பிஆர்ஓ யூனியன் ரிசல்ட்… டைமண்ட் பாபு, ஜான் உள்ளிட்டோர் தேர்வு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள் பி.ஆர்.ஓக்கள்.

இவர்களே தங்களின் பத்திரிக்கை மூலமாக சினிமா செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.

இந்நிலையில் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியனுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தேர்தல் நடப்பது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக சில பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.

ஆனால் இம்முறை அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்காண்டுகளாக விஜயமுரளி தலைவராகவும், பெரு துளசி பழனிவேல் செயலாளராகவும், மௌனம் ரவி பொருளாளராகவும் பதவி வகித்தனர்.

64 உறுப்பினர்கள் கொண்ட இந்த யூனியனில் 58 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்தனர்.

இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…

தலைவர் பதவிக்கு டைமண்ட் பாபு மற்றும் ஆதம்பாக்கம் ராமதாஸ், நெல்லை சுந்தர்ராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் தலைவராக டைமண்ட் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆறாவது முறையாக தலைவராகி இருக்கிறார்.

மற்றவர்கள் விவரம் இதோ…

  • துணைத் தலைவர்கள் – பி.டி.செல்வகுமார், வி.கே.சுந்தர்
  • பொதுச் செயலாளர் – திரு. A. ஜான்
  • பொருளாளர் – விஜயமுரளி
  • இணைச் செயலாளர் – நிகில் முருகன் மற்றும் யுவராஜ்

செயற்குழு உறுப்பினர்கள் :-

  • வெட்டுவானம் சிவகுமார்
  • மேஜர் தாசன்
  • அந்தணன்
  • பாலன்
  • ஆறுமுகம்
  • கிளாமர் சத்யா
  • சக்திவேல்
  • சரவணன்
  • ரேகா

வெற்றி வாகை சூடிய அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

சிம்புவுடன் 5வது முறையாக இணைந்த மியூசிக் டைரக்டர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு.

மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

இதில் மூன்று விதமான கெட்டப்களில் சிம்பு நடிப்பதால், இப்படத்திற்கு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) என பெயரிட்டுள்ளனர்.

தற்போது இவருக்கு ஜோடியாக நடிக்க 3 நாயகிகள் மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக தான் ஒப்பந்தமாகியிருப்பதாக தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

இவர் சிம்பு படத்திற்கு இசையமைப்பது இது ஐந்தாவது முறையாகும்.

தந்தையர் தினம்… மகளுடன் போட்டோவை வெளியிட்ட கமல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதா, பிதா, குரு, தெய்வம்… என்பதை சான்றோர்கள் சொல்ல கேட்டு இருப்போம்.

கடவுளே ஆனாலும் நம்மை பெற்ற அம்மா-அப்பா அவர்களுக்கு பிறகுதான் வருகிறார்.

எனவேதான் ஒவ்வொரு வருடமும் இவர்களைப் போற்றும் வகையில் அன்னையர் தினம் மற்றும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தையொட்டி கமல்ஹாசன் ஒரு சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தன் மகள் ஸ்ருதியுடன் தான் எடுத்துக் கொண்ட சில படங்களை வெளியிட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள எல்ஏ தியேட்டரில் எடுக்கப்பட்ட படங்கள் அவை.

இந்த தியேட்டரின் அருகில்தான் சபாஷ் நாயுடு சூட்டிங் நடைபெறுகிறது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகாயத்திலும் அசத்தும் ‘கபாலி’…. ரஜினி ரஜினிதான்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி படம் ரிலீசாகிதான் பல சாதனைகளை படைக்கும் என்பதில்லை.

அப்படம் வருவதற்கு முன்பே, பல வினோத நிகழ்வுகளையும் நிகழ்த்த தவறுவதில்லை.

தளபதி படம் வெளியான சமயத்தில் அப்படத்தின் பெயரில் சோப் முதல் பனியன், ஜட்டி என அனைத்தும் விற்பனைக்கு வந்தது.

இதனைத் தொடந்து பாட்ஷா, படையப்பா, பாபா ஆகிய படங்களில் பெயர்களிலும் வியாபார பொருட்கள் வந்தன.

இந்நிலையில் தற்போது உலக திரையுலக வரலாற்றில், எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத புகழ் ரஜினியால் கபாலி படத்திற்கு கிடைத்துள்ளது.

இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஏர் ஆசிய விமான நிறுவனம் இணைந்துள்ளதை எமது தளத்தில் படித்திருப்பீர்கள்.

தற்போது ‘கபாலி’ ரிலீஸ் தினத்தில் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாம் இந்நிறுவனம்.

காலை 6.00க்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ‘கபாலி சிறப்பு விமானம்’ 7.00க்கு சென்னை வந்தடையும்.

அன்றைய தினமே மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் அதே விமானம் 4 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

இந்த டிக்கெட்டில் அனைத்தும் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது கபாலி படத்தின் டிக்கெட், ஆடியோ சிடி, காலை உணவு, மதிய உணவு, ஸ்நாக்ஸ், குளிர்பானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தியேட்டருக்கு சென்று வர வாகன வசதி என அனைத்தும் அடங்கும் என தெரிவித்துள்ளனர்.

இப்படத்திற்காக டிக்கெட்டின் விலை ரூ.7,860 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் விஜய்-சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு விருந்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதற்கு அடுத்த நாள் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவிருப்பதால் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் உற்சாகத்தில் துள்ளி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி. ராஜா மிகுந்த பொருட் செலவில் ரெமோ படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், கேஎஸ் ரவிக்குமார் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, அதே நாளில் டைட்டில் சாங்கையும் வெளியிட இருப்பதாக ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அப்பாடலின் தொடக்க வரிகளையும் வெளியிட்டுள்ளனர்.

ரெமோ நீ காதலன்.. ரெமோ நீ காதலன் தானே…

லவ்வுன்னு வந்துட்ட இறங்கி செஞ்சுடுவானே…

என தொடங்குவதாக தெரிவித்துள்ளனர்.

#Remo nee kadhalan remo nee kadhalan dhaane…Love-nu vandhuta erangi senjiduvane.. #RemoTitleSong from June 23rd 🙂

அஜித் படம் தள்ளிப்போக தனுஷ்தான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த வேதாளம் படம் வெளியாகி கிட்டதட்ட 8 மாதங்களை கடந்து விட்டது,

ஆனால் அஜித்தின் புதிய படம் இதுவரை தொடங்கப்படவில்லை.

அஜித் படத்தை சிவா இயக்குவார் என்றும் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல்கள் வந்தாலும் அதன்பின்னர் அது பற்றிய பேச்சுக்கள் எழவில்லை.

தல 57 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஆனால் இந்நிறுவனம் தனுஷின் தொடரி படத்தின் வெளியீட்டு பணிகளில் பிஸியாக இருப்பதால், அஜித் படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows