இளையராஜா-75 விழாவில் விஷால் ஊழல்; தயாரிப்பாளர்கள் புகார்

இளையராஜா-75 விழாவில் விஷால் ஊழல்; தயாரிப்பாளர்கள் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producers S V Sekar JSK K Rajan slams Vishal and Ilayaraja 75 showசென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விஷால் நடத்தினார்.

இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் மலையாள, தெலுங்கு, கன்னட, ஹிந்தி திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கே.ராஜன், எஸ்.வி.சேகர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அவர்கள் கூறியதாவது:

இளையராஜா 75 நிகழ்ச்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.

அவருக்கு பாராட்டு விழா என்றால் விருது கொடுத்து இருக்கலாம். ஆனால் 3½ கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கு சம்பளம் கொடுத்துள்ளனர்.

அவர்தான் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமே தவிர, அந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே மூன்றரை கோடி வாங்கியுள்ளார்.

மேலும் விஷாலுக்கு நெருக்கமான நண்பர்கள் நடிகர்கள் நந்தா, ரமணா மீதும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நடிகர் ரமணா மூன்றரை கோடி கான்ட்ராக்ட் எடுத்து விழா மேடைகளை அமைத்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

எத்தனையோ தயாரிப்பாளர்களின் பணம் அது. அந்தப் பணத்தை முறைகேடாகச் செலவு செய்வது என்பது திருட்டுக்குச் சமமான விஷயம். அதை தான் விஷால் செய்துள்ளார்.” என்றும் எதிரணியினர் விஷால் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

Producers S V Sekar JSK K Rajan slams Vishal and Ilayaraja 75 show

எம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக அரசிற்கு கோரிக்கை

எம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக அரசிற்கு கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karunasசீர்மரபினர் சமூகத்தை “சீர்மரபினர் பழங்குடியினராக” மாற்றம் செய்ததை மத்திய அரசு ஆவணங்களிலும் ஒரே மாதிரியாக
மாற்ற செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்
எம்.எல்.ஏ. கருணாஸ் கோரிக்கை

தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடந்து நான் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தேன். நான் மட்டுமன்றி பலர் போராடினர். இப்போது தமிழக அரசு செவிசாய்த்துள்ளது. அதே சமயம் முரண்பாடுகளானவற்றையும் களையவேண்டும்.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,

சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தை பொருத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூகநலத்துறை அமைத்த குழு தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரையை ஏற்று 1979ம் ஆண்டு சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பெயரை சீர்மரபினர் சமூகத்தினர் என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை விலக்கிக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு சலுகை மற்றும் நலத்திட்ட சலுகைகளை பெறுவதற்கு இதுவரை சீர்மரபினர் சமூகங்கள் என அழைக்கப்பட்ட 68 சமூகங்கள் சீர்மரபினர் சமூகங்கள் என்றே அழைக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள் ளது.

அதே நேரம் மத்திய அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு இந்த 68 சமூகத்தினரும் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Denotified Tribes என்ற பெயரினை அரசாணை எண்:1310, சமூகநலத்துறை நாள்:30.07.1979-இல் Denotified Communities என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது Denotified Communities (சீர்மரபினர்) பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டுள்ளது. மத்திய அரசு சலுகைகள் பெறுவதற்கு ஒரு பெயரும், தமிழக ஆவணங்களிலும் ஒரு பெயரும் கூடாது. அனைத்து சலுகைகளையும் பெற சீர்மரபின பழங்குடியினர் DNT என்று ஒரே மாதிரியாக மாற்றம் செய்தால்தான் எங்களது தொடர் கோரிக்கை முழுமையாக நிறைவேறும்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

uriyadi 2கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த உறியடி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும் தமிழ்சினிமாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மாற்று சினிமாவை நோக்கி இளைஞர்கள் வீறுநடை போடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் உறியடியில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாக பேச உள்ளது உறியடி2. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், “உறியடி உறியடி2 எடுப்பதற்கான காரணம் என்ன?” என்பதற்கு அழகான பதிலைச் சொல்லி இருக்கிறார்.

“இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி2 வருவதற்கான காரணம்” என்கிறார் மற்றும் நடிகரான விஜய்குமார். மேலும் அவர் படம் பற்றி கூறும்போது,

“எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. ‘Of all the arts, for us cinema is the most important’னு லெனின் சொல்லியிருக்கார். ‘கலைகளில் சினிமா தான் பெருசு’ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர். சரி தவற்றைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப் படுத்தணும்.” என்றார்.

சூர்யா தயாரிப்பாளாராக வந்ததைச் சொல்லும் விஜய்குமார்,

“2டி ராஜசேகர் சாரை ஒருநாள் சந்திச்சேன். அப்போ உறியடி 2 கதையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவருக்கு அது பிடிச்சிருந்தது. உடனடியா முழுக்கதையையும் கேட்டார். கதையின் முதல் வெர்ஷனைச் சொன்னேன். அப்புறம் சூர்யா சாரைப் பார்த்தேன். அப்போ கதையை வலுப்படுத்தி அடுத்த வெர்ஷனைச் சொன்னேன். ஒருசில கேள்விகள் கேட்டார். ” எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா படம் பண்ணலாம்”னு சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. காரணம் உறியடி பட ரிலீஸ்ல ஏகப்பட்ட பிரச்சனைகள். பொருளாதார இழப்பை விட மனவலி அதிகமா இருந்தது. “உறியடி2″ படத்துக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைச்சது நிம்மதியா இருக்கு. சூர்யா சாரும் ஒரு படைப்பாளிக்கு என்ன சுதந்திரம் கொடுக்கணுமோ, அதை எனக்குக் கொடுத்தார். ஷுட்டிங் முடியுற வரைக்கும் எந்தவிதமான பிரஷரும் இல்லாம முடிச்சிட்டோம். படம் சம்மர் ரிலீஸ்” என்றார் உற்சாகமாக.

சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சாதி அரசியலையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படமாக உறியடி2 வந்துள்ளது.

இந்தப்படம் முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்திருக்கிறார்கள். கூடவே யூட்யூப் மூலம் பலருக்கும் பரிச்சயமான மெட்ராஸ் சென்ட்ரல் சுதாகர் நடித்திருக்கிறார். உறியடியில் பணிபுரிந்த டெக்னிக்கல் டீம் அனைவரும் இதிலும் ஒன்றிணைந்துள்ளார்கள். அசுரவதம் படத்தில் தன் அசுரபலத்தைக் காட்டி, 96 படம் மூலமாக இன்ப ராகம் ஊட்டிய கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadaram kondan stillsஇப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

“தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
எரிவா மேலே மேலே”

என ஆரமிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

“கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்” என ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை கிராமத்து பெண்களுடன் கொண்டாடிய கௌதமி !

மகளிர் தினத்தை கிராமத்து பெண்களுடன் கொண்டாடிய கௌதமி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautamiதன் வாழ்க்கையின் ஒவ்வாெரு நிலையிலும்
ஒரு தாயாகவாே, மனைவியாகவாே, மகளாகவாே, சகோதரியாகவாே, நண்பியாகவாே, தன்னை சுற்றியிருப்பவர் களின் நலனுக்காக தன்னால் முடிந்த எல்லாவற்றையும் எந்த ஒரு எதிர்பார்ப்பு-மில்லாமல் செய்பவள் தான் பெண்…

எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய பாேர்க்களமானாலும் தன்னால் அன்பு பாராட்டப்படுபவர்களுக்காக எந்த ஒரு தியாகத்தையும் எந்த ஒரு முகச்சுளிப்புமின்றி செய்பவள் தான் பெண்ணெனும் அந்த உண்மையான ஹீரோ.

இந்த சர்வதேச மகளிர் தினத்தை முள்ளி, வளர்பிறை, முன்னுதிகுப்பம், கத்ரிச்சேரி, உளுத்தமங்கலம் பாேன்ற இடங்களின் அந்த அழகான ஹீரோக்களுடன் கொண்டாடுவது எனக்கு பெருமையளிக்கிறது.

தங்களின் ஆற்றலையும் மகிழ்ச்சியையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எனக்கு உத்வேகம் அளித்ததற்கு நன்றி.
-கௌதமி

காஞ்சனா 3 படத்தை 2 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடும் லாரன்ஸ்

காஞ்சனா 3 படத்தை 2 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanchana 3எத்தனையோ பேய் படங்கள் ரிலீஸ் ஆனாலும் லாரன்சின் பேய் படங்களுக்கு மவுசு அதிகம் தான்.

முனி படத்தைத் தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா-2 என படங்களை இயக்கி நடித்தார்.

தற்போது காஞ்சனா 3 படத்தையும் இயக்கி நடித்துள்ளார். இதில் வேதிகா மற்றும் ஓவியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழைப் போலவே தெலுங்கிலும் லாரன்ஸ்க்கு நல்ல மார்கெட் உள்ளது.

எனவே காஞ்சனா 3 படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

மே 1ந்தேதி இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

More Articles
Follows