அரசே குடியை கெடுக்கலாமா.?; கலப்பை மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் கேள்வி

அரசே குடியை கெடுக்கலாமா.?; கலப்பை மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PT Selvakumar request TN Govt to reconsider Tasmac opening orderதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் வேண்டுகோள்.

மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. அன்று 150 பெண்களும் கண்ணீரோடு டாஸ்மாக் கடைகளை இனி திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம்.

மீண்டும் லட்சக்கணக்கான பெண்கள் சார்பாக பணிவான வேண்டுகோள்….

1. 45 நாட்களுக்கு பிறகு திறப்பதால் பெரும் கும்பலாக குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது. இதனால் நோய் தொற்று ஏற்படும்.

2. டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இருக்கும் இப்போது கடன் வாங்கி குடித்து கடனாளி ஆகி விடுவார்கள்.

குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வந்து தற்கொலைகள் நிகழ வாய்ப்புள்ளது. விபத்து, திருட்டு,வழிப்பறி, கற்பழிப்பு,கொலை போன்றவற்றிற்கும் வழிவகுக்கும்.

3. குடிப்பவர்கள் போதையுடன் இருக்கும் போது கண்ட இடத்தில் எச்சில் துப்புவார்கள், மற்றும் சிகரெட்,பீடி புகைத்து புகையை வெளியிடுவார்கள். இதனால் கிருமி தொற்று ஏற்படும்.

4. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில் உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது. ஆனால் குடிப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனோவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

5.ஊரடங்கால் 45 நாட்கள் குடிக்காமலும் வாழ முடியும் என நிரூபித்துள்ளார்கள்.

உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும் அவர்களை மீண்டும் குடிப்பதற்கு அரசே வழி வகை செய்யலாமா.

குடி குடியை கெடுக்கும் என்ற வாசகம் ஒவ்வொரு பாட்டில்களிலும் அரசே எழுதி வைத்துள்ளது. அரசே குடியை கெடுக்க துணை போகலாமா

6.டாஸ்மாக் அரசு பணியாளர்களும் பூரண மதுவிலக்கே மக்களுக்கும் ,அரசுக்கும் நல்ல தீர்வு என்று தங்களுக்கு கடிதம் தந்துள்ளார்கள்.

7 மாண்புமிகு அம்மா அவர்கள் படிப்படியாக குறைத்து முழு மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று பதவி ஏற்றதும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற, அவர்களின் கனவை நனவாக்க தங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

அம்மாவின் அரசு பெண்களின் அரசு! கோடானு கோடி பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள்!

இவ்வாறு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

PT Selvakumar request TN Govt to reconsider Tasmac opening order

14 வயதுக்குட்பட்டோருக்கு நடனப் போட்டி.: வீட்டிலேயே ஆடுங்க 50000-ஐ அள்ளுங்க!

14 வயதுக்குட்பட்டோருக்கு நடனப் போட்டி.: வீட்டிலேயே ஆடுங்க 50000-ஐ அள்ளுங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kattil movie Corona Dance competition for Childrens நமது மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப்படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக உருவாக்கிய கொரோனா கானா பாடலுக்கு சிறப்பாக நடனமாடி வீடியோ அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

உலககெங்கிலும் வாழும் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

நடனமாடிய வீடியோவை +91 9150566759 என்ற whatsapp நம்பருக்கு மே 25 (2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பி வைக்கலாம். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000

கட்டில் திரைப்படப்பாடல் வெளியீட்டு விழாவில் பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்படும்.

உலகமே முடங்கி கிடக்கும் இந்த தருணத்தில் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு இம்மாதிரியான போட்டிகளையும் அறிவித்து குழந்தைகளை மகிழ்விப்பதில் “கட்டில்” திரைப்படக்குழு பெருமை கொள்கிறது என்று அப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.

Kattil movie Corona Dance competition for Childrens

Kattil movie Corona Dance competition for Childrens

GO CORONA : Velammal To Host International Art Contest; 1st Prize Rs 25000

GO CORONA : Velammal To Host International Art Contest; 1st Prize Rs 25000

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GO CORONA Velammal To Host International Art Contest 1st Prize Rs 25000Velammal’s International Art Contest GO CORONA 2020 , opens up for the children from the age group 5 years to 15 years. Young artists across the globe are invited to register for the competition from 13th May to 19th May, 2020.

The organizer will be accepting entries on or before 27th May,2020. All participants will recieve an E- certificate.

Final results will released in our website www.velammalnexus.com on 17th June, 2020 with 600 plus exiting prizes
•I prize – INR 25000
•II prize – INR 15000
•III prize – INR 10000, and much more for the deserving participants.

*Registration to this contest is absolutely free*

Get ready to grab this opportunity!

For more information, visit website www.velammalnexus.com

For further details contact +91 7358390402.

Velammal continues it’s tradition of honouring and giving young artists a global exposure.

 

GO CORONA : Velammal To Host International Art Contest; 1st Prize Rs 25000

BIG BREAKING தலைநகரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு

BIG BREAKING தலைநகரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது – தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tasmac shops will not be opened in Chennaiகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மே 17 வரை அமலில் உள்ளது.

இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள கொரோனா பச்சை மண்டலங்களில் நேற்று மே 4 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தமிழகத்திலும் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பல அரசியல் கட்சிகள் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதாவது.. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tasmac shops will not be opened in Chennai

BREAKING அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குகிறது.. – கமல்

BREAKING அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குகிறது.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal slams TN Govt for Opening Tasmac on Corona Lock down daysகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மே 17 வரை அமலில் உள்ளது.

இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள கொரோனா பச்சை மண்டலங்களில் நேற்று மே 4 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தமிழகத்திலும் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் கண்டித்துள்ளார்.

அவரின் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு…

என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Kamal slams TN Govt for Opening Tasmac on Corona Lock down days

மன்னிப்பு…: தவறுக்கு வருந்துகிறோம்..!

மன்னிப்பு…: தவறுக்கு வருந்துகிறோம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We apology to Actress Kasthuri நேற்று மே 4 ஆம் தேதியன்று நடிகை கஸ்தூரி தொடர்பான ஒரு செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்து இருந்தது.

சிறு குறு தொழில்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த அரசு டாஸ்மாக் திறக்கப்பட மாட்டாது என அறிவித்து இருந்தனர்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி !.
@CMOTamilNadu @PThangamanioffl
என பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி.

இது தொடர்பான செய்தியில் டாஸ்மாக்கு லாக்கு… என்ற தலைப்பில் செய்தியை பதிவிட்டோம்.

அந்த செய்தியில் நடிகை கஸ்தூரியின் கையில் மதுபான பாட்டில் வைத்திருப்பது போல டிசைன் செய்து (கம்யூட்டர் கிராபிக்ஸ்) வெளியிட்டு இருந்தோம்.

இது கஸ்தூரியின் மனதை காயப்படுத்தியுள்ளதை அறிந்தோம்.

எனவே அவரிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். இனி இதுபோல் நடக்காது என்பதையும் இங்கே தெவித்து கொள்கிறோம்.

அது தொடர்பான செய்தியை இணையத்தில் இருந்து நீக்கிவிட்டோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி
ஆசிரியர்

We apology to Actress Kasthuri

More Articles
Follows