‘சூரரைப் போற்று’ OTT ரிலீஸ்.; சூர்யாவுக்கு நஷ்டம் தான் : தயாரிப்பாளர் தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டடித்துள்ளது.

கடந்த மே மாதம் படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படம் ரிலீஸ் தள்ளி போனது.

150 நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் படத்தை ஆன்லைனில் வெளியிடுவதாக அறிவித்தார் சூர்யா.

ஏற்கெனவே இவரின் மனைவி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்த போதே தியேட்டர்கள் உரிமையாளர் எதிர்ப்பை வாங்கி கட்டிக் கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் இந்த அதிரடி முடிவு குறித்து பிரபல சேனலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்துள்ள பேட்டியில்….

‘சூரரைப் போற்று’ படம் பிரம்மாண்டமான படம். அது ஓடிடி.க்கான படமே இல்லை. தியேட்டரில் வெளியிட வேண்டும்.

ஆனால் தியேட்டர்கள் திறப்பது எப்போது என யாருக்கும் தெருயவில்லை. துபாய், மலேசியா நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டும் 5% ஆடியன்ஸ் மட்டுமே வருகின்றனர்.

இதனால் எவருக்கும் லாபமில்லை.

கொரோனா தடுப்பூசி வரும்வரை மக்களிடம் பீதி இருக்கத்தான் செய்யும்.

நிச்சயமாக சூர்யாவின் முடிவு அவருக்கு நஷ்டம் தான். தியேட்டரில் ரிலீஸ் செய்தால் பெரிய லாபத்தை அடைவார்.”

இவ்வாறு தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சரண்யா பொன்வண்ணனின் தந்தையும் மலையாள பட இயக்குனருமான ஏபி ராஜ் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் மலையாள பட இயக்குனரும் , நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் தந்தையுமான ஏ.பி.ராஜ் காலமானார். (வயது 95)

முக்தா சகோதரர்களின் நெருக்கமான நண்பர் ஆவார்.

தற்போதைய தமிழ் சினிமாவின் அம்மா நடிகை சரண்யா பொண்வண்ணனின் தந்தை ஆவார்.

“தேன் மழை” படத்தை மலையாளத்தில் Remake 1967 இயக்கியவர்.

மலையாளத்தில் மட்டும் 1963 – 1984 களில் 65 படங்களை இயக்கியிருக்கிறாராம்.

பல சிங்கள படங்களையும் இயக்கி இருக்கிறார்.

தமிழில் ‘கை நிறைய காசு’ படத்தை இயக்கியவர்.

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.

Antony Basker Raj (21 April 1925 – 23 August 2020), also known as A. B. Raj or A. Bhaskar Raj (in Sinhala Cinema), was an Indian director of Malayalam movies. Since 1951 to 1960, he directed ten Singalese (Sinhala) movies followed by directing 65 Malayalam movies from 1963 till 1984.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வெற்றி படங்களில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘கனா’ படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

“Article 15” (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக இப்படம் உருவாகவுள்ளது. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க Romeo Pictures சார்பாக ராகுல் தயாரிக்கின்றார்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

BREAKING சினிமா & டிவி சூட்டிங் நடத்த மத்திய அரசு அனுமதி; நிபந்தனைகள் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*திரைப்படங்கள், தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்துவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.*

*மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். சில நெறிமுறைகள் பின்வருமாறு…*

*படப்பிடிப்புக்கு வருவோரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.*

*படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.*

*படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.*

*உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.*

*உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கையுறை கட்டாயம் அணிய வேண்டும்.*

*படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.*

*குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.*

*படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.*

*வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.*

கார்த்திக் சுப்புராஜ் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ‘பூமிகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ராபர்ட் ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க படத்தொகுப்பாளாராக ஆனந்த் பணிபுரிகிறார்.

‘பூமிகா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார்.

மோஷன் போஸ்டரைப் பார்க்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்டுப்பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.

இயக்குநர் ரதீந்திரன் ஏற்கெனவே ஐஸ்வர்யா ராஜேஷ், அபய் தியோல், உள்ளிட்டோரை வைத்து ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தை இயக்கினார்.

இன்னும் இத்திரைப்படம் திரைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘லாபம்’ படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் ‘லாபம்’.

இவர்களுடன் கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் & 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘லாபம்’ பட ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில்… தொழிற்சாலை இயங்கினால் தான் விவசாயம் செய்ய முடியும் என்று இங்கே நம்ப வைக்கப்படுவதாகவும், ஆனால் உண்மையில் விவசாயம் செய்தால் மட்டும் தான் இங்கே தொழிற்சாலை இயங்க முடியும்.”

என பன்ச் டயலாக் பேசியுள்ளார் விஜய்சேதுபதி.

More Articles
Follows