பிரசன்னா-மடோனா-ஆண்ட்ரியாவின் த்ரில்லர் படத்தில் யோகி பாபு

பிரசன்னா-மடோனா-ஆண்ட்ரியாவின் த்ரில்லர் படத்தில் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prasanna Andrea and Madonna in Vidiyum Munn directors nextபவர் பாண்டி, நிபுணன் மற்றும் திருட்டுப் பயலே-2 ஆகிய படங்களை தொடர்ந்து பிரசன்னா ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறாராம்.

முக்கிய கேரக்டரில் மடோனா செபாஸ்டியன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

`விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் யோகி பாபு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Prasanna Andrea and Madonna in Vidiyum Munn directors next

அவசரமா எடுத்து அவஸ்தை படனுமா..? அஜித்தின் விஸ்வாச முடிவு

அவசரமா எடுத்து அவஸ்தை படனுமா..? அஜித்தின் விஸ்வாச முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Viswasam movie may not release for 2018 Diwaliவிவேகம் படத்தில் இணைந்த சத்யஜோதி, அஜித், சிவா ஆகியோர் மீண்டும் இணையும் படம் விஸ்வாசம்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே 2018 தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால் மார்ச் மாதம் துவங்க இருந்த படப்பிடிப்பு படஅதிபர்கள் போராட்டத்தால் தள்ளிப்போனது.

அடுத்த மாதம் மே 4-ஆம் தேதிதான் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது.

எனவே படத்தை அதற்குள் முடித்து தீபாவளிக்கு வெளியிட முடியுமா? என்ற சந்தேகம் படக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளதாம்.

மேலும் அவசரமாக படத்தை எடுத்து அவஸ்தை படனுமா? என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

எனவே படம் வெளியீட்டில் தாமதம் ஆகும் என தெரிய வந்துள்ளது.

மேலும் இப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் போஸ் வெங்கட் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிக்கவிருப்பதாக வந்த தகவல்களை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

நம் தளத்தில் அந்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ajiths Viswasam movie may not release for 2018 Diwali

ஜீன் மாதத்திற்குள் 25 படங்கள் ரிலீஸ்; கலை கட்டும் தமிழ் சினிமா

ஜீன் மாதத்திற்குள் 25 படங்கள் ரிலீஸ்; கலை கட்டும் தமிழ் சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil cinemaகடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை சுமார் 50 நாட்களாக எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை.

ஏப்ரல் 20ம் தேதிதான் ‘மெர்க்குரி மற்றும் முந்தல்’ ஆகிய படங்கள் வெளியாகின.

தற்போது புதிய விதிமுறைகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.

டங்களின் சென்சார் தேதியைப் பொறுத்தே புதிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒவ்வொரு தயாரிப்பாளரிடமிருந்தும் அவர்களது படங்களை வெளியிட 3 தேதிகளைக் குறிப்பிட சொல்லுமாறு கேட்டு இருக்கிறார்களாம்.

அதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு அந்தப் படங்களைப் பரிசீலித்து ஒன்றுகொன்று அதிகமான மோதல் இல்லாதபடி அனைத்துப் படங்களுக்கும் சரியான வெளியீட்டுத் தேதியை பிரித்துக் கொடுத்து வருகிறார்கள்.

அதன்படி இப்போதைக்கு ஜுன் மாதம் வரையிலான படங்களுக்கான தேதியை கொடுத்துவிட்டதா கூறப்படுகிறது.

மேலும் ஒரு வருடத்திற்கு உண்டான படங்களின் வெளியீட்டுத் தேதியை குறித்துக் கொடுக்க உள்ளார்களாம்.

அதன்படி, “பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், பாடம், தியா ஆகிய நான்கு படங்கள் ஏப்ரல் 27ல் இந்த வாரம் வெளியாகிறது.

இதனையடுத்து ஜீன் 7ல் காலா ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலா ரிலீஸை அறிவித்துவிட்டதால் மற்ற படங்களும் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.

ஜீன் மாதத்திற்குள் கீழே உள்ள படங்கள் வெளியாகவுள்ளன.

விஸ்வரூபம் 2, டிக் டிக் டிக், இரவுக்கு ஆயிரம் கண்கள், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஒண்ணு போதும் நின்னு பேசும், செம போத ஆகாத, வல்லவனுக்கும் வல்லவன், மோகினி, கீ, கோலி சோடா 2, இரும்புத் திரை, காளி, கடைக்குட்டி சிங்கம், சர்வர் சுந்தரம், செம, ஆண்டனி, ஒரு குப்பைக் கதை, மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

ஜூன் 7ல் ரிலீஸ் ஏன்..? காலா போட்ட கர்நாடகா கணக்கு

ஜூன் 7ல் ரிலீஸ் ஏன்..? காலா போட்ட கர்நாடகா கணக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala posterரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் சில வாரங்களுக்கு முன்பே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. ஏப்ரல் 27 அன்று படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்தார்.

ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்திய ஸ்டிரைக்கால் அனைத்து பட வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எந்த புதியப்படங்களும் வெளியாகவில்லை.

வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து ‘காலா’ ரிலீஸை ஜூன் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ஜூன் 15-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே ‘காலா’ ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் காலாவின் ரிலீஸ் தேதியை சுமார் 45 நாட்கள் தள்ளிவைத்தது ஏன் என்பது குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதனால் கர்நாடகாவில் ரஜினி படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என அங்குள்ள சில அமைப்புகள் தெரிவித்தன.

மே 12 அன்று நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலின் முடிவு மே 15 அன்று வெளியாகிவிடும்.

பின்னர் புதிய அரசு அமைப்பது, மற்ற நிலவரங்கள் இவை எல்லாம் நடந்து முடிவதற்குள் 2-3 வாரங்கள் ஆகிவிடும்.

அப்போது காலாவை ரிலீஸ் செய்தால் எங்கும் எந்த பிரச்சினையும் எழாது என்பதால்தான் இந்த ஏற்பாடு என சொல்லப்படுகிறது.

வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

supra goshiஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “ இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி..

இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு ஜி எஸ் டி இல்ல உனக்கு “

என்ற பட்டைய கெளப்பும் பாடலுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு டான்ஸ் மாஸ்டர் தீனா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

“எம் பேரு மீனாகுமாரி” பாடல் புகழ் அனிதா இந்த பாடலை கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் நடித்திருக்கும் மும்பை அழகி சுப்ரா கோஷிற்கு தமிழில் இதுதான் முதல் படம்.

அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

சிட்டி மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கெளப்பும் பாடலாக பாடல் உருவாகி இருக்கிறது.

தரண் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைத்திருக்கிறார். ஸ்டண்ட்: தளபதி தினேஷ்.

ராஜா, மாளவிகா மேனன் நாயகன், நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் சௌந்தர்ராஜா,கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிராஜன்

கபடி, கௌரவக் கொலை பின்னணியில் உருவாக்கப் பட்டிருக்கும் அருவாசண்ட படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ளவர்களின் இதயங்களை உலுக்கி எடுக்கும் என்பது நிச்சயம் என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.

எப்ப வருவேன்.? எப்டீ வருவேன்.? பன்ச் டயலாக்கை நிஜத்தில் நடத்திய ரஜினி!

எப்ப வருவேன்.? எப்டீ வருவேன்.? பன்ச் டயலாக்கை நிஜத்தில் நடத்திய ரஜினி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniநேற்று இரவு அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த்.
அப்போது கட்சி தொடங்குவது எப்போது என செய்தியாளர்கள் கேட்டனர்.
நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், இன்னும் நாள் உறுதியாகவில்லை.
நிச்சயம் உங்களிடம் (மீடியாவிடம்) தெரிவிப்பேன்.” என்றார்.
முத்து படத்தில் ஒரு காட்சியில்.. நான் எப்போ வருவேன் எப்டீ வருவேன் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என செந்திலிடம் ரஜினி சொல்வார்.
அது அப்போதே அரசியல் சார்ந்த டயலாக் தான் என கூறப்பட்டது.
தற்போது அதை நிஜத்திலும் அரங்கேற்றியுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows