பாஜக பார்வையில் எதிர்ப்பு நியாயமானதே… மெர்சல் தயாரிப்பாளர் முரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படம் வெளியான நாள்முதல் பல்வேறு எதிர்ப்புகளை பாஜக.வினரிடமிருந்து பெற்று வருகிறது.

இதனையடுத்து மெர்சல் தயாரிப்பாளர் முரளி கூறியதாவது…

“மெர்சல் சர்ச்சை மனவேதனை தருகிறது. சாதாரண மக்களுக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே படத்தின் கரு.

மெர்சல் அரசுக்கு எதிரான திரைப்படம் அல்ல. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் படத்தை எடுக்கவில்லை.

தவறான புரிதலை ஏற்படுத்தும் அந்த காட்சிகளை நீக்க வேண்டுமானால் அதற்கும் தயார்.

பாஜகவினர் பார்வையில் அவர்களது எதிர்ப்பு நியாயமாகவே உள்ளது.

இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டவர்களை சந்தித்தோம். நேரில் சந்திக்கும் எங்கள் முடிவை பாஜகவினர் பாராட்டினார்கள்.

நாங்கள் அளித்த விளக்கத்தை பாஜகவினர் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Producer Murali clarifies Mersal issue with BJP Leaders

மெர்சல் படத்தில் எதுவும் நீக்கப்படவில்லை… கன்பார்ம் செய்தார் ஹேமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனம் இந்தியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பாஜக.வினர் இந்த வசனங்களை எதிர்க்க தொடங்கினர்.

ஆனால் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி, தேசிய கட்சித் தலைவர்கள் வரை கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் மெர்சல் படத்தில் பேசிய வசனங்கள் சரியானதே என கூற தொடங்கிவிட்டனர்.

இதனால் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுமா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே வலுக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திலிருந்து எந்தக் காட்சிகளும் நீக்கப்படவில்லை. வசனங்களும் நீக்கப்படவில்லை.

எங்களுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அரசுக்கும் பா.ஜ.க நண்பர்களுக்கும் நன்றி.

தேவைப்பட்டால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி அறிவித்துள்ளார்.

There is no cuts and Mute dialogues in Mersal says Producer Hema Rukmani

கமலை தொடர்ந்து மெர்சல் படத்திற்கு கவுதமியும் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே மெர்சல் படத்திற்கு ஆதரவாக கமல்ஹாசன், சரத்குமார், ஜிவி, பிரகாஷ், விஜய்சேதுபதி, பிரசன்னா உள்ளிட் பல நடிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கவுதமியும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது…

நானும் மெர்சல் படம் பார்த்தேன். அதில் ஜிஎஸ்டி குறித்தோ அல்லது டிஜிட்டல் இந்தியா குறித்தோ எதுவும் தவறாக குறிப்பிடப்படவில்லை.

என தன் ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகை கௌதமி.

There is nothing wrong in Mersal regarding GST says Gautami

கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 தயாரிப்பாளர் மாற்றம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட படம் இந்தியன்.

கமல் இரு வேடங்களில் நடித்த இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.

அண்மையில் இதன் இரண்டாவது பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்தோம்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இப்படம் ஜனவரியில் தொடங்கவுள்ளதாகவும், தில் ராஜு இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் `இந்தியன்-2′ படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Indian 2 producer may be changed

பாஜக-வினர் ஏன் மெர்சலை அரசியலாக்குகிறார்கள்? – எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வசனங்கள் பாஜ கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதற்கு அந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பாஜக.வினருக்கு பல்வேறு தரப்பினரும் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதன்முறையாக விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர் அவர்கள் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் குடிமகனாக நான் பேசுகிறேன். கருத்து சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம்.

அரசியல் தொடர்புள்ளவர்கள்தான் சென்சார் வாரியத்திலும் உள்ளனர். அவர்கள்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்துள்ளனர்.

ஆனால், சென்சார் அனுமதித்த ஒரு படத்தில் காட்சிகளை நீக்க ஆளும் கட்சி சொல்கிறது. அவர்கள் ஏன் இதை அரசியலாக்குகிறார்கள்? என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Dont know Why BJP making Mersal in Political issue says SA Chandrasekar

இந்தியளவில் விவாதிக்கப்படும் மெர்சல் சர்ச்சை; ராகுல்-ஸ்டாலின் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிஎஸ்டி வசனங்களால் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் இந்தியளவில் பிரபலமாகியுள்ளது.

இந்த விவகாரம் இணையத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ட்விட்டரில் #MersalVsModi மற்றும் #TamiliansVsModi என்ற ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் மெர்சலுக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதில் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

அதில்…

‘மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாசாரம் மற்றும் மொழியின் பெருமையைப் பிரதிபலிப்பதாகும்.

தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கச் செய்ய முயல வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

இவரைப்போல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தன் ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… கருத்து சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்.

விமர்சனத்தை முடக்க நினைக்கும் பாஜகவின் முயற்சி, ஜனநாயக விதிகளுக்கு முரணானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi and MK Stalin support for Mersal movie

More Articles
Follows