நிவின்பாலி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக பிரியா ஆனந்த்

nivin pauly and priya anandகேரளா மாநிலத்தில் காயம்குளம் என்ற பகுதியில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் கொச்சுன்னி.

இருப்பவர்களிடம் இருந்து பறித்து இல்லாதவர்களுக்கு கொடுத்தவர்தான் இந்த கொச்சுன்னி.

தற்போது இவரது பெயரில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.

ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கிவரும் மெகா பட்ஜெட் படமான இதில் காயம்குளம் கொச்சுன்னியாக நிவின்பாலி நடித்து வருகிறார்.

இதில் நாயகியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அந்தப் படங்களும் இணையத்தில் வெளியாகியது.

ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சினையால் அமலாபால் விலக, அவருக்கு பதிலாக ப்ரியா ஆனந்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

காயம்குளம் கொச்சுன்னி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post