சூப்பர் ஸ்டாரின் தர்பாரில் தாறுமாறு வில்லன் ப்ரதீக் பாபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், லைகா, ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரது கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தர்பார்.

இதில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க, இதன் சூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ராஜ் பாபர், மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டீலின் மகனும், நடிகருமான ப்ரதீக் பாபர் நடிக்கவுள்ளார்.

அண்மையில் ப்ரதீக் நடித்த பாகி 2 படத்தைப் பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ், அவருக்கு இந்த வேடத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா பட ஹிந்தி பதிப்பில் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிக்கும்போது இவருக்கும் எமி ஜாக்சனுக்னும் இடையே காதல் ஏற்பட்டதும் அதன் பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டதும் கவனிக்கத்தக்கது.

தனது முதல் தமிழ் படத்திலேயே அதுவும் ரஜினி படத்திலேயே ப்ரதீக் பாபர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prateik Babbar confirmed to play baddie in Rajinis Darbar

ரூ.100 கோடி சம்பளத்தை நெருங்கும் ரஜினி; ‘தர்பார்’ பட்ஜெட் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் நடிகர் என்றால் அது நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்றால் அது மிகையல்ல.

தொடர்ந்து 40 வருடங்களாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டுக் கொண்டிருப்பதால் இவரின் சாதனைகளை யாராலும் முந்த முடியவில்லை.

எத்தனையோ தலைமுறை நடிகர்கள் வந்தாலும் படத்திற்கு படம் இவரது சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினி சம்பளம் மற்றும் பட மொத்த பட்ஜெட் தகவல்கள் வந்துள்ளன.

ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ. 100 கோடியை நெருங்குகிறதாம். அதற்கு அடுத்து முருகதாஸ் சம்பளம் ரூ. 30 கோடி எனவும் நயன்தாராவுக்கு ரூ. 5 கோடி எனவும், அனிருத்துக்கும் ரூ. 2.5 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

ஆக இவர்களின் சம்பளத்தை சேர்த்து படத்தின் பட்ஜெட் ரூ. 200 கோடியை தொடுகிறதாம்.

Rajinis salary and Darbar movie budget news updates

தளபதி 63 கதை திருட்டில் சிக்குவாரா அட்லி..? எழுத்தாளர் சங்கத்தில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏஆர். ரஹ்மான் இசையமைக்க இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என்று குறும்பட இயக்குனர் கே.பி.செல்வா எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார்.

இது தொடர்பாக செல்வா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், ‘பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன்.

அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து நான் நீதிமன்றத்திற்கு சென்றேன்.

ஆனால் அவர்களோ எழுத்தாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர்.

பின்னர் அட்லி தரப்பில் என்னை தொடர்புகொண்டு கதை விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம், உங்களின் படத்தை கைவிட்டுவிடுங்கள் என்றார்கள். அதன் பிறகு கதை திருட்டு தொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன்.

சங்க விதிப்படி உறுப்பினராகி 6 மாதம் கழித்த பிறகே கதை திருட்டு குறித்து புகார் அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். அது தொடர்பாக கடிதமும் அளித்தார்கள்.

எழுத்தாளர் சங்கத்தில் புகாரை ஏற்க மறுத்த பிறகு நான் மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளேன். கதை திருட்டு குறித்த வழக்கு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது என்றார் செல்வா.

சைக்கோ-வை முடித்துவிட்டு துப்பறிவாளன்-2வை இயக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்தார் விஷால். இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதன் பின்னர் சண்டக்கோழி2, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் விஷால் நடித்து முடித்துவிட்டார். அந்த படங்களும் வெளியாகிவிட்டது.

இதன்பின்னர் அயோக்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். அது ரிலீசாகவுள்ளது.

இதற்கு அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

அந்தப்படம் முடிந்த பிறகு துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு துப்பறிவாளன் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கலாம்.

துப்பறிவாளன் படத்திற்கு தன்னிடம் 4 பாகத்திற்கான கதை உள்ளது என்று மிஷ்கின் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தாழ்த்தப்பட்டோருக்கான சட்டப் பாதுகாப்பு பற்றி சொல்லும் ‘பற’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வ.கீரா எழுதி இயக்கியிருக்கும் படம் பற. சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ளனர். வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு சிபின் சிவன், இசை ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள் உமாதேவி, சினேகன், படத்தொகுப்பு சாபு ஜோசப், கலை இயக்கம் மகேஷ். இந்தப் ‘பற’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தைப் பற்றி ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்” என்றார்.

படத்தின் நாயகர்களில் ஒருவரான நித்திஷ் வீரா பேசும்போது, “இந்தப் படத்தைத் தொடங்கி வைத்தது இயக்குநர் பா.ரஞ்சித் அண்ணன்தான். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு நன்றி.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக உருவாகியுள்ளது. இயக்குநர் கீரா அவர்களோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இந்தப் படத்தின் மூலமாக நடந்துள்ளது” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவர் கொண்டிருக்கும் கொள்கையை பல தளங்களிலும் ஓங்கிப் பேசி வருகிறார்.

தாழ்த்தப்பட்டோருக்கான சட்டப் பாதுகாப்பு பற்றி இந்தப் ‘பற’ படத்தின் டிரெய்லரில் சொல்லியிருக்கிறார்.

இது இன்றைய சமகாலப் பிரச்சனை. புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். சாதிய ஒடுக்கு முறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப் படம் பேசும் என்று நம்புகிறேன். இந்த மாதிரியான படங்கள் வெற்றி பெற வேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாக்களிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மைதான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதால் அவர்களை குற்றம் சாட்டக்கூடாது” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “எப்போதும் பரபரவென்று இருப்பவர்கள்தான் பறக்க முடியும். அப்படியான பரபரப்பை கொண்டவர்கள்தான் உயரப் பறக்கிறார்கள். அவர்கள்தான் பறக்கவும் வேண்டும். அந்தப் பரபரப்பை எப்போதும் வைத்துக் கொண்டிருப்பவர் தம்பி சமுத்திரக்கனி. அவர் இந்தப் படத்தில் இருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் கீரா மிகத் திறமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் ‘பற’ படம் வெற்றிக்கொடி கட்டிப் பறக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.

படத்தின் இயக்குநர் வ.கீரா பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது.

வாழும்போது துரோகமும், வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப் ‘பற’ படத்தில் மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக் கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம்.

இந்தப் படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “நான் இந்தப் படத்தில் நடிக்க வந்ததற்குக் காரணமே பா.ரஞ்சித்தான். அவர்தான் இயக்குநர் வ.கீராவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

‘படத்தில் உங்களுக்கு காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர்’ என்றார் இயக்குநர். ‘நான் இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர்தான் இயக்குநர் கீராவும். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப் படம் அற்புதமான படம். அருமையான பதிவு” என்றார்

மோடி-ராகுல்தான் எதிரி…; லாரன்ஸ்-சீமான் மோதல் குறித்து சுரேஷ் காமாட்சி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீமானின் நாம் தமிழர் கட்சித் தொண்டர்களால் தான் வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக மறைமுகமாக சீமானுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு…

முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.

அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்து விடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்… பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.

அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.

எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது? அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்? ஒன்றும் புரியவில்லை. நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்..!! எங்கு நடந்தது? சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்?

எங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை. இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன?

நீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை. அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம்.

பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க… சிரிக்கிறதா? அழுறதான்னு தெரியலை. நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும். அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க… தேவையா??

ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ். அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்?

சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.

மற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்… அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்.

காசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்… ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள். வேண்டாமெனவில்லை..

அது எங்களுக்கு அவசியமே இல்லை. நீங்கள் எங்கள் இலக்கல்ல. நாங்கள் மோடி, ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம். உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை. ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

More Articles
Follows