படுக்கைக்கு அழைக்கும் நடிகைகள் பெயரை வெளியிடுவேன் : நேஹா ஞானவேல்ராஜா

படுக்கைக்கு அழைக்கும் நடிகைகள் பெயரை வெளியிடுவேன் : நேஹா ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gnanavelraja Wife Nehas contraversy tweetசினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் கூறி வருவதை பார்த்து இருக்கிறோம்.

ஆனால் நடிகைகள் படு மோசம். விபச்சாரிகளை விட கேவலமாக நடந்துக் கொள்கிறார்கள் என ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள். அதுவும் திருமணமானவர்களை குறி வைத்தே இதை செய்கின்றனர்.

ஆண்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் வாய்ப்புக்காக இதை செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையை கூற வேண்டும் என்றால் திரையுலகை சேர்ந்த சில கதாநாயகிகள் தான் சில பெண்களின் வாழ்க்கையை பாழாக்குகின்றனர்.

கதாநாயகிகள் சிலரின் உண்மை முகம் தெரியாமல், அவரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

விபச்சார அழகிகளை விட மோசமான நடத்தை கொண்ட கதாநாயகிகளை அம்பலப்படுத்த வேண்டியது அவசியம்.

ஒரு பெண்ணின் கணவர் என்று தெரிந்தே, அந்த ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் கதாநாயகிகளை தெருவில் வைத்து நாய்களை அடித்து விரட்டுவது போல் விரட்டினால் கூட தவறில்லை.

இதுபோன்ற நாயகிகள் சிலரை தான் எச்சரித்தும் பார்த்துவிட்டதாகவும், கெஞ்சியும் பார்த்துவிட்டதாகவும் நேஹா தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த கதாநாயகிகள் கேட்பது போல் தெரியவில்லை என்பதால் அந்த நடிகைகள் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதனால் பல நடிகைகள் பயத்தில் இருக்கிறார்களாம்.

Producer Gnanavel rajas wife Neha rages against heroines

producer neha tweet

க்யா ரே 6 பைஃட்டிங்கா.?; காலாவில் ரஜினியின் அதிரடி ஆக்சன்ஸ்

க்யா ரே 6 பைஃட்டிங்கா.?; காலாவில் ரஜினியின் அதிரடி ஆக்சன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Kaala movie Rajinikanth having 6 fight scenesரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் அடுத்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்திருந்தார்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் இப்படம் தள்ளிப்போகும் என செய்திகள் வந்தன.

ஆனால் வரும் செய்திகளில் உண்மையில்லை.

நாங்கள் எந்த விதமான அறிவிப்பையும் வழங்கவில்லை என காலாவை வெளியிடும் லைகா படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் காலா படத்தின் கிளைமேக்ஸ் எது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காலா டீசரில் ரஜினிகாந்த் அனல் பறக்கும் நெருப்பில் சண்டைப்போடுவது போல் ஒரு சில காட்சிகள் வரும், அது தான் காலா படத்தின் கிளைமேக்ஸ் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் 6 சண்டைக்காட்சிகள் உள்ளதாம். இடைவேளைக்கு பின்னர் முழுவதுமே ஆக்‌ஷன் காட்சிகள்தான் என தெரிய வந்துள்ளது.

In Kaala movie Rajinikanth having 6 fight scenes

போட்டோவுல அனிருத் இல்ல நான்தான்; சீக்ரெட்டை உடைத்த மாடல்

போட்டோவுல அனிருத் இல்ல நான்தான்; சீக்ரெட்டை உடைத்த மாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Model Shaano clarifies that Anirudh lady getup photo rumoursலைகா தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா என்ற படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இவர் இந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

அப்போதுதான் ஒரு பெண் போட்டோ இணையத்தில் வைரலானது.

அட நம்ம அனிருத்துதான் அந்த பெண். அப்படியே இருக்காரு என்று சொல்ல அது வைரலானது.

இந்நிலையில் அந்த சம்பந்தப்பட்ட பெண் மாடல் ஷனோ என்பவர் ‘நான் ஒரு மாடல், இது என் புகைப்படம் தான்’ என விளக்கம் அளித்து இருக்கிறார்.

அனிருத்துக்கு எதிராக தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

மற்றொரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதான் இது…

Model Shaano clarifies that Anirudh lady getup photo rumours

Model Shaano clarifies that Anirudh lady getup photo rumours

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் கூண்டோடு ராஜினாமா

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் கூண்டோடு ராஜினாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dindigul Rajini Makkal Mandram 146 Members decided to resignகடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார் ரஜினி.

அதனையடுத்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

பின்னர் மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த தம்புராஜ் அவர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

தம்புராஜ் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளனர்.

ரஜினி மன்ற மாவட்ட பொறுப்பாளர்கள் 8 பேர், ஒன்றிய பொறுப்பாளர்கள் 109 பேரும் நகரப் பொறுப்பாளர்கள் 22 பேர், மாநகர பொறுப்பாளர்கள் 7 பேரும் ராஜினாமா செய்ய முடிவு.

ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 146 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மா.செ தம்புராஜை தன்னிச்சையாக நீக்கியதுடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த் ரசிகரே இல்லை என்று புகார் அளித்துள்ளனர்.

ராஜினாமா செய்யவுள்ள 146 பேரும் விரைவில் ரஜினியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளனர்.

Dindigul Rajini Makkal Mandram 146 Members decided to resign

தியேட்டர் ஓபனாச்சு; ஆனா புதுப்படம் இல்லையே… ரசிகர்கள் வருத்தம்

தியேட்டர் ஓபனாச்சு; ஆனா புதுப்படம் இல்லையே… ரசிகர்கள் வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theatreடிஜிட்டல் முறையில் தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை திரையிட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

இத்துடன் கேளிக்கை வரி குறைப்பு உள்பட சில கோரிக்கைகளையும் முன் வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் சென்னை தியேட்டர்கள் இதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.

அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தியேட்டர்கள் உரிமையாளர்கள் தங்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றாலும் புதுப்படங்கள் இன்று வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவில்லை.

எனவே பிரபல நடிகர்களின் பழைய படங்கள், டப்பிங் படங்கள், ஆங்கிலம் மற்றும் பிறமொழி படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வருகின்றன.

புதிய படங்கள் திரைக்கு வராததால் படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்துள்ளது.

தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்தை கைவிட்டு புதுப்படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கர்நாடக நாற்காலிக்காக நாடகம்; மோடியை சாடிய கமல்ஹாசன்

கர்நாடக நாற்காலிக்காக நாடகம்; மோடியை சாடிய கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and modiநமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து தமிழர்களின் தலையாய பிரச்சினையாக இருந்து வருவது காவிரி நீர் விவகாரம்தான்.

அண்மையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.

அதில், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்காக நம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழக எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு இதில் மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

`பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்.’ என்று பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows