காலா ரிலீஸை தடுக்க முடியாது; ரஜினிக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி பேசியதால் இந்த பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் படத்திற்கு தடை விதித்துள்ளது.

மேலும் மக்கள் விரும்பினால் மட்டுமே படத்தை இங்கு திரையிட அனுமதியளிப்போம் என்றளவில் கூறிவிட்டார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

இந்நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ்,

பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல.

இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும்.

படத்திற்கு எதிராக யார் போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.” என பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.

கவுதம் மேனனுடன் கைகோர்த்த ஜோடி அதர்வா-ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனராக அறியப்பட்டாலும் கவுதம் மேனன் தயாரிப்பாளராக படங்களை தயாரித்தும் வருகிறார்.

ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களை தயாரிக்கும் அவர் அண்மைகாலமாக பாடல் ஆல்பங்களையும் தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் `கூவா’, `உளவிறவு’ உள்ளிட்ட ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் `உளவிறவு’ பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமான்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது.

இந்நிலையில், `போதை கோதை’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அடுத்த ஆல்பத்தை வெளியிடவுள்ளனர்.

இதில் அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து தலைப்பை எதிர்க்கும் ரோசக்கார தெலுங்கர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹரஹர மஹாதேவகி’ என்ற அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் அடல்ட் ஆபாசப் படத்தை எடுத்தார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இதில் கவுதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் இளைஞர்களிடையே பாப்புலராக பேசப்பட்டாலும் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

திரையுலகினரிடையே கலவையான எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்தது.

இந்நிலையில் எப்போதும் தெலுங்கு மார்கெட்டை குறிவைக்கும் ஞானவேல்ராஜா இப்படத்தை அங்கு வெளியிட முயற்சி செய்து வருகிறார்.

தமிழில் இடம்பெற்ற அதே டைட்டில் அர்த்தப்படி தெலுங்கில் பதிவு செய்தார்.

அதாவது ’சீக்காட்டி கதிலோ சீத்தாகுத்துடு’ என்ற அந்த டைட்டிலில் பதிவிட அங்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி மறுத்துவிட்டதாம்.

‘இப்படியெல்லாம ஒரு சினிமாவுக்கு டைட்டில் வைப்பீங்க? இது ரொம்ப கேவலமாக இருக்கு. இதை இங்கு அனுமதிக்கமாட்டோம்’ என்று கூறிவிட்டார்களாம்.

எனவே தலைப்பை மாற்ற இருட்டு அறையில் ஆலோசனை செய்கிறார்களாம் இந்த முரட்டு குத்து அணியினர்.

மீண்டும் சிவகார்த்திகேயன்-பொன் ராம் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

அப்படம் மாபெரும் வெற்றிப் பெறவே, ராசியான இந்த ஜோடி மீண்டும் ரெமோ படத்தில் இணைந்தது.

இதன்பின்னர் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துவிட்டார்.

அந்த படங்களின் வெற்றி அவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை அந்தஸ்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

தற்போது தமிழில் விஜய்-62, விக்ரமின் சாமி-2, விஷாலின் சண்டக்கோழி-2, என சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தில்தான் ஒரு கெஸ்ட் ரோல் வேடம்.

இதில் சமந்தா, சூரி ஆகியோர் நடிக்க, இமான் இசையமைத்து வருகிறார்.

Keerthy Suresh joins with Sivakarthikeyan for 3rd time in Seemaraja

காலா கதையை சொல்லி தியேட்டருக்கு அழைக்கும் நிர்வாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு வெளிநாட்டில் அதிக மார்கெட் உள்ளது.

எனவே இப்படத்தை அமெரிக்காவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் காலா வெளியாகும் தியேட்டர்களில் ஒன்றான சினிமார்க் என்ற தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில், தற்போது காலா படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பதிவிடப்பட்டுள்ளது.

அதில்… திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மும்பையிலுள்ள தாராவி பகுதிக்கு சிறு வயதிலேயே செல்கிறார் கரிகாலன்.

ஒரு கட்டத்தில் மக்களின் வரவேற்பை பெற்ற அவர் அந்த பகுதியில் டானாக மாறுகிறார். பின்னர் அங்குள்ள மக்களின் பிரச்சினைக்காக போராடுகிறார்.

அந்த காலாவை காண வாருங்கள் என பதிவிட்டுள்ளனர்.

ஒரு இந்திய திரைப்படத்தின் கதைச்சுருக்கம் அமெரிக்க தியேட்டரின் சமூகவலைதளத்தில் வெளியாவது இதுவே முதல்முறையாம்.

Rajinikanth Kaala movie story line leaked

சூர்யாவின் அரசியல் படமான என்ஜிகே அர்த்தம் இதுவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, ரகுல் பிரித்தி சிங், சாய்பல்லவி ஆகியோர் நடிக்க, செல்வராகவன் இயக்கி வரும் படம் என்ஜிகே.

இதன் தலைப்பு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி கோலிவுட்டில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

இது அரசியல் சார்ந்த கட்சி பெயராக இருக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

அதாவது.. தமிழகத்தில் டிஎம்கே, ஏடிஎம்கே, பிஎம்கே, டிஎம்டிகே, ஐஏகே, எம்என்எம் ஆகிய கட்சிகள் இருப்பது போல ‘என்ஜிகே’ என்பது ஒரு கட்சி பெயரை குறிக்கும் என கூறப்படுகிறது.

‘என்’ என்றால் ‘நேஷனல்’ என்றும், ‘கே’ என்றால் ‘கட்சி’ என்றும், ‘ஜி’ அவரது பெயரை குறிக்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இதை நிரூபிக்கும் வகையில், அண்மையில் இப்படம் தொடர்பான சில புகைப்படங்கள் வெளியானது.

அதில் கட்சி கரை வேட்டியுடன் சூர்யாவும், புடவையில் சாய் பல்லவியும் உள்ளனர். மேலும் சூர்யாவின் சட்டையில் ஒரு ‘பேட்ஜ்’ம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Suriyas NGK Title meaning and shooting news updates

More Articles
Follows