ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

புஷ்பா: தி ரூல் படத்தின் பிரமாண்ட டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி,

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது.

இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது.

நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் அசாதாரணமான, அட்டகாசமான மற்றும் பவர்-பேக்ட் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த ‘புஷ்பா: தி ரூல்’ படம் முக்கியமான ஒன்று.

நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.

‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் புஷ்பா கம்பீரத்துடன் ரசிகர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.

Pushpa The Rule teaser will be released on Allu Arjun Birthday

NEVER ESCAPE HIGH LIGHTS : இங்கிலீஷ் சாங்.; மொட்டை அடித்த ராபர்ட் மாஸ்டர்

NEVER ESCAPE HIGH LIGHTS : இங்கிலீஷ் சாங்.; மொட்டை அடித்த ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NEVER ESCAPE HIGH LIGHTS : இங்கிலீஷ் சாங்.; மொட்டை அடித்த ராபர்ட் மாஸ்டர்

நெவர் எஸ்கேப் பட இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில், புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “நெவர் எஸ்கேப்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஆல்பர்ட் பேசியதாவது…

சினிமாவிற்கு இப்போது தான் அறிமுகமாகியுள்ளேன். இந்தப்படம் ஆரம்பித்த போது மொத்த டீமுக்கும் 25 வயது கூட நிரம்பவில்லை, ஆனால் 50 வயது ஆனவர்களுக்கு இருக்கும் அனுபவம் அவர்களிடம் இருக்கிறது.

இவர்கள் சொன்ன கதையே படு வித்தியாசமாக இருந்தது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோரும் நண்பர்கள். படத்தை வித்தியாசமாக தந்துள்ளார்கள். ராபர்ட் மாஸ்டர் அருமையான நடிப்பைத் தந்துள்ளார். இப்படம் ஹாரர், சைக்கோ, மிஸ்டரி மூன்றும் கலந்து வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

இப்படத்திற்காக புதுமையான ஒரு விசயத்தை செய்துள்ளோம். படத்தை திரையரங்கில் பார்ப்பவர்கள், எங்களின் 10 கேள்விகளுக்குப் பதிலளித்தால், பதிலளித்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, வெற்றி பெறுபவருக்கு 1 லட்சம் பரிசு தரவுள்ளோம். என்பதை தெரிவித்து கொள்கிறோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்.

சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செழியன் பேசியதாவது…
படத்தின் தலைப்பிலேயே கவர்ந்து விட்டார்கள். நெவர் எஸ்கேப். தவறு செய்தால் அவர்கள் நெவர் எஸ்கேப் அது தான் கதை என்றார் தயாரிப்பாளர். சுவாரஸ்யமான கதையை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் சொன்ன 1 லட்சம் பரிசு, நல்ல ஐடியா! அதை நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செய்வதாக இருந்தோம், ஆனால் இவர் முந்திக்கொண்டார். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் பேசியதாவது…

யூடுயூப் வீடியோவிலிருந்து நிறைய பேர் சினிமாவிற்கு வந்துள்ளார்கள் ஆனால் ஒரு டெக்னீஷீயன் என்ற வகையில் நான் தான் முதல் ஆள். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இனி. வீட்டில் என்னை நம்புவார்கள். யூடுயூபிலிருந்து வரும் போது நிறைய தயக்கம் இருந்தது. ஏனென்றால் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, நிறைய அனுபவம் தேவை. நாங்கள் அனைவரும் நண்பர்கள். அதனால் தயக்கம் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. அனைவரும் ஒன்றாக இணைந்து படத்திற்காக உழைத்திருக்கிறோம். ராபர்ட் மாஸ்டரை வைத்து ஒரு பாடல் எடுத்தோம் நல்ல அனுபவம். படம் உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சரண் குமார் பேசியதாவது..

எனக்கு இப்படம் தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் என்னுடைய முதல் ஹாரர் படம், ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகன் பிரித்வி பேசியதாவது…

நாஞ்சில் நளினி அவர்களின் பேரன் நான். என்னுடைய முதல் படம் கம்பெனி. அந்தப்படத்தில் நடித்ததைப் பார்த்து, இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ஆல்பர்ட் சாருக்கும், இயக்குநருக்கும் நன்றி. மிக மகிழ்ச்சியோடு வேலைபார்த்த படம் மிக நன்றாக வந்துள்ளது. ராபர்ட் மாஸ்டர் நிறைய சொல்லித்தந்தார்.

படத்தின் இயக்குநர் திறமையானவர், மிக சூப்பரான திரைக்கதை, கண்டிப்பாக உங்களுக்கு படம் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அரவிந்த் ராஜ் பேசியதாவது..
இது தான் என் முதல் மேடை. தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. இந்தப்படத்திற்காக நிறைய தயாரிப்பாளர்களை அணுகினோம். இறுதியில் ஆல்பர்ட் சார் கதை கேட்டவுடனே ஒத்துக்கொண்டார்.

இப்படம் ஒரு வித்தியாசமான ஹாரர் திரில்லர், ஹாரரில் காமெடி, மிஸ்டரி என நிறைய கதைகள் வருகிறது ஆனால் இந்தப்படம் வித்தியாசமாக இருக்கும். கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் என் நண்பர்கள், படத்தில் ஒன்றாக இணைந்து உழைத்துள்ளோம். ராபர்ட் மாஸ்டர் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்துள்ளார். மிக நல்ல வேடம் செய்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் உவைஸ் கான் பேசியதாவது…

இது எனக்கு முதல் படம், வாய்ப்பு தந்த ஆல்பர்ட் சார், இயக்குநர் அரவிந்திற்கு நன்றி. ராபர்ட் மாஸ்டர் உடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. மிக சந்தோசமான அனுபவமாக இருந்தது. இப்படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். எல்லோரும் புதுமுகங்கள், உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை ஹர்ஷினி பேசியதாவது…

என்னோட டீமுக்கு முதல் நன்றி. இப்படத்தை எடுத்துக் கொண்டு வர தயாரிபபாளர், இயக்குநர், ராபர்ட் மாஸ்டர் என அனைவரும் உழைத்துள்ளனர். ஒன்றரை வருடமாக பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இளைஞர்கள் மிக திறமையானவர்கள், எனக்கு முதல் படம் தான் எனக்கு எல்லாம் சொல்லித்தந்து நன்றாக பார்த்துக்கொண்டார்கள். ஒரு நல்ல படம். ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர், நடன இயக்குநர் ராபர்ட் பேசியதாவது…

இப்படத்தின் கதை சொன்ன போது, யார் சார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள்.. நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் பர்மிசன் வாங்கி இப்படத்தில் நடித்தேன்.

அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், படம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

பல ஹாலிவுட் படங்கள் தரும், இதயம் அதிர வைக்கும் அதிரடியான ஹாரர் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் நெவர் எஸ்கேப் படம் உருவாகியுள்ளது.

ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க நினைத்து வேறொரு ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் 7 நண்பர்கள், அங்கு அவர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் படத்தின் மையம்.

பல பிரபல யூடுயூப் வீடியோ சீரிஸ்களில் பணியாற்றியுள்ள இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ், ரசிகனைச் சிந்திக்க வைக்கும் வகையில், அடுத்தடுத்த ஆச்சரியங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும் புதுமையான திரைக்கதையில், ஒரு முழுமையான ஹாரர் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் .

இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மைப்பாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

இவர்களுடன் கவி J சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக சென்னை வேலூர் பகுதியை ஒட்டிய ஆரணியில் படமாக்கப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான வகையில் இப்படத்தின் மூன்று பாடல்களில் ஒரு பாடல், முழுக்க ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். அம்முச்சி முதலான பல நக்கலைட்ஸ் சீரிஸ்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் குமார் SJ இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

*தொழில் நுட்ப குழு விபரம்*

எழுத்து இயக்கம் – டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ்
ஒளிப்பதிவு – சந்தோஷ் குமார் SJ
எடிட்டர் – குரு பிரதீப்
இசை – சரண் குமார்
கலை இயக்குனர் – முத்து
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திரு முருகன்.

Robert Master in new avatar Never escape movie

அனைவருக்கும் பிடிச்சவர் விஜய் ஆண்டனி.. டாப் சாய்ஸ் அவர்தான்.. – ‘ரோமியோ’ டைரக்டர் விநாயக்

அனைவருக்கும் பிடிச்சவர் விஜய் ஆண்டனி.. டாப் சாய்ஸ் அவர்தான்.. – ‘ரோமியோ’ டைரக்டர் விநாயக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைவருக்கும் பிடிச்சவர் விஜய் ஆண்டனி.. டாப் சாய்ஸ் அவர்தான்.. – ‘ரோமியோ’ டைரக்டர் விநாயக்

விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகிழ்ச்சியான ரொமாண்டிக்- காமெடி படம் ‘ரோமியோ’.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பகிர்ந்து கொண்டதாவது..

“ஒவ்வொரு இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி உடடன் பணிபுரிய வேண்டும் என்று கனவு இருக்கும். ஏனென்றால் அவர் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஹீரோ. தனித்துவமான ஜானர் மற்றும் புதிய கதைக்களங்களை முயற்சி செய்ய யாராவது விரும்பினால் அவர்தான் டாப் சாய்ஸாக இருப்பார்.

நான் ‘ரோமியோ’ படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் ​​விஜய் ஆண்டனி அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். ஆனால், கதை அவருக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

ஏனெனில், ரொமாண்டிக் – காமெடி ஜானரில் இதுவரை அவர் நடித்ததில்லை. ஆனால், அவர் கதையை கேட்டு, ரசித்து உடனடியாக படத்தைத் தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சீனியர் நடிகர்களுடன் பணியாற்றுவது உண்மையில் பெரிய சவாலாக இருந்தது. நான் புதுமுகம் என்பதால் தலைவாசல் விஜய், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் போன்ற மூத்த நடிகர்கள் எனது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனாலும், படப்பிடிப்பில் அவர்கள் ஆதரவாக இருந்தனர். அவர்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பால் காட்சிகளை உண்மையாகவே மெருகேற்றினார்கள். மிருணாளினி ரவி இந்த பாத்திரத்திற்கு சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.

‘ரோமியோ’ படம் நகைச்சுவை, ரொமான்ஸ், எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷன் கலந்த ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். ‘ரோமியோ’ படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் சிரிப்புடனும் முழு திருப்தியுடனும் தியேட்டர்களை விட்டு வெளியேறுவார்கள்” என்றார்.

‘ரோமியோ’ படத்தை விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கி இருக்க, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

முதன்மை பாத்திரங்களில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்திருக்க இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Vijay Antony is favorite for all says Romeo director Vinayak

சம்மர் வந்தாச்சு.. நம்ம குட்டி ஸ்டார் Sofa Boy வந்தாச்சு.. : ஸ்கூல் லீவு விட்டாச்சு..

சம்மர் வந்தாச்சு.. நம்ம குட்டி ஸ்டார் Sofa Boy வந்தாச்சு.. : ஸ்கூல் லீவு விட்டாச்சு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சம்மர் வந்தாச்சு.. நம்ம குட்டி ஸ்டார் Sofa Boy வந்தாச்சு.. : ஸ்கூல் லீவு விட்டாச்சு..

Sofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல்,

Bereadymusic தயாரிப்பில், சமீபத்திய சென்ஷேசன், குட்டி ஸ்டார் Sofa Boy நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க ஃபேமஸானவர் குட்டி ஸ்டார் Sofa Boy.

கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய Sofa விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.

தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீனா இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் Bereadymusic நிறுவனம், Sofa Boy நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், சார்ட்பஸ்டரில் இடம்பிடித்து வைரலாகி வருகிறது.

Bereadymusic தயாரித்துள்ள இந்த வீடியோ ஆல்பம் பாடலை எழுதி இசையமைத்துள்ளார், இசையமைப்பாளர் சுதர்ஷன். பல வெற்றிபெற்ற ஆல்பம் பாடல்களை உருவாக்கிய டோங்லி ஜம்போ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். பல டிரெண்டிங் ஆல்பம் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ள நடன இயக்குநர் ரிச்சி ரிச்சர்ட்ஸன் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

இப்பாடலை இங்கே ரசிக்கலாம்
லிங்க் : https://bit.ly/4adhGjH

School Leave Vittachu album makes record

சினிமாவின் 31 கிராஃப்ட்டுகளை கற்று ஒரே ஆளாக லாவண்யா இயக்கி நடித்த ‘பேய் கொட்டு’

சினிமாவின் 31 கிராஃப்ட்டுகளை கற்று ஒரே ஆளாக லாவண்யா இயக்கி நடித்த ‘பேய் கொட்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவின் 31 கிராஃப்ட்டுகளை கற்று ஒரே ஆளாக லாவண்யா இயக்கி நடித்த ‘பேய் கொட்டு’

தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் கற்று ‘பேய் கொட்டு’ (PEI KOTTU) படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் S.லாவண்யா (Director S. Lavanya)

தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. இதுவரை தமிழ் திரையுலகில் ‘அஷ்டவதானி’, ‘தசாவதானி’ போன்ற சாதனையாளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

முதன்முறையாக திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, ‘பேய் கொட்டு'(PEI KOTTU)எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான லாவண்யா.

இதனுடன் சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில் சுமந்து உருவாக்கி இருக்கிறேன். மொத்தம் 31 துறைகளில் இப்படத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேய் கொட்டு’ எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். லாவண்யா- பி. வசந்த் -ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் (OM SAI PRODUCTIONS) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லாவண்யா(S. Lavanya) தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்..

, ” சுயாதீன திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன்.

இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், ஃபைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எஃப் எக்ஸ், வி எஃப் எக்ஸ், எஸ் எஃப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன்… ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்று, ‘பேய் கொட்டு’ எனும் இந்த ஹாரர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

‘பேய் கொட்டு’ என்பது தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா… அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது. ” என்றார்.

இதனிடையே சுயாதீன திரைப்பட கலைஞர் ஒருவர் திரையுலகின் 31 கிராஃப்ட்டுகளையும் கற்றுக்கொண்டு, ஒற்றை ஆளாக முழு நீள திரைப்படத்தை உருவாக்கி இருப்பது தமிழ் திரை உலகில் முதன்முறை என்பதும், இத்தகைய முயற்சி திரையுலகினரையும், ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்பதும், ‘பேய் கொட்டு’ எனும் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு லாவண்யா எனும் பெண்மணியின் சாதனை முயற்சியாக பார்ப்பதால் இதற்கான வெற்றி உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1.BOOK OF WORLD RECORDS USA (America)

2.WORLD WIDE BOOK OF RECORDS, (UK)

3.WORLD ACHIEVERS BOOK (UK)

4.INFLUENCER BOOK OF WORLD RECORDS(UK)

5.INDIA’SWORLDRECORDS(INDIA)

6.UNICORN WORLD RECORDS (UK)

7.KALAM’S WORLD RECORD

8.SIGARAM AWARDS 2023 from Director k.Bakyaraj sir

9.LONDON BOOK OF WORLD RECORDS for covering31 departmens
(3 Awards)(LONDON)

10.LONDON BOOK OF WORLD RECORDS for BEST DIRECTOR & ACTOR

11.LONDON BOOK OF WORLD RECORDS for BEST MUSIC DIRECTOR & PLAYBACK SINGER

Lavanya learned 31 crafts of cinema and made Pei Kottu

SAAMANIYAN ரஜினியால் 4 கோடி நஷ்டம்..- RV உதயகுமார்.; ராமராஜனை பார்த்து ரஜினி பயந்தார்.. – KS. ரவிக்குமார்

SAAMANIYAN ரஜினியால் 4 கோடி நஷ்டம்..- RV உதயகுமார்.; ராமராஜனை பார்த்து ரஜினி பயந்தார்.. – KS. ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAAMANIYAN ரஜினியால் 4 கோடி நஷ்டம்..- RV உதயகுமார்.; ராமராஜனை பார்த்து ரஜினி பயந்தார்.. – KS. ரவிக்குமார்

ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் படமாக ‘சாமானியன்’ இருக்கும் ராமராஜன் பெருமிதம், ராமராஜன் இருக்கார்.. பாட்டு இல்லையா? ; சாமானியன் இயக்குநர் மீது இளையராஜா கோபம்

நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்

தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார்.

கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசும்போது..

“ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து, நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார்.

நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்சன் சொன்னது ராமராஜனுக்கு தான்.

ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன்.

அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார்.

நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம்.

இந்த படத்தில் நடிக்க இயக்குநர் ராகேஷ் வந்து அழைத்தபோது ராமராஜன் இருக்கிறார் என்றால் நான் ஒரு நாள் வந்து போகும் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க தயார் என்று கூறி விட்டேன். அவர் ஏன் இப்படி நடக்கிறார், இருக்கிறார் என்று யாரும் அவரை தவறாக நினைக்காதீர்கள். அந்த விபத்திற்கு பிறகு தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டது.

அவர் இப்போது நம்முடன் இருக்கிறாரே என்றால் அது அந்த ஆண்டவனின் அருள் தான். அவருடன் காரில் சென்றவர்கள் எல்லாம் விபத்தில் இறந்துவிட கடவுள் அருளால் உயிர் பிழைத்த அவர். இன்று மீண்டு வந்து மீண்டும் கதாநாயகனாக இளையராஜாவின் இசையில் பாடுகிறார் என்றால் அதுதான் இறைவனின் அருள்.

இந்த நிகழ்விற்கு இளையராஜா வரவில்லை.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் வீட்டிலும் சில நாட்களுக்கு முன் சோக நிகழ்வு நடந்தது. பரவாயில்லை… ராமராஜனின் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார் என்பதால் அப்போது பார்த்துக் கொள்வோம்.

இளையராஜாவுடன் நான் அவ்வளவு நெருங்கி பழகியது இல்லை என்றாலும் நான் ‘ராஜா ராஜா தான்’ படத்தில் பணியாற்றிய போது அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஏவிஎம் தயாரிப்பில் சக்திவேல் என்கிற படத்தை இயக்கியபோது அதற்கு இளையராஜா தான் இசை அமைத்தார். அப்போது ஒரு பாடல் இதுபோல வேண்டும் என நான் உதாரணமாக சொல்லும் போது என்னுடைய முந்தைய படமான புருஷ லட்சணம் படத்தில் இருந்து கோலவிழியம்மா என்கிற சாமி பாடலை பாடிக் காட்டினேன்.

அதன் பிறகு வெளியே வந்ததும் ஏவிஎம் சரவணன் என்னை அழைத்து அது தேவா சார் பாட்டு. அதை ஏன் இளையராஜாவிடம் சொன்னாய், இருவரும் போட்டியாளர்களாச்சே என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டார்.

அதன் பிறகு மதியம் அதேபோன்று இன்னொரு பாடலுக்காக அமர்ந்த போது இதற்கு என்ன பாடல் இன்ஸ்பிரேஷனாக சொல்லப் போகிறாய் என்று ராஜா சார் கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ராமராஜன் சார் தான் ஞாபகம் வந்தது.

உடனே மாங்குயிலே பூங்குயிலே போல ஒரு பாடல் வேண்டுமென கேட்டேன். அப்படித்தான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ என்று ஒரு பாடலை போட்டு தந்தார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் ஆகி இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

என்னுடைய வாழ்க்கையில் அந்தந்த சமயங்களில் நடக்கும் சம்பவங்களில் எல்லாமே ஒருவர் உள்ளே வருவார்.. அவர் தான் ராமர்.. ராமராஜன்” என்றார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது..

“ஒரு விருது வழங்கும் விழாவில் நானும் ராமராஜன் அண்ணனும் ஒன்றாக கலந்து கொண்டோம். எனக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது யார் வழங்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியாத நிலையில் அவர் கையாலேயே அந்த விருதை பெற்றேன். அன்று அவர் கலர் கலராக உடை அணிந்ததை கிண்டல் பண்ணி பேசினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அந்த உடையை தான் ட்ரெண்டிங்காக அணிந்து வருகிறார்கள்” என்று பேசினார்.

நடிகை நக்ஸா சரண் பேசும்போது..

“என்னுடைய வாழ்க்கையில் நான் நடித்த முதல் படம் ‘சாமானியன்’. இந்த படத்தில் ராமராஜனின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம். எம் எஸ் பாஸ்ர், ராதாரவி படம் முழுக்க எனக்கு வழிகாட்டியாக இருந்து நடத்தினார்கள். அவர்களுக்கு நன்றி.. இளையராஜா சாரின் பெயரை கேட்டாலே ஒரு பாசிட்டிவான அதிர்வு ஏற்படும். அவருடைய இசையில் நான் என்னுடைய முதல் படத்தில் நடித்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். முதல் படத்தில் மிகவும் அழுத்தமான, ஆழமாக கதாபாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநர் ராகேஷ் மற்றும் தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கு என்னுடைய நன்றி” என்று பேசினார்.

இயக்குநர் சரவண சுப்பையா பேசும்போது..

“தயாரிப்பாளர் மதியழகன் இன்னும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தரும் பட்சத்தில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளராக தொடர்ந்து பயணிப்பார். அதேபோல இயக்குநர் ராகேஷ் திறமையான ஒரு டெக்னீசியன். அவர் இந்த படத்தை எடுத்துக் கொண்ட விதம் ரொம்பவே புதிதாக இருந்தது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் எனக்கு இது நான்காவது படம். ஒரு மேஜிக்கல் அசைவு இல்லாமல் எந்த படமும் என் நடக்காது. 25 வருடங்களுக்குப் பிறகு இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணைந்தது, 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் திரையில் தோன்றுவதற்கு காரணம், 7 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ராகேஷ் மீண்டும் இந்த படத்தை இயக்க காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் தான். ராகேஷ் என்னிடம் பேசும்போது, சிட்டிசனாகிய நீங்கள் இந்த சாமானியனை வாழ்த்த வேண்டும் என்றார்.

சாமானியனே ஒரு சிட்டிசன் தானே.. இந்த படத்தில் ராமராஜனுக்கு வழக்கமான கிராமத்து பெயராக இல்லாமல் சங்கர் நாராயணன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் தன் தாத்தா பெயரை மனதில் வைத்து எழுதியதாக கூறினாலும் இயக்குனர் ராகேஷ் அதை படத்தில் வைத்திருப்பதற்காந காரணத்தை நீங்கள் படத்தில் பார்க்கும்போது செமையாக இருக்கும்” என்று கூறினார்.

நாயகன் லியோ சிவகுமார் பேசும்போது,..

“இந்த படத்தின் டீசர் வெளியீடு தி.நகரில் நடந்தபோது ராமராஜன் சாரை பார்க்க வேண்டும் என்பதற்காக என்னுடைய நண்பருடன் அங்கே சென்றேன். அப்போது என்னை கவனித்த தயாரிப்பாளர் மதியழகன், சில நாட்கள் கழித்து என்னை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறி அழைத்து நடிக்க வைத்தார்.

சிறுவயது காலங்களில் இளையராஜாவின் பாடல்கள் கேட்டு வளர்ந்த எனக்கு இன்று அவர் எனது முகத்தைப் பார்த்து ஒரு பாடல் போடுகிறார் என நினைக்கும் போது மிகப் பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.

நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசும்போது..

“ராமராஜனின் ‘சோலை புஷ்பங்கள்’ படத்தில் நான் டப்பிங் பேசிய காலத்தில் இருந்து இன்று இந்த படத்தில் இணைந்து நடித்ததுவரை எல்லாரிடமும் ஒரே போல பழகக் கூடியவர் ராமராஜன். எனக்கு ஒரு சின்ன ஆசை. அது நிறைவேறும். நிறைவேறனும்.. இப்போது இங்கே இருக்கக்கூடிய மக்கள் திரள் இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவிலும் இருக்க வேண்டும்.

கரகாட்டக்காரன் படம் போல அதையும் மீறி இந்த படம் ஓட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ராமராஜன் மறுபடியும் இடைவெளி இல்லாமல் நடிக்க வேண்டும். மக்கள் நாயகன் என்கிற பட்டம் அவருக்கு மட்டும் தான்.. அதை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது…

“நடிகர் ராமராஜனின் மனம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று இயல்பான ஒரு நடிகர். ராமராஜனை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நான் படம் இயக்கிய சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விநியோகஸ்தராக ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தை வாங்கியிருந்தேன்.

ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. அப்போது ராம நாராயணன் என்னிடம் அதற்கு பதிலாக ராமராஜன் படம் ஒன்றை தருகிறேன், அதை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறினார். ரஜினி படத்திற்கு பதிலாக ராமராஜன் படத்தை ரிலீஸ் செய்வதா என்கிற யோசனைல் ஏற்பட்டது.

அதனால் அதை என்னால் வாங்க முடியவில்லை. அந்த படம் தான் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரை அந்த படம் வசூலித்தது. ஆனால் ரஜினி படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் எனக்கு 4 கோடி நட்டம் ஏற்பட்டது. ராமராஜன் மனது பூவை விட மென்மையானது. உண்மையிலேயே இவர்தான் சின்ன மக்கள் திலகம். தான் நேசித்தவர்களை எல்லாம் தயாரிப்பாளர்களாக மாற்ற முயற்சித்து அதில் வெற்றி பெற்றவர் ராமராஜன்” என்று பேசினார்

இயக்குனர் பேரரசு பேசும்போது, “ராமராஜன் வனவாசம் முடிந்து வந்துள்ளதாக எல்லோரும் சொன்னார்கள் வனவாசம் முடிந்ததும் பட்டாபிஷேகம் தான். சாமானியன் ஒரு பட்டாபிஷேகத்திற்கு தயாராகி விட்டார். நதியா வளையல், குஷ்பூ இட்லி என நடிகைகளை மட்டுமே புகழ்ந்த ரசிகர்கள் மத்தியில் ராமராஜன் சட்டை என ஒரு நடிகரையும் புகழ வைத்தது ராமராஜன் தான். எனக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எனக்கும் அவருக்கும் குருநாதர், தாய் வீடு எல்லாமே இயக்குநர் ராம நாராயணனும் தேனாண்டாள் பிலிம்ஸும் தான். அவருக்கு எப்படி ஊர் ராசியோ எனக்கும் அதே போல ஊர் ராசி தான்.. இப்போதெல்லாம் இரண்டு படங்கள் ஓடி விட்டாலே புது கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் கம்பெனிகளுக்கே கால்சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் ராமராஜன் பெரிய நடிகராக மாறினாலும் சிறிய தயாரிப்பாளர்கள், தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குனர்கள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை கொடுத்தார். அப்படி ஒரு மனசு அவருக்கு மட்டும் தான் உண்டு. ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்.. தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு இந்த அளவிற்கு வந்து உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய மனதும் அவருடைய ரசிகர்களும் தான் காரணம்.. தமிழ் திரையுலகில் ராமராஜனின் அடையாளம் கல்வெட்டு மாதிரி இருக்கும். அது என்றும் மறையாது” என்று பேசினார்.

இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “23 வருடங்கள் கழித்து இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணையும் படம் ‘சாமானியன்’. அதை இயக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. புகை பிடிப்பது தவறானது என சென்ஸார் கார்டு போட வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு விதிமுறை வந்தது. ஆனால் தான் நடிக்க வந்த காலத்திலிருந்து சிகரெட் பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன் என தன் மனதிற்குள்ளேயே ஒரு ரெட் கார்டு போட்டு வைத்திருப்பவர் ராமராஜன். பல சவால்கள் நிறைந்த சூழலில் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம். இதை பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்ப்பது உங்கள் கடமை. படம் துவங்க ஆரம்பித்த சமயத்தில் இருந்ததை விட, கேமரா ஓட ஓட 100 மடங்கு அதிக எனர்ஜியுடன் இருக்கிறார் ராமராஜன். அவர் அவர் ஒரு சாமானிய மக்களின் பிரதிநிதி. அவர் போட்டிருக்கும் சட்டை வேண்டுமானால் கலர் கலராக இருக்கலாம். அவர் மனது என்றும் வெள்ளைதான்.. விசுவாசம், நன்றி என்றால் அது ராமராஜன் தான்..

படப்பிடிப்பில் நடிகை நக்ஸா மீது அதிக டேக் வாங்குவதாக சிலநேரம் கோவப்பட்டு உள்ளேன். ஆனால் அனைத்தையும் பக்காவாக கற்றுக்கொண்டு தன்னை மோல்டு செய்து கொண்டு தற்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் மதியழகன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அது சரியாக இருக்காது, அதற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை போடுங்கள் என ராமராஜன் கூறிவிட்டார்.. காரணம் அவருக்கு கதாபாத்திரம் கொடுத்தால் படம் முழுவதும் வரும் நீளமான கதாபாத்திரம் கொடுங்கள் என்றார். மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது திண்டுக்கல்ல லியோனி சார் தனது மகன் லியோ சிவா நடிப்பதை பார்ப்பதற்காக படப்பிடிப்பிற்கு வந்தார். மகனது நடிப்பை பற்றி கேட்டபோது, நடிப்பு பற்றி எதுவும் சொல்லாததால் சரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.. நீங்கள் போய் எதுவும் சொல்லி கெடுத்து விடாதீர்கள் சார் என்று கேட்டுக் கொண்டேன். எம்.எஸ் பாஸ்கர் ஒரு காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 அடி உயர தண்ணீர் தொட்டிக்குள் மூச்சை பிடித்து முங்கியபடி நடித்தார். கே.எஸ் ரவிக்குமார் ஒரு நடிகராக, ஒரு மிகப்பெரிய இயக்குனராக இருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு புரொடக்சன் மேனேஜராகவே மாறி படப்பிடிப்பை விரைவில் முடிப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார். ராதாரவி சார் செட்டுக்கு வந்து விட்டாலே ஒருவித அமைதி வந்துவிடும். அதனால் அதிகம் நடிகர்களை வைத்து படமாக்கும் சமயங்களில் எப்படியாவது அவரின் கால்சீட்டை வாங்கி அவரை அழைத்து வந்து விடுவோம்.

இந்த நிகழ்ச்சி இங்கே இப்போது சாதாரணமாக நடந்துவிடவில்லை.. இந்தப்படத்தின் கதை வேறு ஒருவருடையது என்று புகார் கொடுத்திருக்கிறார்களே என்று எனக்கும் தயாரிப்பாளருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மிகப்பெரிய அழுத்தம்.. ட்ரெய்லருக்கும் டீசருக்கும் சென்சார் சான்றுகளுக்காக விண்ணப்பித்தால் அங்கே ஏற்கனவே ஒருவர் சாமானியன் என டைட்டில் பதிவு செய்திருப்பதாக கோர்ட்டில் ஆர்டர் வாங்கி அங்கே கொடுத்து வைத்திருக்கிறார். அதையெல்லாம் உடைத்து எங்களிடம் தான் சாமானியன் டைட்டிலுக்கான ஆதாரம் இருக்கிறது என்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்து 48 மணி நேரத்தில் ட்ரெய்லர் மற்றும் டீசருக்கான சென்சார் சான்றிதழை வாங்கியுள்ளோம். இந்த படத்தின் கதை எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பது தான்.. அதை உணர்வுகளுடன் சேர்த்து மனதை தொடும் விதமாக உருவாக்கி இருக்கிறோம்.. இதற்காக நந்தா பெரியசாமி உள்ளிட்ட குழுவினருடன் ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறோம். இப்படி பணத்தைக் கொட்டி படத்தை எடுத்து முடித்து கடைசி நேரத்தில் கதை என்னுடையது என்று யாரோ சொன்னால் மனது வலிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாக தான் கழிந்தது.

இந்தப் படத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பது இசைஞானியின் இசை தான். மக்கள் நாயகன் ராமராஜனை பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது அவரது பாடல்கள் தான்.. நான் ‘அம்மு’ என்கிற குறும்படத்தை எடுத்து விட்டு அதற்கு இசையமைப்பதற்காக இசைஞானியை தேடி தினசரி அவரது வீட்டு வாசலில் நின்றேன். அவர் பிஸியாக இருந்ததால் பார்க்க முடியவில்லை. ஆனால் இதை தினசரி கவனித்த பவதாரணி ஒரு நாள் என்னை அழைத்து விவரம் கேட்டார். அப்பா பிஸியாக இருக்கிறார் என கூறியபோது, அப்படி என்றால் இந்த படம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களாவது இசையமைத்துக் கொடுங்கள் என கேட்டேன். இரண்டு நாள் கழித்து அவரை சந்தித்தபோது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டென்.. என்னைவிட என்னுடைய அம்மாவிற்கு இந்த படம் பிடித்திருக்கிறது.. நீ இசையமைத்து கொடு என்று என்னிடம் சொல்லிவிட்டார் என பவதாரணி கூறினார். அப்படி பவதாரணி இசையமைத்து கொடுத்த அந்த ‘அம்மு’ படம் தான் எனக்கு தமிழ்நாடு அரசு திரைப்பட பிரிவில் கோல்ட் மெடல் பெற்று தந்தது.

பிறகு இளையராஜா சாரை சந்திக்க முடியாமல் போனாலும் இந்த சாமானியன் மூலமாக அவரை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது கூட பவதாரணி என்னிடம் ஒருவழியாக அப்பாவை பிடித்து விட்டீர்களே என்று கிண்டலாக கேட்டார். அந்த வகையில் என்னை இந்த காம்பவுண்டுக்குள் அனுமதித்தவரே பவதாரணி தான். ஆனால் இன்று அவர் இல்லை. இந்த படத்தில் மாண்டேஜ் பாடலைத் தவிர வேறு பாடல்களே இல்லையே, நானும் ராமராஜனும் சேர்ந்தாலே பாட்டுக்களை தானே ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என கொஞ்சம் என் மீது கோபப்பட்டார் ராஜா சார். முழுப்படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கான இடம் இருக்கிறதே என்று என்னிடம் கூறினார். அவரே அருமையான ஒரு பாடலை எழுதி இசையமைத்து இதில் எப்படியும் ராமராஜன் உதட்டசைத்து பாடும் விதமாக படமாக்கு என்று கூறினார். அந்த பாடல் தான் கிளைமாக்ஸுக்கு முன்னதாக இந்த படத்திற்கு மிக பக்கபலமாக அமைந்துள்ளது. இந்த சாமானியனை எல்லோரும் தோளில் தூக்கி வைத்து கொண்டு செல்லுங்கள்” என்று பேசினார்.

திண்டுக்கல் ஐ லியோனி பேசும்போது…

“மக்கள் நாயகன் ராமராஜனின் மிகப்பெரிய ரசிகன் நான். கலர் கலராக உடை அணிந்து கைகளை தூக்கி பாடல் காட்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் எம்ஜிஆருக்கு பிறகு யார் என்றால் அது ராமராஜன் தான். என்னுடைய மகன் லியோ சிவகுமார் மாமனிதன், அழகிய கண்ணே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதற்கு பிறகு அவருக்கு ஒரு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக இந்த சாமானியன் படம் கிடைத்துள்ளது. அவருக்கு உங்கள் ஆதரவை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மக்கள் நாயகன் ராமராஜன் பேசும்போது…

“2010ல் நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய விபத்தை சந்தித்தேன். மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அதிலிருந்து மீண்டு வந்து நான் இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. ஏனென்றால் என்னுடைய ரசிகர்களின் தமிழக மக்களின் பிரார்த்தனை தான்.. இந்த ரசிகர் மன்றங்களுக்கும் நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராகேஷ் எனக்கு அன்றும் இன்றும் என்றும் பொருந்துகின்ற மாதிரி அருமையான திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளார். இதன் ட்ரெய்லரையும் பாடல்களையும் நான் ஒரு டெக்னீசியனாகத்தான் பார்த்தேன். இதற்கு விளம்பரமே கொடுக்க வேண்டாம்.. ராமராஜன் படம் என்றால் பார்ப்பதற்கு லட்சம் பேர் இருக்கிறார்கள்..

இந்த படத்தின் திரைக்கதை என்பது உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இதை கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது. படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதை. இந்த அளவிற்கு அழகாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராகேஷ். இன்று ராஜா அண்ணன் வருவார் என நினைத்திருந்தேன். அவர் வராததால் மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால் இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.

கே எஸ் ரவிக்குமார் இங்கே இருக்கும்போது சில விஷயங்களை பேச வேண்டும்.. நான் நடித்த ராஜா ராஜா தான் படத்தில் இயக்குநர் ஈ.ராமதாஸிடம் கே.எஸ் ரவிக்குமார் துணை இயக்குனராக வேலை பார்த்தார்.

நானும் 40 படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவன் என்கிற வகையில், அப்போதே அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் கே எஸ் ரவிக்குமாரின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்தென். அதன்பிறகு நான் நடித்து இயக்கிய ‘பெத்தவ மனசு’ படத்தில் என்னுடன் இணைந்து இணை இயக்குநராக பணியாற்றினார்.

இத்தனை வருடங்கள் கழித்து ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் அளவு புகழ்பெற்ற அவர் மீண்டும் என்னை சந்திக்கும் போது அவர் காட்டிய அந்த மரியாதையை பார்த்த போது சினிமாவில் உண்மை, நன்றி, விசுவாசம் இன்னும் சாகவில்லை.. உயிரோடு இருக்கிறது என்று நினைக்க வைத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.

கரகாட்டக்காரன் 465 நாள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தொடர்ந்து எட்டு 100 நாள் படங்களையும் கொடுத்தேன்.

இந்த படத்தில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்து இருக்கிறாயே என்று ராஜா அண்ணன் என்னிடம் கேட்டார். இந்த படத்தில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை. எனக்கு ஜோடி எம் எஸ் பாஸ்கர், ராதாரவி அண்ணன் தான்..

சரி ஒரு படம் தியாகம் பண்ணிவிட்டு போவோம் என விட்டுவிட்டேன். ஆனால் அடுத்த படத்தில் ஜோடியும் வேண்டும் பாட்டு வேண்டும்.. இப்போது கூட ஆறு பாட்டுக்குளுடன் ஒரு படம் கொண்டு வா உனக்கு பண்ணித் தருகிறேன் என ராஜா சார் கூறினார். இளையராஜா இதுவரை உலக அளவில் பெற்ற புகழை வேறு எந்த இசையமைப்பாளரும் பெற்றதில்லை. இனியும் பெற முடியாது.

தன்னுடைய மூன்று புதல்வர்களையும் இசைக்காக சென்னைக்கு அனுப்பிய அந்த தாய் சின்னத்தாய் அல்ல.. தெய்வத்தாய்..

மகுடி வாசித்தால் பாம்பு ஆடும். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அண்ணன் இளையராஜா ஆர்மோனியம் வாசித்தால் பாம்பேயே ஆடும். எனக்கு கொடுத்தது போல் வேறு ஒரு ஹீரோவுக்கு பாடல்களை கொடுக்கவில்லையே என்று சொல்வார்கள்.

நான் கூட ரஜினி சாருக்கு கொடுத்தது போல எனக்கு பாடல்களை ராஜா சார் கொடுக்கவில்லை என்று கூட சொல்வேன். ‘முரட்டுக்காளை’ படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்…’ என்ற பாடல் சூப்பராக இருந்தத..

ஆனால் “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா” என்கிற அந்த ஒரு பாடல் எனக்கு போதும். சிங்கப்பூரில் சென்று வேட்டி கட்டி நடித்த ஒரே தமிழ் நடிகர் நான்தான்.. எங்களுடன் ஒரு மாட்டு வண்டியையும் சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாக இருந்தோம். விமானத்தில் அனுமதிக்கவில்லை.

44 படங்களில் நடித்த பின் 45வது படம் இழுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் சாமானியன் திரைப்படம் சரியான நேரத்தில் என்னை வந்து சேர்ந்தது” என்றார்.

Tamil Directors trolls Rajini at Ramarajans Saamaniyan event

More Articles
Follows