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனக்கான கதையை கவனமுடன் தேர்ந்தெடுத்து, அதில் தன் நடிப்பாற்றலை கொடுத்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருபவர் சூர்யா.

ஹரி இயக்கும் சிங்கம்3 படத்தை முடித்துவிட்டு ‘கொம்பன்’ முத்தையா அல்லது ‘கபாலி’ ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று அறிவித்து தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.

இந்நிலையில் இதனையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று எதிர்பாராத வகையில் அடுத்த இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் சூர்யா.

இணையத்தை அதிர வைத்த விஜய்-சூர்யா-நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்த யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி சில மாதங்களாகவே பலமாக ஒலித்தது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்தது.

இச்செய்தி இணையங்களில் பரவ தொடங்கிய 30 நிமிடங்களில் சூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்றும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற செய்தி வெளியானது.

இதனையடுத்து 3 மணி நேரத்தில் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் நேரத்தில் நயன்தாரா பட அறிவிப்பு வெளியானது.

நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக அறம் என்ற தலைப்பிடப்பட்ட பர்ஸ்ட் லுக் வெளியானது.

இவர்கள் மூவரின் படச்செய்தி அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து, இணையத்தில் சில மணி நேரங்களுக்கு அதிர வைத்தது.

நயன்தாரா பிறந்தநாளில் வெளியானது டைட்டில் பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டதட்ட 13 வருடங்களுக்கு மேலாக தன் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்கள் கட்டி போட்டு வருபவர் நயன்தாரா.

இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

எனவே இவரது ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக நயன்தாராவின் 55வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு அறம் என பெயரிடுள்ளனர். இதில் கலெக்டராக கம்பீரமாக நிற்கிறார் நயன்தாரா.

கே.ஜே.ஆர் நிறுவனம் சார்பாக கொட்டப்பாடி ஆர். ராஜேஷ் தயாரிக்க, இப்படத்தை மீஞ்சூர் கோபி நய்னார் இயக்குகிறார்.

ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வருகிறது.

இந்த போஸ்டரின் பின்னணியில், ஆழ்துளை கிணற்றில் சிறுமி பலி உள்ளிட்ட நாளிதழ் செய்திகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா-செல்வராகவனை இணைத்த ஜோக்கர் பட நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 (எஸ்3) டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில் சற்றுமுன் யாரும் எதிர்பாராத நிலையில், சூர்யாவின் 36வது படத்தில் செல்வராகவன் இயக்குகிறார் என்ற தகவல் வெளியானது.

இப்படத்தை ஜோக்கர், காஷ்மோரா படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

விஜய்-அட்லி கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படத்திற்காக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்தார்.

தமிழ் புத்தாண்டு (14/04.2016) தினத்தில் வெளியான இப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

தற்போது பைரவா படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இத்தகவலை நாம் பலமுறை பார்த்துவிட்டாலும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது இணையத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது விஜய் நடிப்பில் உருவாகும் 61வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows