உணவகங்கள் இரவு 10 வரை அனுமதி.; புதுச்சேரி காரைக்காலில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

உணவகங்கள் இரவு 10 வரை அனுமதி.; புதுச்சேரி காரைக்காலில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக. 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான விக்ராந்த் ராஜா இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

இது கூடுதல் தளர்வுகளுக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இதன்படி, தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.

பெரிய மார்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல் இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 10 மணி வரை, 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கலாம்.

சில்லறை மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம். சரக்கு போக்குவரத்துக்கு வழக்கம் போல் அனுமதி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து (பேருந்து, டாக்ஸி, ஆட்டோ) இரவு 9 மணி வரை இயங்கலாம்.

பூங்காக்கள், கடற்கரை சாலைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அனைத்து வழிபாட்டுதலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும். வழிபாட்டுத்தலங்களில் 25 பேர்களுடன் திருமணம் செய்யலாம்.

திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 100 பேரும், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம். தொழிற்சாலை பணிகள், கட்டுமானம், உற்பத்தி பணிகள் வழக்கம் போல் நடக்கலாம்.

அனைத்து வித விளையாட்டுக்களுக்கும், பார்வையாளர்களின்றி அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Puducherry Karaikal Covid Lockdown extended up to 31st August 2021

சைவ திருமுறைகள் தமிழில் பாடி முதல் பெண் அர்ச்சகர் சுஹாஞ்சனா அர்ச்சனை

சைவ திருமுறைகள் தமிழில் பாடி முதல் பெண் அர்ச்சகர் சுஹாஞ்சனா அர்ச்சனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1970-ம் ஆண்டில் அனைத்து சாதியினரும் தமிழ்நாட்டில் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தைக் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார்.

ஆனாலும் பல்வேறு சட்டச் சிக்கல்களால் காரணமாக இந்த சட்டம் கடந்த 50 ஆண்டுகளாக நிறைவேறவில்லை.

தற்போது 51 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருணாநிதியின் கனவான இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

அதன்படி நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோயிலுக்குப் பெண் ஓதுவாராக திருமதி சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேவாரம், திருவாசகம் இரண்டையும் கற்றுத் தேர்ந்த இவருக்கு 27 வயதாகிறது. திருமணத்திற்குப் பின் சென்னை சேலையூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் சுஹாஞ்சனா.

சைவ திருமுறைகளை தமிழில் பாடி கோயிலில் இவர் அர்ச்சனை செய்யும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tamilnadu first female chanter suhanjana at TN temples

Suhanjana Gopi 27 has been appointed as odhuvar at the Dhenupureeswarar temple in Chennai.

பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி.. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்..; வேளாண் பட்ஜெட்டுக்கு பவன் குமார் பாராட்டு

பனை மரம் வெட்ட ஆட்சியர் அனுமதி.. ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்..; வேளாண் பட்ஜெட்டுக்கு பவன் குமார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக விவசாயிகளுக்கு எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம் – காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் அறிக்கை.
 
 வேளாண் துறையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார் கூறியுள்ளார்.  
 
இது குறித்து பவன் குமார் வெளியிட்ட அறிக்கை விவரம்:
 
“தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு தொடர்ந்து பல கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது.

அதில் பலவற்றை நிறைவேற்றும் வகையில் வேளாண் துறைக்கான தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள்  இடம் பெற்றிருந்தாலும் இயற்கை வேளாண்மை குறித்த அறிவிப்புகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்.
 
அதிலும் குறிப்பாக… வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

2021-22ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம்.

2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327 கோடி ஒதுக்கீடு.

ரூ6 கோடியில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 10 புதிய உழவர் சந்தைகள்

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750லிருந்து ரூ.2900 ஆக உயரும்.

ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100ஏக்கரில் அமைக்கப்படும்

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரசி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி

இப்படி வேளாண் துறையில் புதுமைகளை புகுத்தி, வேளாண் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும், 
வேளாண் தனி பட்ஜெட்டில், 34 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

 அதோடு, வேளாண் பட்ஜெட்டில், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இப்படி எண்ணற்ற நன்மைகளுடன் கூடிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை, நல்ல தொடக்கமாக கருதலாம். முடிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

அறிவிப்புகள் அப்படியே செயல் வடிவத்துக்கு வந்தால் தமிழக விவசாயிகள் வாழ்க்கைத்தரம் கண்டிப்பாக கொஞ்சமாவது உயரும்.
 
இவ்வாறு அறிக்கையில் பவன் குமார் கூறியுள்ளார். 

Tamilnadu exclusive budget for agriculture Here is Highlights

For the first time in the history of TN Legislative Assembly an

Tamilnadu exclusive budget for agriculture Here is Highlights

இங்க மன்னராட்சியா நடக்குது? விஷாலை விமர்சித்த சிம்புவின் தாயார்.; என்னதான் நடந்துச்சு.?

இங்க மன்னராட்சியா நடக்குது? விஷாலை விமர்சித்த சிம்புவின் தாயார்.; என்னதான் நடந்துச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதனிடையில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி எல்லாத்துக்கும் சிம்பு தான் காரணம் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

சிம்புவுக்கு ரெட் கார்ட் போட்டாச்சு… அவர் பட சூட்டிங்க்கு FEFSI தன் ஊழியர்களை அனுப்பக்கூடாது” என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை போட்டது..

பின்னர் ஐசரி கணேஷ் சமாதானம் பேசுவிடவே பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி தன் சங்க ஊழியர்களை (உறுப்பினர்கள்) அனுப்பினார். இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

இந்த பிரச்சினை குறித்து சிம்பு எதுவும் பேசாத நிலையில் தன் மகன் சிம்புவுக்காக மெளனம் கலைத்தார் உஷா டி. ராஜேந்தர்.

விஷாலை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அதாவது,…

“அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தோல்வி அடைந்தது ஒன்று. அப்படத்தில் சிம்புவின் சம்பளமாக 3.5 கோடி ரூபாய் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடன் பேசியுள்ளார்.

படத்தை குறித்த நேரத்திலும் முடித்து கொடுத்தும் சம்பளத்தை கொடுக்காமலும் படத்தை வெளியிடாமலும் இருந்துள்ளார் தயாரிப்பாளர்.

படம் ரிலீஸ் அன்னைக்கு ராத்திரி அந்தத் தயாரிப்பாளர், ‘இந்த பணத்தை சிலம்பரசன் விட்டுக் கொடுத்தா மட்டுமே படத்தை ரிலீஸ் பண்ண முடியும்’னு சொன்னார்.

இதுபத்தி எல்லாரும் சிலம்பரசன்கிட்ட ‘என்ன பண்னலாம்பா’னு கேட்டோம். சிம்பு அந்தப் பணத்தை விட்டுக் கொடுக்கலாம்னு சொல்லிட்டார். படத்தை ரிலீஸும் பண்ண வெச்சார்.

இதனால் நடிகர் சங்கத்தில் சிம்பு புகாரளித்திருந்தார். பின் கொடுத்த சம்பளத்திற்கு ஜிஎஸ்டியும் கட்டல டிடிஎஸ்சும் கட்டல என்று கூறியுள்ளார் சிம்பு தாயார்.

மேலும், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷால் சிம்பு ஒரு படத்தினை மைக்கேல் ராயப்பனுக்கு சம்பளம் இல்லாமல் பண்ணித்தர வேண்டும் அல்லது வேறொருவரின் படத்தில் நடிக்கும் போது 2 கோடி 40 லட்ச ரூபாய் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை போட்டுள்ளார்.

விஷால் என்ன சுப்ரீம் கோர்ட் ஜர்ஜா, இதற்கு அப்பீலே கிடையாதா என்று் ஆதங்கமாக பேசியிருந்தார்.

விஷால் தயாரிப்பாளர் ட்ரஸ்சில் இருந்து 7 கோடி ரூபாயை பல விதத்துல விரயம் பண்ணீவிட்டார். அதற்கு கணக்கு காட்டாம இருந்த விஷாலுக்கு ரெட் கார்ட் இல்ல சிம்புவிற்கு ரெட் கார்ட்டா?

இதனால என்ன நடக்கணும்னு எதிர்பார்க்கறீங்கன்னு எனக்கு புரியல.

யார் படத்துக்கும் ‘ரெட்’ கார்டு போடுறதும் தப்புதான். அது விஷாலா இருக்கட்டும் அல்லது யாரா வேணா இருக்கட்டும். ‘ரெட்’ என்பது தவறான விஷயம்”

என்று ஆதங்கமாக பேசியுள்ளார் உஷா.

Usha Rajendar condemns Vishal’s act

‘அண்ணாத்த’ அப்டேட்..: ரஜினியுடன் இணைந்த விஜய்-கார்த்தி பட வில்லன்..; ரசிகர்கள் டென்ஷன்

‘அண்ணாத்த’ அப்டேட்..: ரஜினியுடன் இணைந்த விஜய்-கார்த்தி பட வில்லன்..; ரசிகர்கள் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, பாலா என நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சிவா இந்த படத்தை இயக்க இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது என கூறியிருந்தார் பாலா.

வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தார் பாலா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2021 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் ரிலீஸ் என்பதால் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று படம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.

மீனா உள்ளிட்டவர்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தகவல்களும் படங்களும் ரிலீசாகின.

இதனிடையில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கார்த்திக்கின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் விஜய்யின் ‘வேலாயுதம்’ படங்களில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் அபிமன்யூ சிங் படத்தில் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

படம் முடிஞ்சுட்டு சொன்னாங்க இப்போ கேரக்டர் அப்டேட் பண்ணீங்களேன்னு ரஜினி ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

Rajini and Karthi film villain joins Annaatthe shoot

‘யூகி’ படத்தில் மீண்டும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி.; நட்டி & நரேனுடன் கூட்டணி

‘யூகி’ படத்தில் மீண்டும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி.; நட்டி & நரேனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும் ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், 2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

Forensic மற்றும் Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும் AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.

‘யூகி’ படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஏற்கெனவே ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதிர் & ஆனந்தி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் ‘யூகி’ படத்தினை இயக்குகிறார்.

தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார்.

இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, ஜாக் ஹாரிஸ் இயக்கிய மலையாளப் படத்தில் ‘ஜகமே தந்திரம்’ நட்சத்திரம் ஜோஜு ஜார்ஜ், நரேன் மற்றும் ஷர்புதீன் நடித்திருந்தனர்.

பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது.

Yuki starring Kathir Narain and Natty has been unveiled by the makers on the 13th of August 2021

More Articles
Follows