ரஜினியை இயக்கியவருடன் நான் இணைந்தது பாக்கியம்… லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் கன்னடத்தில் உருவான சிவலிங்கா மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தை தமிழிலும் இதே பெயரில் உருவாக்கியுள்ளார் வாசு.

லாரன்ஸ், ரித்திகா சிங், சக்திவாசு, வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

அப்போது லாரன்ஸ் பேசியதாவது…

நான் இந்த படத்தில் 4வது ஹீரோதான். பர்ஸ்ட் ஹீரோ ரித்திகா சிங், 2வது வடிவேலு, 3வது சக்திவாசு.

என் தலைவன் ரஜினியை இயக்கியவருடன் நான் பணிபுரிந்துள்ளேன் என்பது நான் செய்த பாக்கியம்.

என் மேல் கண் பட்டு இருப்பதாக ராதாரவி அண்ணன் சொன்னார்.

அவரைப் போன்ற நல்லவர்களின் ஆசி இருக்கும்போது என்னை எதுவும் ஒன்றும் செய்யாது.” என்றார்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

‘தெறி’ நைனிகாவின் அடுத்த படத்திற்கு ஓகே சொன்ன மீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சித்திக் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தாரா, பேபி அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’.

இதன் தமிழ் ரீமேக்கை சித்திக் அவர்களே இயக்க உள்ளதையும், அதற்கான பூஜை இன்று போடப்பட்டதையும் பார்த்தோம்.

இப்படத்திற்கு பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்று பெயரிட்டு இருக்கிறார்களாம்.

இதில் அர்விந்த்சாமி, அமலாபால் இருவரும் நடிக்கின்றனர்.

இதில் அமலாபாலின் மகளாக ‘தெறி பேபி’ புகழ் நைனிகா நடிக்கிறாராம்.

இதற்கு இவரது அம்மா மீனா ஓகே சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது.

விஷால் பட இயக்குனருடன் கைகோர்க்கும் மாநகரம் ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் மாநகரம்.

புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்திக் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்பட நாயகன் சந்தீப் கிஷன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்தை இயக்குனர் திரு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர், விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்யவிருக்கும் இப்படத்தை அடுத்த மே மாதம் தொடங்கவிருக்கிறார்கள்.

ட்ரெண்டிங் மோதலுக்கு ரெடியாகும் அஜித்-சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் குறித்த செய்தி வெளியானால், அதை அதிகளவில் இணையங்களில் பகிர்ந்து ட்ரெண்ட் அடிப்பதை ரசிகர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

எனவே, ஒவ்வொரு இயக்குனரும் நடிகரும் இதற்கேற்ப தங்கள் படத்தகவல்களை பகிர்கின்றனர்.

அடுத்த வாரம் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பை கூட, பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை இன்று அறிவிப்போம் என்று ட்ரெண்ட் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். (இது எப்படி இருக்கு?)

இந்நிலையில் மே 1ஆம் தேதி அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என செய்திகள் வந்துள்ளன.

இதே நாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

எனவே ஒரே நாளில், அஜித்-சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் மோதலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது.

Ajith and Sivakarthikeyan fans getting ready to make Trending on 1st May

அட்லி சூட்டிங் தள்ளிப் போவதால் ‘பாகுபலி’ விழாவில் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தினார் அட்லி.

இதனையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக இப்படக்குழு ராஜஸ்தான் செல்லவிருக்கிறது என்பதை பார்த்தோம்.

அங்கு சில லொக்கேஷன் பணிகள் தாமதாகி வருவதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் நடைபெற உள்ள ராஜமவுலியின் ‘பாகுபலி’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Whether Vijay will atten Baahubali audio launch event?

அம்மா மீனாவுடன் ‘தெறி’ நைனிகா பங்குபெற்ற ஃபேஷன் ஷோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது என்னும் பொன்மொழிகேற்ப முழுக்க முழுக்க குழந்தைகளை கொண்ட ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

திரை நட்சத்திரங்களின் குழந்தைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வை பிரபல நடிகை மீனா மற்றும் அவரது மகளும் குழந்தை நட்சத்திரமானா ‘தெறி’ புகழ் பேபி நைனிகா தொடங்கி வைத்தனர்.

அப்பொழுது “மாஸ்டர் அண்ட் பேபி அவார்ட்ஸ் ” இந்தியாவின் முதன்முதல் குழந்தைக்கான ஃபேஷன் அலங்கார காட்சி நிகழ்சசியின் லோகோ மற்றும் வலை தளத்தையும் தொடங்கி வைத்தனர்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கு prayforchennai.org என்ற சமூக தொண்டு நிறுவனத்திற்கு செல்லும்.

‘சைவம்’ புகழ் பேபி ரே, சிறுத்தை புகழ் பேபி ரக்ஷ்னா, ஒளிப்பதிவாளர் RD ராஜசேகரின் குழந்தைகள், தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸின் குழந்தைகள், பாடலாசிரியர் பா. விஜய் குழந்தைகள்.

ஜோடி நம்பர் ஒன புகழ் ஹீத் மற்றும் ரிதுவா ஆகியோர் பங்கேற்றனர். பலவாறு நகரகியாக உடையலங்காரத்தில் அவர்கள் ரேம்ப் வாக் செய்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. இம்மாதிரி போட்டிகள் மேலும் நடை பெறவுள்ளதாகவும் அதன் விவரங்கள் http://masterandbabyawards.com/tn/ வலைதளத்தில் இருக்கும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Meena and Nainika participated in The Master and Baby Awards Fashion Show

More Articles
Follows