தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார் பிலிம் நியூஸ் ஆனந்தன்.
இவர் தமிழ் திரைப்பட செய்திகள் அனைத்தும் “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.
தமிழ்த் திரையுலகச் செய்திகள் அனைத்தையும் வருடாவருடம் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் கடந்த 2016ம் ஆண்டு காலமானார்.
அவருடைய மறைவுக்குப் பிறகு, தென்னிந்திய சினிமா மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான, பெருதுளசி பழனிவேல் தொடர்கிறார்.
கடந்த வருடம் வெளியான திரைப்படங்கள், திரையுலக நிகழ்வுகள், உதிர்ந்து போன நட்சத்திரங்கள் என பலவிதமான சினிமா செய்திகளைத் தொகுத்து கடந்த ஆண்டு ஒரு புத்தகமாகவே வழங்கியிருந்தார்.
இந்நிலையில், சினிமாவிற்கான இந்த தகவல் களஞ்சியத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை நிகழ்ந்த தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் “துளசி சினிமா நியூஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக தற்போது வெளியிட்டுள்ளார்.
PRO Peruthulasi Palanivel launched book about 2018 Tamil Cinema news