தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.
இதனால் உலகின் பல நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட கடந்த 6 மாதங்களாக இதுபோன்ற உத்தரவுகளால் உலகமே ஸ்தம்பித்துள்ளது.
இதுவரை கொரோனா நோய்க்கு தீர்வு காணப்படாததால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”என்னிடம் பணிபுரியும் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டதற்காக சுகாதாரப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இப்பொழுது என் அம்மாவை கொரோனா டெஸ்ட் அழைத்து செல்கிறேன். அவருக்கு கொரோனா இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள்” என உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
