விஜய்யை இயக்க ராஜமௌலியிடம் தாணு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவையே தன் பாகுபலி படத்தால் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட தெறி பட தயாரிப்பாளர் தாணு பேசும்போது…

சில வருடங்களுக்கு முன், நான் ஹைதராபாத் சென்றபோது, ராஜமவுலியை சந்தித்தேன்.

அப்போது விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் சில காரணங்களால் அந்த நிறைவேறாமல் போய்விட்டது” என்று பேசினார்.

Producer Thanu requested to Rajamouli to direct Vijay

தொண்டன் படத்தின் கதை என்ன..? சமுத்திரக்கனி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி தயாரித்து இயக்கி, நடித்துள்ள படம் தொண்டன்.

இதில் விக்ராந்த், சுனைனா, அர்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாரகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இன்று சென்னையில் வெளியிட்டனர்.

அதன்பின் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினார் சமுத்திரக்கனி. அவர் பேசியதாவது…

பெண்கள் விடுதியில் ஒருவன் புகுந்து ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தான் என்கிற உண்மை சம்பவத்தை பற்றிய கதைதான் இது.

ஆனால் அந்த காமுகனை பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்த்து அடித்தால் என்னவாகி இருப்பான் என்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறேன்.

மேலும் இதில் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் பற்றிய சம்பவங்களை சொல்லியிருக்கிறோம்.

ஒருவர் ஆம்புலன்ஸில் உயிர்க்கு போராடுபவர்களை பற்றிதான் நினைக்கிறோம்.

ஆனால் அந்த வாகனத்தை ஓட்டிச் செல்லபவர்களுக்கும், அதில் முதலுதவி செய்பவர்களின் மனவலியை பற்றி இப்படம் சொல்லும்.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை பற்றிய அனைத்தையும் அலசியுள்ளேன்.

இந்த தொண்டனுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று பேசினார்.

Samuthirakani revelaed the story of his Thondan movie

 

அரசியல் நெருக்கடி வந்தால் ரஜினியை போல சமாளிப்பாரா இளையராஜா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் தமிழக அரசியல்வாதிகளின் நெருக்கடியால் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்கள் சிலரால் ஒரு இசை கச்சேரி ஒன்று இலங்கையில் ஜீன் மாதம் நடைபெற உள்ளதாம்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைஞானி இளையராஜா கூறப்படுகிறது.

எனவே ரஜினியைப் போல இளையராஜாவுக்கும் தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என சொல்லப்படுகிறது.

ஒருவேளை எதிர்ப்பை மீறி இலங்கை செல்வாரா? அல்லது ரஜினியை போல பின்வாங்குவாரா? என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Ilayaraja cancel his Sri Lanka visit like Rajinikanth

‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷுக்கு தங்க சங்கிலி பரிசளித்த எம்.எஸ்.பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் நடித்திருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் கதாப்பத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

திரைப்பட நடிகர்கள், இயக்குனராகள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலர் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை நேரிலும், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் பாராட்டி வருகின்றனர்.

இதனால், உற்சாகம் அடைந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தன்னுடைய கதாப்பாத்திரத்தின் நடிப்பை வெளிக் கொண்டுவர காரணமாக இருந்த இயக்குநர் ஸ்ரீகணேஷ் அவர்களை பாராட்ட முடிவு செய்து, தனது வீட்டுக்கு அழைத்தார்.

பட விமர்சனங்களை பற்றி பகிர்ந்து கொள்ள எம்.எஸ்.பாஸ்கர் அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், திடீர் என அவர் தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டியதில் நெகிழ்ந்து போனார்.

Actor MS Baskar presented Gold Chain to 8 Thotakkal director Sri Ganesh

விஜய்சேதுபதி-கௌதம் கார்த்திக் இணையும் படத்தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதியுடன் இணைந்து கௌதம் கார்த்திக் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்க, அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

‘ஒக மனசு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த நிஹாரிகா கொனிடேலா இதில் நாயகியாக நடித்து வருகிறார்.

முக்கிய வேடத்தில் ரமேஷ் திலக் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

விஜய்சேதுபதி தீவிரவாத கும்பல் தலைவனாகவும், கௌதம் கார்த்திக் கல்லூரி மாணவனாகவும் நடிக்கிறார்கள்.

கடந்த ஒருமாதம் காலமாகவே இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது தலைப்பிட்டு மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என இப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளனர்.

படத்தையும் ஒரு நல்ல நாளா பார்த்து ரிலீஸ் செய்யுங்க…

Vijay Sethupathi and Gautam Karthik movie titled Oru Nalla Naal Paathu Solren

‘நடிகர்கள் சம்பளத்த கொடுங்க; எங்ககிட்ட ஏன் கேட்கிறீங்க?’ விஷாலுக்கு தியேட்டர் ஓனர்ஸ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு டிக்கெட்டிலிருந்து விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் தரப்படும் “என்கிற விஷாலின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அப்போது காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் P கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசும் போது…

“நான் விஷால் பேசியதைத் தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் என்று அறிவிப்பு செய்து இருக்கிற விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். இப்போது அவர் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

அவர், தான் சம்பந்தப்பட்ட சங்கம் சார்ந்து பேசினால் பிரச்சினை இல்லை.
ஆனால் எங்கள் சங்கம் தொடர்பாக அறிவிப்பு செய்ய அவர் யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

அவருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?

அவர் ஒன்று செய்யலாம். அவர் விவசாயிகளுக்காக சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துக் கொடுக்கலாம்.

நடிகர் சங்கத்தைக் கூட்டி எல்லா நடிகர்களும் தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து அதை விவசாயிகளுக்கு வழங்கலாம

தயாரிப்பாளர் சங்கத்தைக் கூட்டியும் இப்படி ஏதாவது வழங்கலாம்.

ஆனால் எங்களை இதில் சம்பந்தப் படுத்துவது ஏன்? வருகிற படங்களில் 99% படங்கள் லாபமில்லை.

இந்நிலையில் தம்பி விஷால் ஒன்றும் புரியாமல் இப்படிச் சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. இது அவருக்கு இது பற்றித் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.

அவருக்கு அனுபவம் இல்லை. அப்படி என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

இப்படி எதுவும் புரியாமல் குழப்படி செய்யக் கூடாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது.

இது பற்றி விஷாலோடு ஊடகங்களிலோ அல்லது எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Theatre owners condemn to Vishal scheme about 1 rupee from 1 ticket

More Articles
Follows