தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பை ஆங்கிலப்படம் என மாற்றியுள்ளனர்.
ரிக்கோ இசையமைத்துள்ள இப்படத்தில் ராம்கி முக்கிய வேடம் ஏற்று நடிக்க, சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர் நடித்துள்ளனர்.
இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ராதாரவி, ஆர்.வி. உதயகுமார், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ், இயக்குனர் பேரரசு, சிங்கமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ராதாரவி பேசும்போது….
“நான் ராம்கியுடன் சில படங்களில் நடித்துள்ளேன். மிகச் சிறந்த நடிகர். அன்று பார்த்த போலவே இப்போதும் இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ரஜினியை பார்த்து வியப்படைவேன். அவர் ஒருவர்தான் முடி நரைத்தாலும் இளமையாக இருப்பார்.
நாம் எல்லாம் அப்படி வெளியில் போனால், என்ன வயசாயிடுச்சா? என்றுதான் கேட்பார்கள்.
ரஜினிக்கு பிறகு அஜித், அதே இளமையோடு காட்சியளிக்கிறார். இப்போது ராம்கியும் அப்படிதான் இருக்கிறார்.
இனிமேல்தான் நிரோஷா உஷாராக இருக்க வேண்டும்” என்று கலகலப்பாக பேசினார் ராதாரவி.
