விஜய்யின் ‘பிகில்’ சின்னப்படம் தான்..; புரொடியூசர் கே ராஜன் கொடுத்த ஷாக்கிங் அப்டேட்

விஜய்யின் ‘பிகில்’ சின்னப்படம் தான்..; புரொடியூசர் கே ராஜன் கொடுத்த ஷாக்கிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கண்மணி பாப்பா’. இதில் தமன்குமார், மியாஸ்ரீ, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ஆரி, அசோக், ஈரோடு மகேஷ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சி.வி.குமார் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் ஆரி பேசும்போது,

“ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு நல்ல துவக்கம் இருக்கும். இந்தவிழாவில் முதலில் தயாரிப்பாளரை அழைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள், அது நல்ல ஆரம்பம். ஏனென்றால் தயாரிப்பாளர் தான் எல்லாம். சிறிய படங்கள் விழா என்றால் உடனடியாக வருவேன்.

பிக்பாஸுக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் ஆடியோ விழா இது. இப்படத்தின் ஹீரோ தமன் தான், நான் இங்கு வரக்காரணம். நம் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் ஒரு முக்கியமான படம். அதேபோல் கண்மணி பாப்பா படமும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படத்தைப் பார்த்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது சந்தோசமாக இருக்கிறது.

மானஸ்வி குழந்தையை நிறைய படங்களில் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சிறிய தயாரிப்பாளர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டு தயாரிக்க வரவேண்டும். ஓடிடி-யில் எல்லாப்படங்களையும் வாங்குவதில்லை.

இந்தப்படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் நல்ல லாபத்திற்கு வியாபாரம் செய்திருக்கிறார். அது பெரிய சந்தோஷம். சாய்தேவ் பின்னணி இசையில் நன்றாக வேலை செய்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீமணி இந்தப்படம் மட்டுமல்ல… இன்னொரு கதையும் சிறப்பாக வைத்திருக்கிறார் என்றார்கள். இந்தப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். தமனும் நானும் ஒரே பிரச்சினையை சந்தித்தவர்கள். தமனுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கு. 2022-ஆம் ஆண்டு எல்லாருக்கும் நல்லதாக அமையவேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,

“இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்தப்படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார். சின்னப்படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். “நீங்கள் வந்தால் கலை கட்டும்” என்றார்கள். எனக்கு இந்தப்படம் கல்லா வேண்டும் என்று தான் ஆசை. இந்தப்படத்தின் டைட்டில் எவ்வளவு அழகான தமிழ் டைட்டில்.

தமிழ் பேசும் நாயகிகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். தயவு செய்து ஹீரோக்களும், இயக்குநர்களும் மனது வைக்கவேண்டும். ஏனென்றால் இப்போதெல்லாம் நடிகைகள் தேர்வில் தயாரிப்பாளரின் முடிவு எதுவுமே இல்லை. ஜெய்பீம் படத்தில் அந்தக் கேலண்டர் விசயம் எப்படி தயாரிப்பாளருக்கு தெரியாமல் இருக்கும்? என்று சிலர் கேட்டார்கள்.

உண்மை என்னவென்றால் தயாரிப்பாளர்களுக்கு படப்பிடிப்பில் எதுவுமே தெரியாது. பணம் தேவை என்பதை மட்டும் தான் தயாரிப்பாளர்களிடம் கேட்பார்கள். எது சின்னபடம் எது பெரிய படம் என்றால்… என்னைப் பொறுத்தவரையில் பிகில் சின்னப்படம். அது நஷ்டம். எந்தப்படம் வெற்றிப்பெறுகிறதோ அதுதான் பெரிய படம். முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் நன்றாக இருக்கவேண்டும். பிகில் தயாரிப்பாளர் இப்போ எங்கே இருக்கார்.?

தயாரிப்பாளர் படம் எடுக்க வராவிட்டால் ஹீரோவிற்கு சம்பளம் இல்லை. லைட்பாய்க்கு வேலை இல்லை. ஒரு படத்தின் ஹீரோயின் பொட்டு மேட்சிங்காக இல்லை என்று ஒரு மணி நேரம் ஷுட்டிங்கை இழுத்தடித்தார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும்.

ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இந்தப்படத்தின் ஹீரோ அடுத்தப்படத்தில் பெரியாளாக வந்தால் அதற்கு காரணம் இயக்குநர் தான். இயக்குநர்கள் 35 நாட்களுக்குள் சின்னப்படங்களின் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும். கேரளாவில் ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டதிற்காக அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் அந்த நடிகருக்கு ரெட்கார்ட் போட்டார்கள். அந்த ஆண்மை இங்குள்ள சங்கத்திற்கு இருக்கிறதா?

அடுத்தவாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருக்கிறேன். அவரிடம் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் மானியம் கொடுங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப்படம் பெரிய வெற்றிப்பெற வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது,

“கண்மணி பாப்பா படத்தை நான் பார்த்துவிட்டேன். படம் நல்லாருந்தது. ரொம்ப குவாலிட்டியா பண்ணிருந்தாங்க. இயக்குநர் திறமையாக எடுத்திருந்தார். தமன் நன்றாக நடித்திருந்தார். குட்டிப்பெண் மானஸ்வி சிறப்பாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் நன்றாக வேலை செய்திருக்கிறார். படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

ஹீரோ தமன் பேசும்போது,

“இது ஒரு இசையமைப்பாளர் அசம்பிள் செய்த படம் இது. ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். இந்தப்படம் மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இப்படம் இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்றார்.

இசை அமைப்பாளர் சாய் தேவ் பேசும்போது,

இது எனக்கு முக்கியமான நாள். நான் நிறைய படங்களில் வேலை பார்த்தாலும் இது எனக்கு மிக முக்கியமான படம். இந்தப்படத்தில் நான் இசை அமைப்பாளர் மட்டும் அல்ல. எக்ஸிகியூட்டிவ் புரோடியூசரும் கூட. இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு மிகவும் நன்றி. இயக்குநர் பெரிய ஹார்ட்வொர்க்கர். அவருக்கு இந்தப்படம் ரொம்ப முக்கியம். ஹீரோ தமன் எங்கள் பேமிலியாகி விட்டார். மற்றும் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குனர் ஸ்ரீமணி பேசும்போது,

“இறைவனுக்கு நன்றி. மழை மற்றும் டிராபிக் எல்லாவற்றையும் தாண்டி கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் சிறிதாக துவங்கியது. ஆனால் எல்லோரின் உழைப்பாலும் பெரிய படமாக மாறி விட்டது. இந்தப்படத்தை நான் தமிழில் மட்டும் தான் எடுத்தேன். ஆனால் சுந்தர் சார் இந்தி, தெலுங்கு என மூன்றாக்கியிருக்கிறார். கொடைக்கானல் பகுதியில் மானஸ்வி, தமன் சகோ உள்பட என்னோட டீம் எல்லாரும் நிறைய கஷ்டப்பட்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசை அமைப்பாளர் சாய்தேவ் இந்தப்படத்திற்காக நிறைய உதவிகள் செய்தார். எல்லாருடைய வாழ்க்கைக்கும் பெரிய சப்போர்ட் தேவை. எனக்கு என் மனைவி தான் பெரிய சப்போர்ட் அவருக்கு பெரிய நன்றி” என்றார்.

Producer K Rajan’s controversial speech about movie Bigil

மீண்டும் லோகேஷ்-அட்லி என அடுத்த ரவுண்டுக்கு ரெடியான விஜய்

மீண்டும் லோகேஷ்-அட்லி என அடுத்த ரவுண்டுக்கு ரெடியான விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிய தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் விஜய்.

ஒரு கட்டத்தில் விஜய் ரசிகர்களே வெறுத்துப் போன நிலையில் தன் இயக்குனரை மாற்றினார்.

அதன்பின்னர் ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் இயக்கினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இதன்பின்னர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் விஜய்.

இதன்பிறகு மீண்டும் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாரம் விஜய். இப்படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம்.

ஷாரூக்கான் நயன்தாரா நடித்து வரும் லயன் படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay’s upcoming films with his favourite directors

‘பேச்சுலர்’ நாயகியுடன் ‘பிக்பாஸ்’ முகேன் சூடான குளியல்..; ஓ இதான் ‘மதில் மேல் காதல்’.?

‘பேச்சுலர்’ நாயகியுடன் ‘பிக்பாஸ்’ முகேன் சூடான குளியல்..; ஓ இதான் ‘மதில் மேல் காதல்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் முகேன்.

இவர் நாயகனாக ‘வேலன்’ என்ற படத்தில்/ நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முகேன் ராவ் உடன் ‘பேச்சுலர்’ பட நாயகி திவ்ய பாரதி ஜோடியாக இணைந்துள்ளார்.

இவர்களுடன் சாக்க்ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, KPY பாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ‘மதில் மேல் காதல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

‘வெப்பம்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சனா அலிகான் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

காதலின் உறவை தக்க வைத்துக்கொள்ள அன்பு மட்டுமே போதாது என்பதே இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் & திவ்ய பாரதி இருவரும் நெருக்கமாக நுரை தளும்ப தளும்ப குளியல் போட்டப்படி உள்ளனர்.

Bigg Boss Mugen and Divya Bharti joins for romantic film

கொரோனா பாதித்த கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்.? டிஸ்சார்ஜ் எப்போ.?

கொரோனா பாதித்த கமல்ஹாசன் எப்படி இருக்கிறார்.? டிஸ்சார்ஜ் எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில்

அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமல்ஹசான் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவித்தார்.

அதன்படி (சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா) மருத்துவமனையில் சிகிச்சைச்சாக அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

கமல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 3ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்தி இருக்குமாறு மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Health update of MNM Leader Kamal Haasan

‘த்ருஷ்யம் 2’ தந்த உற்சாகத்தால் மீண்டும் நடிப்பில் ஆர்வமான சுஜா வருணி

‘த்ருஷ்யம் 2’ தந்த உற்சாகத்தால் மீண்டும் நடிப்பில் ஆர்வமான சுஜா வருணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘த்ருஷ்யம் 2’. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தையும், அன்பான பண்பு நலனையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுஜா வருணி. அவருடைய கடின உழைப்பிற்கு மீண்டும் அங்கீகாரமும், அடையாளமும் கிடைத்திருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர்களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், ‘சுசீஸ் ஃபன்’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார்.

‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என தெரிய வருகிறது.

Suja Varunee talks about her telugu film Drishyam 2

என்னை இயக்குனராக்க விஜய் வெறியோடு இருந்தார்.. – ஸ்டண்ட் சில்வா

என்னை இயக்குனராக்க விஜய் வெறியோடு இருந்தார்.. – ஸ்டண்ட் சில்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3ல் வெளியாகிறது.

இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினரை சந்தித்தனர்.

இவ்விழாவில்

தயாரிப்பாளர் A.L அழகப்பன் பேசியதாவது…

மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் புகழ் கிடைக்க வேண்டும். சினிமாவில் மற்ற துறைகளில் இருந்து நிறைய பேர் இயக்குநர் ஆகியுள்ளார்கள்

ஆனால் ஸ்டண்ட் துறையிலிருந்து யாரும் அதிகமாக ஆனதில்லை, அதில் மாஸ்டர் சில்வா மிகப்பெரிய புகழ் பெற வேண்டும். அவரது திரைப்பட விழாவில் கலந்து கொள்வது மகிழச்சி. என்னை நடிகனாக்கிய படத்தில் சமுத்திரக்கனி பணிபுரிந்திருக்கிறார். என் மேல் மற்றவர்களை விட நிறைய நம்பிக்கை வைத்தார். சமுத்திரகனி இன்றைய சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருவது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network, பேசியதாவது..,

‘விநோதய சித்தம் படத்திற்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் விஜய் மிகச் சிறந்த படைப்புகளை தரக்கூடியவர். அவருடன் “சித்திரைச் செவ்வானம்“ படத்தின் மூலமாக இணைந்ததில் மகிழ்ச்சி. விஜய் உடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் உருவாக்கி வருகிறோம் அடுத்தடுத்து அது வெளியாகும். எங்கள் நிறுவனத்தின் மூலம் நல்ல கதைகளை தொடர்ந்து ரசிகர்களுக்கு தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். “சித்திரைச் செவ்வானம்“ உங்கள் அனைவரையும் கவரும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

கௌசிக் நரசிம்மன், VP Content, ZEE5 Tamil பேசியதாவது…

ரசிகர்களுக்கு தொடர்ந்து ஜீ5 லிருந்து நல்ல நல்ல, படைப்புகள் வரும் என்று சொன்னேன். அதே போல் நிறைய படைப்புகள் வரவுள்ளது. இப்படத்தில் ஒரு அப்பாவாக அனைவரும் உணரும்படி நடித்திருக்கிறார் சமுத்திரகனி, சில்வா மாஸ்டர் படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் விஜய் உடன் இணைந்து ஒரு வெப் சீரிஸ் செய்து வருகிறோம் அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும்படியான படைப்பாக இருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் பேசியதாவது..

எதிர்பாராத விதமாக தான் இந்த படத்தில் வந்தேன். சில்வா மாஸ்டர் என்னை விட சீனியர். அனைவரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்துள்ளேன் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது…

சில்வா மாஸ்டர் படம் என்றவுடனே, இப்படம் ஆக்சன் படம் என்று தான் நினைத்தேன். ஆனால் இயக்குநர் விஜய் கதை எழுதுகிறார் என்றவுடனே என்ன செய்யப் போகிறார்கள் என்று தோன்றியது. இந்த படத்தில் உணர்வுபூர்வமான அப்பா மகள் கதை தான் இருந்தது. எல்லா ஆக்சன் மாஸ்டரிடமும் எமோஷனல் பக்கம் தான் அதிகம் இருக்கிறது. அவர்களின் கதையில் எமோஷன்ஸ் தான் அதிகம் இருக்கிறது.

கல்லுக்குள் ஈரம் போல் அவர்களுக்குள் ஒரு ஈரமான பக்கம் இருக்கிறது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். சில்வா மாஸ்டர் அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். சமுத்திரகனி ஒரு அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். பூஜா மகளாக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படம் உணர்வுப்பூர்வமாக உங்களை கவரும் நன்றி.

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது…

மாஸ்டர் சில்வா, 1996 ல் நண்பரிடம் கடன் வாங்கி 100 ரூபாய் பணத்துடன் சென்னை வந்தவர். அவர் இன்று இவ்வளவு சாதனைகள் படைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் காமெடி அரசியல்வாதி பாத்திரத்தை செய்துள்ளேன். இது சில்வா மாஸ்டர் செய்ய வேண்டிய பாத்திரம், ஆனால் என்னிடம் தந்துவிட்டார். சமீபத்தில் தனுஷ் ஒரு படத்தில் ஒரு பாத்திரத்தை நான் தான் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார், ஆனால் கடைசியில் அதை சில்வா மாஸ்டர் செய்கிறார் என்றார், எனக்கு வர வேண்டியது அவருக்கும் அவருக்கு வர வேண்டியது எனக்கும், வந்து சேர்கிறது. சில்வா தனது ஞானத்தின் கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறான்.

நாம் தாய் வழி சமூகம், நம் மொழியில் தந்தையின் கதையே இல்லை அதை சில்வா உடைத்து செய்திருக்கிறான். அவன் வெற்றி பெற வேண்டும். சமுத்திரகனி அண்ணனை பற்றி சொல்லவே தேவையே இல்லை, எந்த கதாப்பத்திரம் செய்தாலும் சிங்கிள் டேக்கில் செய்யும் திறமை கொண்டவர். அவர் இன்னும் வளர வேண்டும். சாம் CS இசை நன்றாக இருக்கிறது. ஒரு பணக்காரனாக இருந்து நல்லவனாக ஒழுக்கமானவனாக வளர்வது அரிது. ஆனால் அனைத்தும் கிடைத்தும் ஒழுக்கமானவனாக வளர்ந்துள்ளார் இயக்குநர் விஜய். இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகை ரீமா கலிங்கல் பேசியதாவது…

விஜய் சார் போன் செய்து, சில்வா மாஸ்டர் இயக்குகிறார் என்றபோது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று தான் முதலில் நினைத்தேன். திரைக்கதையை படித்தபின் ஆச்சர்யமாக இருந்தது. சில்வா சார் இப்படி ஒரு படம் செய்கிறார் என நம்ப முடியவில்லை. அவருடன் இணைந்து பணிபுரிந்த பின் தான் தெரிந்தது அவர் எத்தனை குழந்தை மனம் கொண்டவர் என்று, மிக நல்ல மனிதர். சமுத்திரகனி சாருடன் முன்பே படம் செய்ய வேண்டியது, இப்போது அவரை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.

இரண்டு பக்க டயலாக் இருந்தாலும் நொடியில் முடித்து விடுகிறார், அவருடன் நடித்தது மகிழச்சி. பூஜா அட்டகாசமாக நடித்திருக்கிறார், அவரை திரையில் பார்க்க ஆவலுடன் உள்ளேன். இப்படத்தில் அனைவருமே ஒரு குடும்பமாக பெரும் ஆதரவு தந்தார்கள். இப்படத்தில் போலீஸ் பாத்திரம் மிக சவாலாக இருந்தது. நிறைய பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. ஒரு நடிகராக எனக்கு திருப்தி அளித்தது. எல்லோரும் இந்தப் படத்தை ஜீ5 ல் பாருங்கள் நன்றி.

நாயகி பூஜா கண்ணன் பேசியதாவது…

முதல் முறை மேடையில் பேசுகிறேன். விஜய் சார், சில்வா மாஸ்டர் இருவருக்கும் நன்றி. அக்காவுடன் ஷூட்டிங் போயிருக்கிறேன், ஆனால் முதல் முறை, கேமரா முன் நிற்கும் போது தயக்கம் இருந்தது. அதை உடைத்து அனைத்தையும் சொல்லி தந்தார் சில்வா மாஸ்டர். சமுத்திரகனி சாருடன் வேலை செய்ய பயமாக இருந்தது,

ஆனால் அறிமுகமான உடனே “எப்படிம்மா இருக்க’ எனக்கேட்டு என்னை இயல்பாக்கி, ஒரு மகளாகவே பார்த்து கொண்டார் அவருக்கு நன்றி. இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவம் ஒரு உணர்வுபூர்வமான படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் விஜய் பேசியதாவது…

இந்த நாள் எங்கள் எல்லோருக்கும் முக்கியமான நாள். ஒரு நல்ல கதையை கொண்டு சேர்க்க ஆதரவுடன் துணை நிற்கும் ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. அவர்கள் நல்ல கதைகள் மட்டும் தான் செய்கிறார்கள். சாம் CS இடம் எனக்கு பிடித்தது, சின்ன படம் பெரிய படம் என இல்லாமல், எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். அவருக்கு நன்றி. ரீமா அவர்கள் இப்படத்தை ஒப்புக்கொண்டு, மிக அழகாக செய்து தந்ததற்கு நன்றி. அவர் கதாபாத்திரமாகவே மாறி விட்டார்.

பூஜாவை ‘கரு’ பட காலத்திலிருந்தே தெரியும். இந்தப்படம் செய்யும் போது, சில்வா மாஸ்டரிடம் நான் தான் இந்தப்படத்திற்கு பூஜா சரியாக இருப்பார் என்று சொன்னேன். அவர் தனக்கு வந்த நிறைய வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். ஆனால் இந்தக் கதை கேட்ட பிறகு, இப்படத்தை ஒப்புக்கொண்டார். நடிப்புக்காக பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். அவர் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார்.

சமுத்திரகனி சார் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அவருடன் தலைவி படத்தில் வேலை செய்த போது, அவர் நடிப்பை பார்த்து பிரமித்திருக்கிறேன். இப்படத்தில் காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் நடித்தார். அவருக்கு நன்றி. சில்வா மாஸ்டர் தலைவா படம் மூலம் தான் அறிமுகம். அதன் பிறகு என் எல்லா படத்திற்கும் அவர் தான் ஆக்சன் மாஸ்டர். அவர் ஒரு ஆக்சன் காட்சியை சாதாரணமாக செய்ய மாட்டார். கதையோடு எப்படி வருகிறது கதைக்கு என்ன தேவை என்று பார்த்து, பார்த்து செய்வார்.

2015 ல் நான் எழுதி வைத்த கதையை நான் எடுக்க வேண்டுமென நினைத்த போது சில்வா மாஸ்டர் தான் ஞாபகத்திற்கு வந்தார். அவருக்குள் இயக்குநர் இருக்கிறார் என தெரியும். சின்ன எமோஷனல் காட்சிக்கும் அழுது விடுவார். மாஸ்டரை விட சிறப்பாக இப்படத்தை யாரும் செய்து விட முடியாது. அவர் இயக்குநராக இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

இந்த படத்தில் வேலை செய்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீ5 நல்ல கதைகள் மட்டும் தேடி தேடி செய்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. என் தம்பி சில்வா, நானும் அவனும் எதிரெதிர் வீட்டில் தான் இருந்தோம். அவனை பல வருடங்களாக தெரியும். அப்பா படத்திற்கு, அப்பா பற்றி பேசுங்கள் என்று நிறைய பேரிடம் கேட்டிருந்தேன் அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து விட்டேன். அவன் அப்பா தவறி விட்ட ஏக்கத்தை, பேசியிருந்தான். இப்படத்தில் அந்த குழந்தை கை தூக்கி தன் அப்பா விரலை பிடிக்கும். அதில் நான் அப்பாவாக இருந்தேன் அவன் மகனாக இருந்தான் அவ்வளவு தான் எங்களுக்குள்ளான உறவு.

இந்தக்கதை என்னை உலுக்கியது, இந்தப்படம் இந்த சமூகத்தை கேள்வி கேட்கும். இந்த படத்தில் விஜய் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. அவன் ஒரு நல்ல ஆத்மா. பூஜா சில காட்சிகளில் நம்மையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார். அவர் இன்னும் பெரிய தளத்திற்கு செல்வார். ரீமா இப்போது அவரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும், கண்ணிலேயே பேசுவார். இதில் நடித்த குட்டீஸ் எல்லாம் சூப்பராக செய்திருக்கிறார்கள். சில்வாவின் மகன் இப்படத்தில் நடித்திருக்கிறார் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. இன்று உங்களுடன் இணைந்து படத்தை பார்க்க போகிறேன். உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் சில்வா மாஸ்டர் பேசியதாவது…

என் சின்ன வயதிலிருந்தே, என்னை இங்கிருப்பவர்கள் தான் என் கை பிடித்து அழைத்து சென்றிருக்கிறார்கள். நான் இயக்குநர் ஆக வேண்டும் என என்னை விட வெறியாக இருந்தவர் விஜய் தான். தெரியாத ஆட்களுக்கே உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர்.

தலைவா படத்திலிருந்தே எனக்குள் இயக்குநர் இருக்கிறார் என்று ஊக்கம் தந்து, என்னை இயக்குநர் ஆக்கும் வரை உடன் நின்றவர் விஜய் தான். படம் பார்த்து கண் கலங்கி, என்னால் கூட இப்படி செய்திருக்க முடியாது என பாராட்டினார் அவருக்கு நன்றி. இந்தப்படத்தை பார்த்து நல்ல கதையென்று ஆதரவு தந்த ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. இந்தப்படத்தில் அண்ணனாக, அப்பாவாக உடன் நின்று தன் சொந்தப்படம் போல் செய்து தந்தார் சமுத்திரகனி அண்ணன். அவரால் தான் இந்தப்படம் முழுமையாக வந்துள்ளது.

பூஜாவை விஜய் சார் தான், பார்க்க சொன்னார், அவரைப் பார்த்தவுடன் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். கலைவாணி மேடமிடம் பயிற்சி எடுத்து கொண்டு வந்து நடித்தார். அவரிடமிருந்து இன்புட் எடுத்து, சில காட்சிகள் எடுத்திருக்கிறோம் நன்றாக நடித்திருக்கிறார்.

ரீமா கலிங்கல் திரைக்கதை கேட்டார். ஒவ்வொரு காட்சிக்கும், முன்னதாகவே தயாராகி வந்தார். திரைக்கதையில் சின்ன மாற்றம் செய்தாலும் கேட்பார் அப்போது தான் அவரே சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார் என தெரியும், மிக மிக நன்றாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பால் சில காட்சிகளில் அழ வைத்து விட்டார்கள். மானஸ்வி 8 வயது பெண் கிளிசரின் போடாமலே அவளுக்கு அழுகை வருகிறது. சொல்லும் நேரத்தில் சிரிக்கிறாள் அவள் மிகப்பெரிய உயரத்தை தொடுவாள்.

தமிழில் பேசி, பாட்டெழுதி இசையமைக்கும் திறமை சாம் CS யிடம் இருக்கிறது. அவரது இசை அட்டகாசமாக வந்திருக்கிறது. என்னுடன் இணைந்து இப்படத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

“சித்திரைச் செவ்வானம்” திரைப்படத்தில், பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ‘ஸ்டண்ட் சில்வா’ முதல் முறையாக இயக்குநர் பணியை ஏற்றுள்ளார். முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் K.G . வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர். பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.

‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது

Vijay wanted me as a film director says Stunt Silva

More Articles
Follows