கபாலி குமுதவள்ளியின் மகிழ்ச்சியும்… மன்னிப்பும்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தில் ரஜினிகாந்த் இளமையான தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என இரண்டிலும் அசத்தியிருந்தார்.

இவருக்கு கிடைத்த வரவேற்பை போலவே இவரது மனைவியாக நடித்த ராதிகா ஆப்தேவுக்கும் கிடைத்தது.

குமுதவள்ளி கேரக்டரில் தாய்மார்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளார்.

ஆனால் கபாலி பட புரோமோஷன் நிகழ்ச்சிகள் இவர் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது…

“ரஜினி சாருடன் நடித்ததை எப்போதும் என் வாழ்வில் மறக்க முடியாது. ‘கபாலி’ படத்தின் சாதனை செய்திகள் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

‘கோல்’ என்ற இந்தி படத்தில் பிஸியாக இருப்பதால் ‘கபாலி’ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என கூறினார்.

மீண்டும் ரஜினியை இழுக்கும் கவர்னர் கிரண் பேடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக சில மாதங்களுக்கு முன்பு கிரண் பேடி நியமிக்கப்பட்டார்.

இவரின் பதவி ஏற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இவர் பேசியதாவது…

“புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

புதுச்சேரி மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினிகாந்தை விளம்பர தூதராக நியமிக்க விரும்புகிறோம்.

ரஜினிகாந்தின் வேண்டுகோள்களும், செய்திகளும் புதுச்சேரியை ஆரோக்கியமானதாக மாற்றும். என நம்புகிறோம்” என்றார்.

கூட்டணி குழப்பங்கள்: விஜய்-ரஞ்சித்… சூர்யா-முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதனையடுத்து கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் இதனிடையில் முத்தையா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவின் தந்தையாக ராஜ்கிரண் நடிக்கிறார்.

சூர்யா கூட்டணி மாறிபோனதால் விஜய் நடிக்கவுள்ள படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திடீரென கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சிம்புவுடன் நடிக்க மறுத்த ஹன்சிகா-கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதற்காக தன் உடலை எடையை ஏற்றி வித்தியாசமான முறையில் காட்சியளித்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் சிம்பு மூன்று வேடம் ஏற்பதால் 3 நாயகிகளை தேடி வருகின்றனர்.

ஒரு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.

மற்ற கேரக்டர்களுக்கு ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்பட்டது.

ஆனால் இப்படத்தில் நடிக்க இருவரும் மறுத்துவிட்டார்களாம்.

எனவே மீண்டும் தேடுதல் வேட்டை தொடரும் என தெரிகிறது.

ஏகே 57 படத்தில் அஜித்துடன் மூன்று நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் சிவா இயக்கும் ஏகே 57 படப்பிடிப்பு விரைவில் பல்கேரியா நாட்டில் தொடங்கவுள்ளது.

அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜீவாவுடன் கவலை வேண்டாம் படப்பிடிப்பை முடித்துவிட்ட காஜல் அஜித்துடன் நடிக்க வெளிநாடு செல்கிறார்.

இவர் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் அக்ஷராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மூன்றாவதாக மற்றொரு நாயகியும் இப்படத்தில் நடிக்கிறாராம்.

நாயகி தேர்வானவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

‘கத்தி’ மீது வழக்கு தொடுத்தவர் அடுத்து ‘குத்துச் சண்டை’ போடுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கதை என்னுடையது என மீஞ்சூர் கோபி வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் தன் அடுத்த படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார் இவர்.

கலெக்டராக நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார் இவர்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, தனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து களத்தில் இறங்கியிருக்கிறார்.

இதில் வடசென்னை பகுதியில் பாக்ஸிங் பாப்புலர் ஆனது எப்படி? என்பதை கதைக்களமாக கொண்டு உள்ளார்.

இதில் ஹீரோ வேடத்தில் நடிக்க வைக்க, தலித் இளைஞர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘குத்துச்சண்டை’ அல்லது ‘குத்துச்சண்டை பரம்பரை’ என பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறார் மீஞ்சூர் கோபி.

More Articles
Follows