தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரசன்னா தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார்.
இந்த 2 படங்களை எடுத்து சிவகார்த்திகேயனின் ரசிகர் ஶ்ரீனிவாசன் என்பவர் பிரசன்னாவை கிண்டலடித்து பேசினார்.
அதில் “பிரசன்னா தொகுத்து வழங்குவது போரடிக்கிறது. அவர் சுமாரான நடிகர். அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர்” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அவருக்குப் பதிலளித்த பிரசன்னா, “டியர் ஶ்ரீனி, தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை. நான் சுமாரான நடிகர் என்றால், அதை மேம்படுத்திக்கொள்கிறேன்.
இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன்” என குணமாக சொல்லி அதற்கு பதிலளித்துள்ளார்.
