சிவகார்த்திகேயன் வழியில் ‘ராஜா மந்திரி’ வைஷாலி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‛ராஜா மந்திரி’.

சுசீந்திரனுடன் ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கலையரசன் மற்றும் ஸோயா ஒரு ஜோடியாகவும் காளி வெங்கட் மற்றும் வைஷாலி மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.

இதில் வைஷாலி, சிவாகார்த்திகேயனைப் போல் ஒரு தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் பாலசரவணன் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசைமைத்துள்ளார்.

இதில் இடம்பெற்ற “எதிர்த்த வீட்டு காலி ப்ளவரே… என்னை காதலிக்க பொறந்த என் லவ்வரே…” பாடல் ஏற்கெனவே பெரும் ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வருகிற ஜுன் 24ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

தலைவருக்கும் கபாலிக்கும் ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாக ரஜினி உடல்நிலை குறித்த வதந்தி பரவியது.

எனவே, இதனையடுத்து, ரஜினி ஆரோக்கியமாக இருக்கிறார் என அவரது குடும்பத்தார் அறிக்கை அளித்தனர்.

இந்நிலையில், தலைவர் ரஜினிக்காகவும் விரைவில் வெளியாகவுள்ள கபாலி மாபெரும் வெற்றி பெற வேண்டியும் பிரார்த்தனை நடைபெற்றுள்ளது.

வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகரில் உள்ள அருள்மிகு சோழபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு யாகமும், கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.

இதில் ரசிகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் 2000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை சோளிங்கர் என் ரவி செய்திருந்தார்.

அட… ப்ரியா ஆனந்த் எதையும் விடமாட்டாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாமனன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார் ப்ரியா ஆனந்த்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என 18 படங்களில் நடித்துவிட்டார்.

தற்போது கூட்டத்தில் ஒருவன், முத்துராமலிங்கம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்தியளவில் பிரபலமானாலும் இதுவரை மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது இந்த இரு மொழி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் உடன் ஈஸ்ரா என்ற படத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து, ராஜகுமாரா என்ற கன்னட படத்திலும் நடிக்கவிருக்கிறாராம் இந்த தமிழ் நடிகை.

இவர் அனைத்து மொழிகளிலும் நடித்து வருவதால், இவரு எதையும் விட மாட்டாரு போலவே என மற்றவர்கள் புலம்பி வருகிறார்களாம்.

‘பாகுபலி’யை மிஞ்சும் ‘கபாலி’… சர்வதேச அளவில் விநியோகம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படம் சென்சாருக்கு சென்று வந்த பின்னர்தான் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்த முடியும் என்று தயாரிப்பாளர் தாணு சொன்னாலும், ஜுலை 15ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

அதன்படி கபாலி விநியோக உரிமையும் களை கட்டி வருகிறது.

இப்படம் வெளியாகும் சமயத்தில் கிட்டதட்ட தமிழகத்தில் உள்ள 85% தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் மதுரை மாவட்ட உரிமையை சாய் சினிமாஸ் நிறுவனம் ரூ. 8 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை எந்த படத்திற்கு இவ்வளவு விலை கொடுக்கப்பட்டது இல்லையாம்.

இவையில்லாமல், இந்தியா முழுவதிலும் இப்படத்தை அதிக தியேட்டர்களில் திரையிடவுள்ளனர்.

இதனிடையில், மலாய் மொழியிலும் டப்பிங் செய்து மலேசியாவில் வெளியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சீன மொழியிலும் படத்தை டப்பிங் செய்யவுள்ளனர்.

அண்மையில் பாகுபலி படம் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், பாகுபலியை மிஞ்சும் வகையில் கபாலி, அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் ஆகும் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தளபதி, படையப்பா, குசேலனுக்கு பிறகு கபாலிதான்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு ரஜினி படங்களில் அவரது பெயர் வரும்போதே தியேட்டர் ஆர்ப்பரிக்கும்.

டைட்டில் கார்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற ஒவ்வொரு எழுத்துக்களாக வந்து சேர்வதற்குள் விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.

அதுபோல்தான் அவரது அறிமுக காட்சி அமைந்திருக்கும். பெரும்பாலும் பாடல் காட்சிகளில் அவர் தோன்றுவார்.

இந்த காட்சி படம் தொடங்கி 5 நிமிடங்களில் வந்துவிடும்.

ஆனால் தளபதி, படையப்பா மற்றும் குசேலன் ஆகிய படங்களில் ரஜினியின் அறிமுக காட்சி சற்று தாமதமாகத்தான் வரும்.

அதுபோல் விரைவில் வெளியாகவுள்ள கபாலி படத்திலும் ரஜினியின் அறிமுக காட்சி திரையில் வர கிட்டதட்ட 15 நிமிடங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இம்… அதுவரை தியேட்டர்களில் ஸ்கீரின் கிழியாமல் இருந்தால் ஓகேதான்.

‘கபாலி’க்கும் ‘தல-57’க்கும் இப்படி ஒரு தொடர்பா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் வந்து ரஜினியைப் போல் சாதிப்பவர் அஜித்.

மேலும் இவர்களிடையே எளிமை, அமைதி, ஓபன் டாக், வெளித்தோற்ற நம்பிக்கையின்மை என பல விஷயங்கள் ஒற்றுமையாகவே உள்ளன.

இந்நிலையில் இவர்களின் சமீபத்திய படங்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கபாலி படத்தில் இளமையான ரஜினி, வயதான தாடி வைத்த கேங்ஸ்டர் ரஜினி, தாடியில்லாத ரஜினி என பல தோற்றங்களில் அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

இவை அனைத்துக்கும் காரணம் டிசைனர் அனுவர்தன் என்பவர்தான்.

இவர்தான் அஜித்தின் தல 57 படத்திற்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

அஜித்தின் பில்லா, ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்களுக்கும் இவரே டிசைனராக பணிபுரிந்து இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More Articles
Follows