மீண்டும் விக்ரமுடன் இணையும் பிருத்விராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெள்ளித்திரை, மொழி, காவியத்தலைவன் உள்ளிட்ட நேரடி தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிருத்விராஜ்.

அண்மையில் வெளியான நான் சபானா என்ற இந்தி படத்தில் அதிரடி வில்லனாக நடித்தார் பிருத்விராஜ்.

இவர் தற்போது மலையாள சினிமாக்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.

மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் விக்ரமுடன் பிருத்விராஜ் இணைந்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Prithviraj again teams up with Vikram for Dhruva Natchathiram

தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் படம் வடசென்னை.

வெற்றி மாறன் இயக்கி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திலிருந்து அமலாபால் விலகியதையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

தனுஷ் உடன் ஜோடியாக நடிப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளதாவது…

நான் நினைத்தே பார்க்காத வாய்ப்பு வடசென்னை படத்தில் கிடைத்துள்ளது.

இப்பட வாயப்பு கிடைக்க காக்கா முட்டை படம்தான் காரணம்.

அந்த படம் மூலம் சிறந்த நல்ல நடிகை என்ற பெயரை பெற்ற நான், தற்போதுதான் தனுஷ் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடியாக சேரும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.” என்றார்.

Aishwarya Rajesh reaction to romance with Dhanush in Vada Chennai

விவேகம் டீசரில் அஜித் பன்ச் டயலாக்… ஸ்பெஷல் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கி வரும் விவேகம் படத்தின் டீசர் அஜித் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

இதனை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டீசர் குறித்த தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன.

இந்த டீசர் மொத்தம் 56 நொடிகள் ஓடக்கூடியதாம்.

இதற்கு முன்பு வெளியான வேதாளம் டீசரில் அஜித் மட்டுமே இடம் பெற்றிருந்தார்.

அதுபோல், இதிலும் அஜித் மட்டுமே இடம் பெறுவார் என்றும் அதில் நாயகிகள் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் இருக்கமாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த டிசரின் முதல் 30 நொடிகள் தெறிக்க விடும் அனிருத்தின் தீம் மியூசிக் மற்றும் அதன் பின்னர் 16 நொடிகளுக்கு பின்னணி இசையுடன் அஜித்தின் பன்ச் டயலாக் இடம் பெற்றுள்ளதாம்.

இறுதியான 10 நொடிகளுக்கு டைட்டில் கார்டு மற்றும் டெக்னீஷியன்கள் பெயர்கள் இடம் பெறும் என தெரிய வந்துள்ளது.

Ajith movie Vivegam teaser hot updates

சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக்கை வருகிற மே1 ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் சூட்டிங் போது, தன்னுடைய கனவு நிறைவேறியுள்ளதாக நயன்தாராவிடம் சொன்னாராம் சிவகார்த்திகேயன்.

அதாவது சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பின்னர், நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.

தற்போது அந்த ஆசை நிறைவேறிவிட்டதாக ஓபனாகவே கூறியுள்ளார் வேலைக்காரன்.

தனுஷ் படத்தில் அமலாபாலுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்து வரும் படம் வடசென்னை.

இப்படம் உருவாகும்போதே 3 பாகங்களாக உருவாகவுள்ளதை பார்த்தோம்.

சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அமலாபால் இதில் இருந்து விலகிவிட்டாராம்.

கால்ஷீட் பிரச்சினையால் அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கேரக்டரில் நடிக்கிறாராம்.

மகள் ஸ்ருதியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கு சமயத்தில் கமலுக்கு சிறு விபத்து ஏற்பட்டது.

அதனையடுத்து சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

இதனால் சபாஷ் நாயுடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது கமல், தயாராக இருக்கும்போது மற்ற கலைஞர்களின் கால்ஷீட்டுக்கள் கிடைக்காமல் இருக்கிறது.

அதிலும் முக்கியமாக இவரது மகள் ஸ்ருதிஹாசனின் கால்ஷீட் கமலுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

அவரின் கால்ஷீட் கிடைத்தவுடன் சூட்டிங்கை தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் சூட்டிங்கை நிறைவு செய்யவிருக்கிறாராம் இந்த அப்பா.

Kamalhassan waiting for Shruthis Call sheet

More Articles
Follows