விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு லாரன்ஸ் 15 லட்சம் உதவி; நெகிழ்ச்சியில் டிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி ஆசியுடன் பி. வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் லாரன்சுக்கு அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் அளிக்க, அதை அப்படியே கரோனா நிவாரண நிதிக்காக கொடுத்தார் லாரன்ஸ்.

இதன்பின்னர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் தான் நடிக்கவுள்ள ஒரு சம்பளத்திலிருந்து 25 லட்ச ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண தொகையை அளித்துள்ள்ளார் லாரன்ஸ்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் இயக்குனர் டி. ராஜேந்தர் கூறியிருப்பதாவது:

“எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர்.

தொலைநோக்கு சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவித்தொகையை வழங்க ஒரு நிதி திரட்ட திட்டம் தீட்டி வைத்திருந்தோம்.

அந்தத் திட்டத்தை மார்ச் முடிந்து ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தோம். அதன் தொடக்கமாக ஒரு தொகையை வழங்க பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் படம் எடுக்காமல் இருந்த நான் ‘இன்னிசைக் காதலன்’ என்ற படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருந்தேன்.

ஆனால் கரோனா பாதிப்பால், திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டது. நாடெங்கும் ஊரடங்கு என்று கைகள் கட்டப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில் என் நினைவுக்கு வந்தவர் என் நண்பரும் நடிகருமான ராகவா லாரன்ஸ். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்.

இந்நிலையில் எங்கள் சங்கத்தின் நிலை குறித்த என் தர்மசங்கட நிலைமையை எடுத்துரைத்தேன். அவர் உடனே “அண்ணே, உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என்றார். “தம்பி எனக்கு எதுவும் வேண்டாம். என் சங்கத்திலிருக்கும் நலிவடைந்தவர்களுக்காகச் செய்தால் போதும்” என்றேன்.

உடனே ராகவா மனமுவந்து எங்கள் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைத்தார்.

நேற்று நடந்ததை இன்று மறந்துவிடும் இந்த உலகத்தில் கடந்த காலத்தை மறக்காத அந்த கனிந்த உள்ளத்துக்கு நன்றி. அவரின் தர்ம சிந்தனையும், தயாள குணமும் தழைக்கட்டும்.

என் சார்பாகவும் எங்கள் சங்க நிர்வாகிகள் சார்பாகவும் அனைத்து சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றி

நண்பர் ராகவா லாரன்ஸ் போன்ற நல்ல மனிதநேயம் படைத்த நெருங்கிய திரையுலகத்தினரிடம் சங்க நல அறக்கட்டளைக்காக நிதி கேட்டு இருக்கிறேன். அவர்களும் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள்.

நலிவடைந்த விநியோகஸ்தர்களுக்கு கரோனா பாதிப்பு சமயத்தில் உதவுதோடு அல்லாமல் தொலைநோக்குப் பார்வையோடு மாதா மாதம் ஒரு சின்ன உதவித்தொகை வழங்க முயற்சிக்கிறோம்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அல்வா தின்ன ஆசையா: MGR பட இயக்குனருடன் தேவா & யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த புதிய பூமி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வி.சி.குகநாதன்.

இதனையடுத்து இதுவரை 250 படங்களில் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கிட்டதட்ட 55 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வருகிறார்.

மேலும் சில ஆண்டுகள் பெப்சி தலைவராக பணியாற்றியிருக்கிறார் வி.சி.குகநாதன்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.

அல்வா தின்ன ஆசையா என்ற படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி வருகிறாராம்.

புதுமுகங்கள் நாயகன் நாயகியாக நடிக்க யோகிபாபு, வையாபுரி, சிங்கம்புலி, ரவிமரியா, மயில்சாமி, சிங்கமுத்து, மனோபாலா உள்ளிட்ட பிரபல காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள். தேனிசை தென்றல் தேவா இசையமைக்கிறார்.

சாய் சிவா என்பவர் இந்த படத்தை இயக்க கிளாமர் சினி கைடு நிறுவனம் தயாரிக்கிறது.

கொரோனா நிவாரணப் பொருட்களில் தலைவர் ஸ்டிக்கர்..; கடுப்பான கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் அவதிக்குள்ளான மக்களுக்கு நல்லுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் பலரும் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை கொடுத்து உதவி வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் கமல்ஹாசனின் படம் பொறித்த பைகள் இடம் பெற்றுள்ளன. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதுகுறித்து நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில்…

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் நாங்கள் இருக்கிறோம் உதவிட என முன்வந்து, எளிய மக்கள் இந்த ஊரடங்கில் பாதிக்கப்படாமல் காத்திடக் கட்சி பேதமின்றி, நாம் பணி செய்ய வேண்டும் என்கின்ற என் குரலுக்குச் செவி சாய்த்து, தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுடன் இணைந்தும், தனியாகவும் அயராது களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மையத்தினர் அனைவருக்கும் வணக்கம்.

உதவி செய்யும் போது ஊடகங்களை அழைத்துச் சென்று விளம்பரப்படுத்துவதையோ, அல்லது உணவுப் பொருட்களின் மேல் சின்னத்தையோ, தலைவர் படத்தை ஒட்டி விளம்பரப்படுத்துவதையோ மக்கள் நீதி மையம் செய்யாது. உங்களிடம் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதைத் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

வாழ்வாதாரம் நசித்துப் போய், உள்ளம் வெம்பி இருக்கும் எளிய மக்களை இந்தப் புகைப்படம் எடுக்கும் படலம் காயப்படுத்தி விடலாம்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கேரளாவிடம் கற்றுக் கொரோனாவை கொல்லுங்க..- புரொடியூசர் SR பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் முதலில் கொரோனா தொற்று கேரளாவில் தான் கண்டறியப்பட்டது.

அதற்கு முக்கிய காரணம் மலையாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் தான் வசிக்கிறார்கள். அவர்கள் சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியபோது கொரோனா தொற்றி அதிகளவில் பரவியது.

ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா விழிப்புணர்பு மற்றும் உலக சுகாதார துறையினர் பரிந்துரை செய்த வழிகாட்டுதலின்படி கேரளா அரசு நடவடிக்கைகளை சரியான தருணத்தில் எடுத்தது.

கேரள அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு மலையாளிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

கொரோனா தொற்றில் முதல் இடத்தில் இருந்த கேரளா, தற்போது பின்னுக்கு சென்றுவிட்டது.

இப்போதும் சிலர் பாதிப்புக்குள்ளாகியிருந்தாலும் அந்த நிலை உடனே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஜோக்கர், அருவி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த எஸ்ஆர் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கொரோனா குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களும் கேரளாவை பின்பற்றி தங்கள் மாநிலங்களில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்

ஜாஸ்மின் இயக்குனரின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் சார்பாக இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.

தமிழ்ப் புத்தாண்டான இன்று இப்படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் ஜெகன்சாய் வீட்டிலே நடைபெற்றது.
எல்லாத்தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஜெகன்சாய் உருவாக்கியுள்ள இப்படத்தின் கதையில் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முன்னணி டெக்னிஷியன்ஸ் பணியாற்ற இருக்கிறார்கள் அதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது.

ஜெகன்சாய் ஏற்கனவே ‘ஜாஸ்மின்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அப்படம் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு நாட்கள் முடிந்த பின் வெளியாகும்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையை இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆன ஜெகன் சாய் மிகப்பிரம்மாண்டமாக நடத்த நினைத்தார். கொரோனா காரணமாக மிக எளிமையான முறையில் அவரது வீட்டில் நடைபெற்றது. அதைப்பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெகன் சாய் கூறுகையில், “எளிமையில் எண்ணற்ற வலிமை இருக்கிறது என்பார்கள். அந்த வலிமை மக்களை கொரோனாவில் இருந்தும் மீட்டெடுக்கும் தமிழ்சினிமாவும் விட்டதை எல்லாம் வென்றெடுக்கும்” என்று நம்பிக்கையோடு தெரிவித்து படக்குழு சார்பாக அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும் கூறினார்.

மாஸ்டராக இருந்த போதும் இப்போதும்..; ‘மாஸ்டர்’ விஜய்யுடன் உதய்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய்பேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே நட்சத்திர பட்டாளமே நடித்தள்ள நிலையில் நடிகர் உதய்ராஜ் என்பவரும் இதில் நடித்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது விஜய்யுடன் ‘திருமலை’ படத்தில் மெக்கானிக்காக நடித்துள்ளார்.

மாஸ்டராக தன் சினிமா கேரியரை தொடங்கிய இவர் தற்போது மாஸ்டர் விஜய்யுடன் நடித்துள்ளதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், ”தளபதி விஜய் அண்ணாவுடன் இணைந்து 17 வருடங்களுக்கு பிறகு மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன். அப்போ திருமலை, இப்போ மாஸ்டர். லோகேஷ் கனகராஜிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows