தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ் தாணு.
எவரும் எதிர்பாராத வகையில் விளம்பர யுக்திகளை கையாள்பவர் இவர்.
இதனால் இவரது தயாரிப்பில் நடிக்க முன்னணி நடிகர்களே அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளியான ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி ஆகிய படங்களை தயாரித்திருந்தார்.
இப்படங்களை அடுத்து தனது மகன் இயக்கிய இந்திரஜித், விக்ரம் நடித்த ஸ்கெட்ச், தனுஷ் நடித்த விஐபி2 ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார்.
தற்போது அவர் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை இன்று ஜுலை 31ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Producer Kalaippuli S Thanu going to announce his next movie