‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் நடித்தது குறித்து பிரியா மணி பேட்டி

‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) வெப் சீரிஸில் நடித்தது குறித்து பிரியா மணி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Priya Maniமறைந்த பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா என்ற ஜாம்பவான் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா மணி, தொடர்ந்து பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட ஜாம்பவான்களின் படங்களில் நடித்ததோடு, அமீரின் ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். நடிகைகள் பலர் இருந்தாலும், நடிக்க கூடிய நடிகைகள் என்று கேட்டால், டக்கென்று நினைவுக்கு வரும் நடிகைகளில் பிரியா மணி முக்கியமானவராக இருக்கிறார். தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய பிரியா மணி, தற்போது இணைய தொடர் உலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தற்போது இந்திய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படும் இணைய தொடர்களில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வரும் நிலையில், ‘தி ஃபேமிலி மேன்’ (THE FAMILY MAN) என்ற வெப் சீரிஸ் மூலம் பிரியா மணி இணைய தொடரில் அறிமுகமாகிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி இதோ,

திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நீங்கள் வெப் சீரிஸில் நடிக்க சம்மதித்தது ஏன்?

ஒரு வலைத்தொடரில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த போது நான் உணர்ந்த முதல் மற்றும் முக்கிய விஷயம், எந்த இரண்டாவது எண்ணங்களும் இல்லாமல் அதற்காக செல்ல வேண்டும் என்பது தான். அனைத்து துறையில் உள்ள நடிகர்களும் வலைத்தொடரில் நடிக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக பாலிவுட்டில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களும் வலைத்தொடரில் நடிக்கும் போது, நா. ஏன் நடிக்க கூடாது?. என்னிடம் முதல் முறையாக இயக்குநர் ராஜ் மற்றும் டி.கே கதை சொல்லும் போதே, நான் சுசித்ரா கதாபாத்திரத்தில் இறங்கிவிட்டேன். என்னுடைய கதாபாத்திரம் மட்டும் அல்ல, ‘தி ஃபேமிலி மேன்’ சீரிஸில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

உங்களுடன் நடித்த பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பயி பற்றி…?

மனோஜ் பாஜ்பயி சார் கதையின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உளவுத்துறையில் பணியாற்றும் அவர், தனது நடுத்தர குடும்ப வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துவதற்காக பாடுபடுவார். சமகால சமுதாயத்தின் பணிபுரியும் பெண்களை பிரதிபலிக்கும் சுசித்ரா, வேலை மற்றும் குடும்பம் இரண்டிற்கும் சமமான இடத்தை கொடுக்க வேண்டும் என்று நினைப்பதோடு, ஸ்ரீகாந்த் தனது வேலையில் முழுமையான கவனம் செலுத்துவதாகவும், குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததாகவும் அவர் உணருவது இருவருக்கும் இடையிலான முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும், சந்தோஷமாக இருக்கும் இந்த குடும்பத்திற்கு இரு முனைகளில் இருந்தும் அழுத்தங்கள் வருகின்றன. அதையும் தாண்டி இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக நேசிக்கிறார்கள். இப்படி அழகான குடும்ப கதையோடு நகரும் இந்த வெப் சீரிஸில் பல திருப்பங்களும் நிறைந்திருக்கின்றன.

சினிமாவுக்கு, வெப் சீரிஸுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?

திரைப்பட படப்பிடிப்புக்கும், வெப் சீரிஸ் படப்பிடிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒரு நாளில் ஐந்து முதல் ஆறு காட்சிகளை படமாக்கி முடித்துவிடுகிறார்கள். இது ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்துடன், ’தி ஃபேமிலி மேன் சீசன் 2’ வுக்கான படப்பிடிப்பையும் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.

அமேசானில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸில் இந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான மலையாள நடிகர் நீரஜ் மாதவ், பாலிவுட்டின் சென்சேஷனல் நடிகர் குனால் பகத் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

ஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

otrai panai maram trailerஒற்றைப் பனைமரம் படத்தின் டிரைலரை வெளியிட்டார் பா.ரஞ்சித்

ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம்.

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும் ; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருக்கும் இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலரை இயக்குனர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டார்.

அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார்.

புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணையும் வடிவேலு.?

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கமலுடன் இணையும் வடிவேலு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu to joins Kamalhassans nextவடிவேலு சினிமாவிலும் நடிக்காவிட்டாலும் அவர் இல்லையென்றால் ஒரு மீம்ஸ் கூட இருக்காது என்ற நிலைதான் தற்போது வரை இருக்கிறது.

அவர் மீண்டும் நடிக்க வரமாட்டாரா? என்ற லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர்.

இந்த நிலையில் லைகா தயாரிப்பில் கமல் நடிக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஏனென்றால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ பட விவகாரத்தில் லைக்காவிற்கும், வடிவேலுவுக்கும் இதுவரை மோதல் நிடீத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கமலுடன் சிங்காரவேலன், தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vadivelu to joins Kamalhassans next

ஜெயம் ரவியை அடுத்து விக்ரமுடன் இணையும் கோமாளி டைரக்டர்

ஜெயம் ரவியை அடுத்து விக்ரமுடன் இணையும் கோமாளி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comali directors next movie with Chiyaan Vikram2019 சுதந்திர தினத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் ‘கோமாளி’.

ஜெயம் ரவி, யோகி பாபு நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம்மை இயக்க உள்ளார்.

அஜய் ஞானமுத்துவின் படம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டாலும் அதற்குள் குறுகிய கால படமாக கோமாளி இயக்குனருடன் இணைகிறார்.

Comali directors next movie with Chiyaan Vikram

பாலா இயக்கத்தில் சூர்யா-ஆர்யா-அதர்வா மெகா கூட்டணி

பாலா இயக்கத்தில் சூர்யா-ஆர்யா-அதர்வா மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bala going to direct Suriya Arya and Atharva againசேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் உள்ளிட்ட தரமான பல படங்களை இயக்கியவர் பாலா.

இதில் நான் கடவுள் படத்தில் ஆர்யாவையும், பரதேசி படத்தில் அதர்வாயும் இயக்கியிருந்தார்

இந்த நிலையில் மீண்டும் இந்த நாயகர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனோ தானோ என்ற இருந்த சூர்யா என்ற ஒரு நடிகரை அடையாளப்படுத்தியவரே பாலா தான். எனவே அவர் கேட்டால் சூர்யா மறுக்கவா போகிறார்.

Bala going to direct Suriya Arya and Atharva again

இனிமே டப்பிங் பேச கூட வெளியே வரமாட்டாராம் அஜித்

இனிமே டப்பிங் பேச கூட வெளியே வரமாட்டாராம் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dubbing theatre in Actor Ajith Homeதான் நடிக்கும் படத்திற்கு பூஜை போட்டால் கூட அதில் கலந்துக் கொள்ளாதவர் நடிகர் அஜித்.

பூஜைக்கே வராதவர் புரொமோசன், இசை வெளியீட்டு விழாவுக்கு வருவாரா?

தன் பட சூட்டிங் தவிர படம் சம்பந்தமாக எதிலும் கலந்துக் கொள்ளாதவர் அவர்.

மேலும் சினிமா தொடர்பான பொது விழாக்களிலும் அவரை பார்ப்பது அரிதான ஒன்று.

இந்த நிலையில் தனது வீட்டிலேயே சொந்தமாக டப்பிங் தியேட்டரை கட்டி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இனி மேல் தன் படத்திற்கான டப்பிங் பணிகளுக்கும் அவர் வெளியே வர மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

நடத்துங்க தல…

Dubbing theatre in Actor Ajith Home

More Articles
Follows