வேலைக்காரனுக்கு இப்படியொரு விளம்பரமா? ஒரு கோடி அபராதம் கட்ட விஷால் நோட்டீஸ்?

sivakarthikeyan nayantharaசிவகார்த்திகேயன், நயன்தாரா, சிநேகா, பகத்பாசில் ஆகியோர் நடிப்பில் வளர்ந்துள்ள வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார்.

இப்படத்தை ஆர்.டி.ராஜா தன் 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரித்திருக்கிறார்.

வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் டீசர் வெளியானதை முன்னிட்டு விளம்பரம் படுத்தும நோக்கதில் நாளிதழ்களில் முழு பக்கம் விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர்.

இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் கண்டனங்களை தெரிவித்திருந்தார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

முழுபக்கம் விளம்பரம் செய்யக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் விதிமுறைகள் இருக்கும்போது இவர்கள் இப்படி செய்யலாமா? என சங்கத் தலைவர் விஷாலிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து தற்போது இதன் தயாரிப்பாளர் ரூ. ஒரு கோடியை அபராதமாக சங்கத்திற்கு கட்ட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.

இந்த விளம்ரத்தில் வேலைக்காரன் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ள விஜய் டிவியும் இணைந்துள்ளதால் இரு நிறுவனங்களும் இந்த அபராத்தை கட்ட வேண்டும் என சொல்லப்படுகிறது.

ஆனால் மற்றொரு புறம் இது தயாரிப்பாளர் தரப்பு கொடுத்த விளம்பரம் அல்ல. விஜய் டிவி நிறுவனம் கொடுத்துள்ளது.

எனவே தயாரிப்பாளர் சங்க விதிமுறைகள் டிவி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் செய்திகள் வந்துள்ளன.

Producer Council finned Rs 1crore to Vijay TV and Velaikkaran Producer

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன்…
...Read More
`வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து `எஸ்.கே.13' படத்திலும்…
...Read More

Latest Post