பயணங்கள் முடிவதில்லை.: தனியார் ரயில்கள் தலைவலியா.? ஒரு பார்வை

private trainsஅண்மைக்காலமாகவே அரசின் பல துறைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வரிசையில் ரயில்வேயும் இணைந்துள்ளது.

151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

இந்த ரயில்களை, இரு வழிகளில் தினமும் இயக்கவும், வாரத்தில்,ஒரு நாள், இரண்டு நாள் மற்றும் மூன்று நாட்கள் இயக்கவும் அழைப்பு கோரப்பட்டுள்ளது.

இதே போல் தினசரி ரயில் இயக்க, தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்களூர் – சென்னைக்கு வாராந்திர ரயில், சென்னை – மும்பைக்கு வாரம் இருமுறை, கொச்சுவேலி கவுஹாத்தி இடையே வாரத்தில் மூன்று நாட்கள் என, 14 வழித்தடங்களில் ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேயில், தமிழகம்,கேரளா மற்றும் ஆந்திராவில், 14 வழித்தடங்களில், 26 தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

35 ஆண்டுகளுக்கு தனியாருக்கு லைசென்ஸ் தரப்படவுள்ளது.

இதில் தனியார் ரயில்களே கட்டணம் நிர்ணயம் செய்துகொள்ள முடியும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

(கையில் போதிய பணமின்றி பஸ் பயணத்தை தவிர்த்து ரயிலை நம்பியவர்கள் தற்போது மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள் எனத் தெரிகிறது.)

இந்த தனியார் ரயில்களில் டிரைவரும் கார்டும் (பாதுகாவலர்கள்) மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மற்ற ஊழியர்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஊழியர்களாக இருப்பார்கள்.

ஒரு ரயில் 16 பெட்டிகளுடன் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயண நேரம் பெரிய அளவில் குறையும்.

தற்போது உள்ளது போல இல்லாமல் தனியார் ரயில்கள் நவீன தொழில்நுட்ப வசதியுடன் வடிவைக்கப்படும்.

இந்த தனியார் ரயில் சேவை தொடர்பாக ரயில்வேயின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது…

இந்த நவீன ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.

ரயில்வேயில் பாதுகாப்பை அதிகப்படுத்தி, உலகத் தரம்வாய்ந்த பயணத்தைப் பயணிகளுக்கு வழங்கவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முதல்கட்டமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும்.

ரயிலை நிர்வாகம் செய்யும் தனியார் துறையினர், குறித்த நேரத்தில் இயக்குதல், நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல், ரயிலைப் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடுமுழுக்க பல்வேறு வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க மும்பை – 2, டெல்லி -2, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக என பிரிக்கப்படவுள்ளன.

சென்னை தொகுப்பில் மட்டும் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை – மதுரை, சென்னை – மங்களூர், சென்னை – கோயம்புத்தூர், திருச்சி – சென்னை, கன்னியாகுமரி – சென்னை, சென்னை – புதுடெல்லி, சென்னை – புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post