விவேகம் படத்தை வாங்கிய புலிமுருகன் படத்தயாரிப்பாளர்

விவேகம் படத்தை வாங்கிய புலிமுருகன் படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pulimurugan company Mulakuppadam Films bagged kerala rights of Vivegamஅஜித் படத்திற்கு தமிழகத்தில் நல்ல ஓபனிங் எப்போதும் இருக்கும்.

தற்போது உருவாகியுள்ள விவேகம் படத்தில் விவேக் ஓபராய் இணைந்துள்ளதால் இந்தியிலும், காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளதால் ஆந்திராவிலும் நல்ல எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து கேரளாவிலும் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

எனவே, இதன் கேரள உரிமையை புலி முருகன் படத்தயாரிப்பாளர் பெருந்தொகை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

Pulimurugan company Mulakuppadam Films bagged kerala rights of Vivegam

விவேகம் டீசரை தொடர்ந்து சர்வைவா பாடலும் சாதனை

விவேகம் டீசரை தொடர்ந்து சர்வைவா பாடலும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Surviva song from Vivegam movie making recordsஅஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

அனிருத் இசையில் உருவான இப்படத்தின் சர்வைவா பாடல் சிங்கிள் ட்ராக் நேற்று ரிலிஸானது.

பொதுவாக இது போன்ற பாடல்கள் யுடியூபில் ரிலீஸ் ஆகும்.

ஆனால், இப்பாடல் நேற்று ஒரு தனியார் கம்பெனி சேனல் App மூலம் வெளியானது.

தற்போது வரை இப்பாடலை 4.1 லட்சத்திற்கு அதிகமானோர் கேட்டு ரசித்து விட்டார்களாம்.

இதற்குமுன் இந்த சேனலில் வெளியான பாடலை இதுவரை இத்தனை லட்சம் பேர், குறைந்த நேரத்தில் கேட்டதில்லையாம்.

இதன் மூலம் சர்வைவா பாடல் அந்த சேனலின் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.

யூடியுப்பில் விவேகம் டீசர் படைத்த சாதனை நாம் அறிந்த ஒன்றுதான்.

சக போட்டியாளரான விஜய்சேதுபதிக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

சக போட்டியாளரான விஜய்சேதுபதிக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan vijay sethupathiரஜினி-கமல், அஜித்-விஜய், விக்ரம்-சூர்யா, தனுஷ்-சிம்பு ஆகிய சமகால போட்டியாளர்களை தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு போட்டியாக சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

ஆனால் றெக்க படத்தில் சிவகார்த்திகேயன் படத்தை வைத்து பாட்டு பாடி ஆடி, சிவாவை கொண்டாடுவதில் என்ன தவறு உள்ளது என கேட்டவர் விஜய்சேதுபதி.

இந்நிலையில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விக்ரம் வேதா படத்தின் ட்ரைலரை நாளை சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளாராம்.

இப்படத்தை புஷ்கர்-காயத்ரி இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இதில் காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த ஜூலை மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan will release Vikram Vedha movie trailer Starring Madhavan and Vijay Sethupathi

vikram vedha

‘விஜய்க்காக சம்பளம் வாங்காம நடிப்பேன்…’ ஜெயம் ரவி

‘விஜய்க்காக சம்பளம் வாங்காம நடிப்பேன்…’ ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam raviதிங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’.

அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர்.

முதன்முறையாக ஹாரீஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படமாகவும் அமைந்திருக்கிறது.

வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் கலந்துக் கொண்டு ஜெயம்ரவி பேசியதாவது…

கதை மேல் நம்பிக்கை வைத்து படத்துக்கு உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால் தான் இந்த படம் உருவாகியிருக்ககிறது.

நான் மட்டும் தான் ஈஸியா வேலை செஞ்சேன்னு மதன் கார்க்கி சொல்றதுலாம் சுத்த பொய். அவர் மூளையை கசக்கி கஷ்டப்பட்டு தான் பாட்டு எழுதியிருக்கிறார்.

என் படத்தில் நடிச்சா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்கனு சொல்வாங்க. நிச்சயம் சாயிஷா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்க.

விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால் தான் இந்த படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறது.

கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம் தான் இது. சின்சியராக உழைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.

தமிழனாக இருந்தால் படத்தை இண்டர்நெட்டுல போடாதீங்க.

போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும்.

அப்படி படம் ஒடலைனா சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கிறேன்.

பிறகு “ஷேர் செய்து படத்தை தயாரித்து சரிகட்டிவிடுவோம். என் வண்டியும் ஓடணும் இல்ல” என்றார் நாயகன் ஜெயம் ரவி.

If Vanamagan becomes failure I will do one more film with Vijay at free of cost says Jayam Ravi

Vanamagan Press Meet Photos

‘அஜித் ரசிகர்களின் பலம் பிரமிக்க வைக்கிறது…’ காஜல் அகர்வால்

‘அஜித் ரசிகர்களின் பலம் பிரமிக்க வைக்கிறது…’ காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kajal Aggarwal open talk about Ajith and his fans Strengthதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் அவர் உரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தற்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். எனவே அஜித் ரசிகர்கள் அப்படம் குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளித்தபோது… ‘விவேகம் படத்தில் அஜித்தின் தோழியாக நடித்துள்ளேன். அப்படக்குழுவினருடன் இணைந்தது நல்ல அனுபவம்.

என் வாழ்வில் சந்தித்த மனிதர்களில் அஜித் சிறப்பானவர். அவரின் ரசிகர்கள் பலம் பிரமிக்க வைக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Kajal Aggarwal open talk about Ajith and his fans Strength

தனுஷுக்கு கஜோல்; சிவகார்த்திகேயனுக்கு சிம்ரன்

தனுஷுக்கு கஜோல்; சிவகார்த்திகேயனுக்கு சிம்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simran kajolவேலைக்காரன் படத்தை தொடர்ந்து தன் அடுத்த பட சூட்டிங்கில் பிஸியாகி விட்டார் சிவகார்த்திகேயன்.

பொன்ராம் இயக்கிவரும் இதன் சூட்டிங் தற்போது தென்காசியில் நடைபெற்று வருகிறது.

இதில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சூரி, நெப்போலியன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ரசிகர்களின் முன்னாள் கனவுக் கன்னியான சிம்ரன் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்த கேரக்டர் குறித்து சிம்ரன் கூறும்போது… “கேரக்டர் பற்றி இப்போது கூறமுடியாது. ஆனால் இது மிகவும் பவர்புல்லான கேரக்டர் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 (விஐபி2) படத்திலும் முன்னணி நடிகையான கஜோலுக்கு பவர்புல்லான கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kajol in Dhanush movie and Simran in Sivakarthikeyan movie plays powerful role

More Articles
Follows