வரிவிலக்கு அளிக்க லஞ்சம்; வீட்டுக்கு லஞ்ச் கேட்கிறாங்க… – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளரும் நடிகருமான கே. ராஜன் பேசியதாவது…

“சினிமா மோசமான சூழ்நிலையை அடைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்களால் அவதிப்படுகிறார்கள்.

பெப்சி தொழிலாளர்கள் உழைக்கும் தோழர்கள்தான். அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் நாங்களும் நன்றாக இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது டிராவலிங் பேட்டா கேட்கிறார்கள். அதுவும் 24 மணி நேரம் டிராவல் செய்து சூட்டிங் வந்தால் டபுள் பேட்டா கேட்கிறார்கள்.

அதுவும் ஒரே ஒருவர் இப்படி செய்கிறார். அந்த மீட்டிங் போய்விட்டு வந்தேன். அதான் இங்கு வர நேரம் ஆகிவிட்டது.

இந்த விழாவுக்கு படத்தின் நாயகி இனியா வரவில்லை என்றார்கள். சில நடிகர்கள் நடிகைகள் இப்படிதான் செய்கிறார்கள். அவர்களுக்கு திமிரு.

அதான் தங்கள் படவிழாவுக்கு கூட வராமல் இருக்கிறார்கள். ஒரு நாள் கால்ஷீட் கூட கொடுக்க வேண்டாம். 3 மணி நேரம் வந்தால் போதும்.

எம்ஜிஆர். கலைஞர், ஜெயல்லிதா எல்லாரும் சினிமா துறையை சார்ந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் கேளிக்கை வரி கொடுக்க, ரூ. 5 லட்சம் லஞ்சமாக கேட்கிறார்கள். சரி அதையும் கொடுத்து தொலைக்கிறோம்.

படம் பார்க்க வந்தால், அவர்கள் வீட்டுக்கு கூட பார்சல் சாப்பாடு வாங்கி செல்கிறார்கள்.

எல்லா மாநிலத்திலும் கேளிக்கை வரியில்லை. அங்கே சினிமா நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி.

இங்கே அரசியல்வாதிகள் லஞ்சம் பேர்வழிகள்.

அம்மா ஆட்சி என்கிறார்கள். ஆனால் பணத்தாசை பிடித்து இருக்கிறார்கள்” என கடுமையாக பேசினார்.

Producer cum Actor K Rajan slams TN Govt Ministers and Officials

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஒன்லைன் இதுதான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஜோடி இணைந்து நடித்து வருகிறது.

இதில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க, ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் சிங்கிள் பாடலை மட்டும் நாளை ஜீலை 27ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் ஸ்டில்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் ஒன்லைன் பற்றிய தகவல் வந்துள்ளது.

நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிலர் ஒரே பிரச்சினையால் பாதிக்கப்பட்டாலும் ஒன்று கூடாமல் தனியாக புலம்பி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பதே இதன் கதைக்களம் என சொல்லப்படுகிறது.

தானாக சேரும் இந்த கூட்டத்தின் தலைவனாக சூர்யா நடிக்கிறார் என்பது தங்களுக்கு தெரிந்த செய்திதான்.

Thaana Serndha Kootam movie one line story revealed

 

 

தானா சேர்ந்த கூட்டத்தால் விஜய்யை முந்திய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தன் பிறந்தநாளை கடந்த ஜீலை 23ஆம் தேதி கொண்டாடினார்.

எனவே அவர் நடிப்பில் உருவாகிவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்பட போஸ்டரை 62K அதிகமானோர் ரிட்வீட் செய்துள்ளனர்.

இதற்கு முன்பு விஜய் வெளியிட்ட அவரது மெர்சல் போஸ்டர்களை பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை 51k மற்றும் 42k பேர் மட்டுமே ரிட்வீட் செய்துள்ளனர்.

இதனால் விஜய்யை விட சூர்யா முந்திவிட்டார் என கூறப்படுகிறது.

ஆனால் சூர்யாவை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ட்விட்டர் பின் தொடர்கின்றனர்.

விஜய்யை 12 லட்சம் பேர் மட்டுமே பாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TSK first look broke Mersal retweet records

பெப்சி இல்லாம சூட்டிங் நடத்துங்க; பாத்துப்போம்… விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமா சூட்டிங் என்றால் அதில் மிக முக்கியமானவர்கள் தொழிலாளர்கள்தான்.

இவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விதிமுறைகள் அமைத்து செயல்படும் அமைப்பே பெப்சி.

தயாரிப்பாளர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கும் (பெப்சி) இடையே, 3 ஆண்டுக்கு ஒரு முறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த முறை நியமித்த புதிய சம்பள விகிதம் குறித்து ’பெப்சி’யில் உள்ள சில சங்கங்களுக்குள் பிரச்னைகள் நிலவி வருகிறது.

எனவே அவ்வப்போது சில படங்களின் சூட்டிங்கின் போது படப்பிடிப்புகள் திடீரென நிறுத்தப்படும்.

பின்னர் சமாதானம் ஆகி சூட்டிங் நடைபெற்று வருவது வாடிக்கையானது.

ஆனால் இப்பிரச்சினை விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கவே தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்தபின்னர் விஷால் கூறியதாவது…

’ஊதிய பிரச்சினையை காரணம் காட்டி சூட்டிங்கை நிறுத்த பெப்சி ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை.

ஊழியர்கள் மீது எப்போதும் மரியாதை உள்ளது. ஆனால் தயாரிப்பாளர்களை அவமானப்பட அனுமதிக்க மாட்டோம்.

எனவே பெப்சி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களை வைத்து இனி சூட்டிங்கை நடத்திக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Producer Council President Vishal decision on FEFSI

எங்களின் அசுர உழைப்பை ‘விவேகம்’ காட்டும்… அக்ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படம் பற்றி கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் கூறியதாவது…

”இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது.

அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது.

பல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம்.

தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார்.

எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனை பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம்.

பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்பட குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர்.

அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர்.

‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

Vivegam movie will say our hardwork says Aksharahassan

பாகிஸ்தானிலும் அஜித் பாட்டு ஹிட்டு; அனிருத் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்-அனிருத்-சிவா இணைந்த வேதாளம் படம் இரண்டு ஆண்களுக்கு முன்பு வெளியானது.

இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் இன்று வரையிலும் ஏதாவது ஒரு இடத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு புருனே நாட்டு இளவரசி இப்பாடலை விரும்பி பார்த்து கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இப்பாடல் தற்பாது பாகிஸ்தானிலும் பட்டைய கிளப்புகிறதாம்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல எஃப்எம்மில் பணிபுரியும் ஆர்ஜே அட்லீல் கான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆலுமா டோலுமா’ அருமையான பாடல்.

எனக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை. ஆனால் கேட்க கேட்க சந்தோஷமாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அவரது அந்த டுவிட்டை ரீடுவிட் செய்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

அத்துடன் ‘இசைக்கு மொழியே கிடையாது’ எனவும் பதிவிட்டுள்ளார் அனிருத்.

In Pakistan also Vedhalam movie song Aaluma Doluma goes viral

Anirudh Ravichander Retweeted
RJ Adeel Khan‏ @rj_adeel
@anirudhofficial Aaluma Doluma is an amazing song! Even I can’t understand a single word but enjoying! From PAKISTAN

More Articles
Follows