முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தேர்தலின் புதிய அணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தலைவர் பதவிக்கு ஐந்து அணிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளார்கள்.

இந்நிலையில் ஒரு அணியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும், ராதாகிருஷ்ணன் அவர்கள் அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அதன் விரவம் வருமாறு…

குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு, சில வருடங்களாக, வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையை, தயாரிப்பாளர்களுக்கு வழங்ககோரியும், திருட்டு வீ.சி.டி / கேபிள் டி.வி யில் அனுமதி பெறாமல் ஒளிபரப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தயாரிப்பாளரும், நடிகருமான, ஜே.கே. ரித்தீஷ் அவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிடும், ராதாகிருஷ்ணன், செயலாளர் பதவிக்கு போட்டியிடும், சிவசக்தி பாண்டியன், ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும், கே. ராஜன், சுரேஷ் காமாட்சி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும், விஐய முரளியும், மற்றும் தயாரிப்பாளர் சௌந்தர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர்கள் அனைவரும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் மனு அளித்தனர்.

மாண்புமிகு முதல்வர் அவர்களும் ஆவண செய்வதாக கூறியுள்ளார்கள். ஆக தமிழக அரசுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்திருக்கிறது.

தயாரிப்பாளர்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறமுடியும். என்று தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னே ஆக்ஷனில் இறங்கிய இராதாகிருஷ்ணன் தலைமையிலான “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி”க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ரஜினி படத்தளத்திலிருந்து எமிஜாக்சன் ‘லைவ் ஆப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதராசப்பட்டினத்தில் அறிமுகமாகி இன்று ரஜினிகாந்த்துடன் நடிக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் முன்னேறியுள்ளார் எமிஜாக்சன்.

தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினி, அக்சய்குமார் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தன்னுடைய பெயரில் உருவாக்கியுள்ள ஆப் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.

அதனை 2.0 படத்தளத்திலிருந்து, அவர் வெளியிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Amy Jackson live app launch from the sets of 2pointO

Amy Jackson‏Verified account @iamAmyJackson 1h1 hour ago
My OFFICIAL app is here! Come and be a part of my world with me http://smarturl.it/amyjackson – Going LIVE from the set of 2.0 on my app tonight

‘ஜோதிகாவுடன் நடிப்பது பெரிய பலம்…’ ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையமைத்து பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம் நாச்சியார்.

ஜோதிகா மற்றும் ஜி.வி. பிரகாஷ் இதில் நடிக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் தன் கேரக்டர் குறித்து ஜிவி. பிரகாஷ் கூறும்போது…

ஜோதிகா ஒரு பாசிட்டிவ்வான நபர்.

அவரைப் போன்ற ஒரு நபருடன் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தெரிவித்துள்ளார்.

GV Prakash talks about acting with Jyothika in Naachiyaar

சட்ட வல்லுனர்களுடன் கமல் ஆலோசனை; அரசியல் உலகில் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் அண்மைகாலமாக தன் ட்விட்டரில் சமுமூகம் சார்ந்த கருத்துக்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார்.

இதனால் மக்களிடையே ஆதரவும், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இதனால் பாஜகவின் முக்கிய பிரமுகர் சுப்ரமணிய சுவாமிக்கும் கமலுக்கு இடையே ‘பொறுக்கி’ என்ற வார்த்தை போரே நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கமல்ஹாசன் நாளை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது, சினிமா, பொது விஷயங்கள் பற்றியும், தன் மீதான இணையத்தள விமர்சனங்களும் பற்றியும் கலந்து பேச உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஒருவேளை, இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சினிமா உலகிலும் அரசியல் உலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kamalhassan meeting with Leading Lawyers

பெண் கொடுமைக்கு எதிரான படம் ”தமிழனானேன்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் மெரினாவில் நடந்து முடிந்த தமிழ் இளைஞர்களின் ‘தைப்புரட்சி’ பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் அவர்களின் எழுச்சியை உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.

அந்தக் காலத் தமிழர்கள் பகை முடிக்கும் வீரத்திலும் பாசம் காட்டும் ஈரத்திலும் சிறந்து விளங்கினார்கள்.

ஆனால் இன்று தமிழர்களிடம் ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லாத நிலை உள்ளது.

தமிழனின் தவறான மனப்போக்கால் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன.

இப்போது நிலவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதித்தமிழன் எதிர் கொண்டால் எப்படிக் கையாள்வான்? தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ‘தமிழனானேன் ‘.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.

கோவைக்காரரான இவருக்கு உலக தற்காப்புக் கலைகளில் ஆர்வம் . குறிப்பாக ஒரு காலத்தில் புகழ் பெற்று இருந்து பிற்காலத்தில் காணாமல் போய் விட்ட ஆதித்தமிழனின் தற்காப்புக் கலைகள் மீது தனி ஈடுபாடு உண்டு.

அது தொடர்பான தேடலில் இறங்கிய இவருக்கு ‘அவதார் ‘,’அயர்ன் மேன்’.

ஹாரி பாட்டர் ‘ போன்ற ஹாலிவுட் படங்களில் அனிமேட்டராக பணிபுரிந்த சாமி மாண்ட்ரேக் பெசி போன்ற வெளிநாட்டு சினிமா கலைஞர்களின் நட்பு கிடைத்து இருக்கிறது.

அவர்கள் மூலம் சினிமாவில் ஆர்வம் வந்த இவருக்கு, ஆதித் தமிழனின் தற்காப்புக் கலையை மையமாக வைத்து நாம் ஏன் ஒரு திரைப்படம் எடுக்கக் கூடாது என்கிற எண்ணம் வரவே அது விரிவடைந்து ‘தமிழனானேன்.க ‘ படமாக வளர்ந்து நிற்கிறது.

ஒரு எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சினிமா மீதுள்ள காதலில் இப்படி ஒரு முழுப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்.

இப்படத்தில் ஆதித் தமிழரின் தற்காப்புக் கலைகளான சிலம்பம் , குத்து வரிசை, வர்மம் , பிடி வரிசை
போன்றவை மட்டுமல்ல குங்பூ, கராத்தே போன்ற உலகின் சிறந்த 8 தற்காப்புக்கலைகளும் காட்டப்பட்டுள்ளன .

இப்படத்தில் சதீஷ் ராமகிருஷ்ணன், வந்தனா வரதராஜன். சரவணன் ராதாகிருஷ்ணன், பிரித்தா, திருலோகசந்தர், வெங்கட், அத்விக், ஷக்தி, ஜான் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஹாலிவுட் அனிமேட்டர் சாமி மாண்ட்ரேக் பெசி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல அவர் படத்திற்கு ஹாலிவுட் தொழில் நுட்பப் பணி ஒத்துழைப்பையும் வழங்கி யிருக்கிறார்.

படத்திற்கு ஒளிப்பதிவு – விக்னேஷ் அருண் , ரகு ராமையா, இசை – வினோத் சுப்ரமணியம் , தயாரிப்பு _ வெற்றித்தமிழ் உருவாக்கம் .

படம் பற்றி இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணன் பேசும்போது, “இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை.

நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தில் பயன் படுத்தப் பட்டுள்ளன.

படம் மூன்று வித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண மசாலாப்படம் போலத் தெரியும்.

இன்னொரு அடுக்கு என்பது ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவற விட்டாலும் படம் புரியாது.

மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு யாருக்கும் டூப் போடப்படவில்லை. கயிறுகள், பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை.

எல்லாமே அசல் காட்சிகள் தான். “என்கிறார்.

நதி மூலம் தேடும் முயற்சியாக உருவாகியுள்ள ‘தமிழனானேன் ‘ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Tamizhananean movie news updates

அரை நிர்வாண படம் வெளியானது குறித்து என்ன சொல்கிறார் ‘ரம்’ சஞ்சிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூது கவ்வும், ரம் மற்றும் என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்துள்ளவர் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்துள்ள எங்கிட்ட மோதாதே படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவரின் அரை நிர்வாண வீடியோ படம் ஒன்று பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.

இதுபற்றி சஞ்சிதா ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளதாவது…

அந்த படத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை. அந்த வீடியோவில் இருப்பது நானில்லை என்று ஒரு வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

Singer Suchitra tweets nude video of Sanchita Shetty

More Articles
Follows