சூப்பர் ஸ்டார் வேண்டாம். அம்மா போதும்… லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி சமீப காலமாகவே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதாக சொல்லி கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்கு தெரியாது.

ஆனால் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் என் பெயருக்கு முன்னாள் “ மக்கள் சூப்பர் ஸ்டார் “ என்று பட்டதை வழங்கி இருக்கிறார்.

அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி. அவர் அன்பிற்கு நன்றி. இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே.

எனக்கு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர் தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்தி படுத்திவிட முடியாது.

அதனால் கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதனால் இனி என் பெயருக்கு முன்னாள் பட்டமாக கண்மணி ராகவா லாரன்ஸ் என்று வைத்துக்கொள்கிறேன் என்றார் K. ராகவா லாரன்ஸ்.

அஜித்துடன் மோதலை தவிர்ப்பாரா சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் நயன்தாரா, ஸ்நேகாவுடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என பூஜை போட்ட நாள் அன்றே அறிவித்தனர்.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிகிறது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இரண்டு படங்களும் மோத வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

நிச்சயம் அஜித் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் இருக்கும் என்பதால் இந்த மோதலை சிவகார்த்திகேயன் தவிர்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினி-மம்மூட்டி பாணியில் இணையும் விஜய்-விக்ரம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யோடு அஜித் நடித்திருக்கிறார். (ராஜாவின் பார்வையிலே.)

அஜித்தோடு விக்ரம் நடித்திருக்கிறார். (உல்லாசம்)

விக்ரமுடன் சூர்யா நடித்திருக்கிறார். (பிதாமகன்)

சூர்யாவோடு விஜய் நடித்திருக்கிறார். (நேருக்கு நேர், ப்ரெண்ட்ஸ்)

ஆனால் விஜய்யும் விக்ரமும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை.

இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தபோதிலும் அந்த வாய்ப்பு இதுவரை அமையவில்லை.

ஆனால் தற்போது அமைய உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்தை தொடந்து விரைவில் தன் அடுத்த படத்தை தொடங்கவிருக்கிறாராம் மணிரத்னம்.

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய் மற்றும் விக்ரம் இணைந்து நடிக்கலாம் என கூறப்படுகிறது.

ஒருவேளை இப்படி அமையுமானால் ரஜினி-மம்மூட்டி நடித்து உருவான தளபதி பாணியில் இது மெகா எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று சொல்லலாம்.

ஓபிஎஸ்க்கு ஆதரவளித்த தனுஷ்-விஜய் ஆண்டனியின் பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதே நாளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் சென்னையில் நடைபெற்றது.

இதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கை பாடல்கள் ஒலிக்கப்பட்டது.

இவற்றுடன் தனுஷ் பாடி நடித்த ‘அம்மா அம்மா நீ என் அம்மா’ (விஐபி) மற்றும் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா’ என்ற பாடல்களும் ஒலிக்கப்பட்டது.

Dhanush and Vijay antony songs in OPS fasting on Womens day

பெற்றோரை பாட வைத்து பெருமிதம் அடைந்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார்.

இவரது இசையில் அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு பாடலில் தன் பெற்றோர் டி.ராஜேந்தர்-உஷா ஆகியோரை பாடவைத்துள்ளார்.

தன் பெற்றோரை தன் இசையில் பாட வைத்துள்ளதால் சிம்பு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

‘வா முனிம்மா வா’ என்று இப்பாடல் தொடங்குகிறது.

இவர்கள் இல்லாமல் புதிதாக இரண்டு பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சிம்பு.

பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணன் மற்றும் கீர்த்தனா ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை சேதுராமன் இயக்கி வருகிறார்.

T Rajendar and his wife Usha sung song in their Son Simbus Music

‘நீங்க ஜீனியஸ்…’ யாரை இப்படி பாராட்டினார் சௌந்தர்யா ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து முதன்முறையாக இயக்கியுள்ள படம் பவர் பாண்டி.

ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங், ரேவதி நடித்துள்ள இப்படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது.

இப்படத்தின் பாடல்களை தனுஷ், செல்வராகவன், ராஜீமுருகன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த பாடல்களை கேட்ட சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினியும் இசையமைப்பாளர் சீன் ரோல்டானை நீங்க ஜீனியஸ் என்று பாராட்டியுள்ளார்.

சௌந்தர்யா ரஜினி இயக்கும் தனுஷின் விஐபி 2 படத்திற்கும் சீன ரோல்டானே இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Soundharya Rajini congratulated Sean Roldan for Power Pandi Songs

soundarya rajnikanth‏ @soundaryaarajni 21m21 minutes ago
soundarya rajnikanth Retweeted Sean Roldan
You are a genius Sean

More Articles
Follows