BREAKING சினிமா & டிவி சூட்டிங் நடத்த மத்திய அரசு அனுமதி; நிபந்தனைகள் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*திரைப்படங்கள், தொலைக்காட்சி படப்பிடிப்புகளை நடத்துவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.*

*மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். சில நெறிமுறைகள் பின்வருமாறு…*

*படப்பிடிப்புக்கு வருவோரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.*

*படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.*

*படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.*

*உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.*

*உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கையுறை கட்டாயம் அணிய வேண்டும்.*

*படப்பிடிப்பு தளத்தில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.*

*குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.*

*படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.*

*வெளிப்புற படப்பிடிப்பின் போது கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.*

கார்த்திக் சுப்புராஜ் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ‘பூமிகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ராபர்ட் ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க படத்தொகுப்பாளாராக ஆனந்த் பணிபுரிகிறார்.

‘பூமிகா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார்.

மோஷன் போஸ்டரைப் பார்க்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்டுப்பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.

இயக்குநர் ரதீந்திரன் ஏற்கெனவே ஐஸ்வர்யா ராஜேஷ், அபய் தியோல், உள்ளிட்டோரை வைத்து ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தை இயக்கினார்.

இன்னும் இத்திரைப்படம் திரைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘லாபம்’ படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் ‘லாபம்’.

இவர்களுடன் கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் & 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘லாபம்’ பட ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில்… தொழிற்சாலை இயங்கினால் தான் விவசாயம் செய்ய முடியும் என்று இங்கே நம்ப வைக்கப்படுவதாகவும், ஆனால் உண்மையில் விவசாயம் செய்தால் மட்டும் தான் இங்கே தொழிற்சாலை இயங்க முடியும்.”

என பன்ச் டயலாக் பேசியுள்ளார் விஜய்சேதுபதி.

தல வாயிலே தமிழே வரலையே…; லாக்டவுனில் மாஸ்க்குடன் அஜித் மாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இதனால் வீட்டில் இருந்தப்படியே வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த மே மாதம் தனது மனைவியுடன் மருத்துவனை சென்றிருந்தார் அஜித். அந்த வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது.

இந்த வீடியோவில் அஜித் ஆங்கிலத்திலேயே பேசி அசத்தியிருக்கிறார்.

https://twitter.com/ThalaAjith_FC/status/1297036383312179201

சூர்யா அதிரடி..: ஆன்லைனில் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… ரூ. 5 கோடி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில்.

மும்பை, இந்தியா, XX 2020: சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான சூரரை போற்று படத்தின் நேரடி சேவையின் உலகளவிலான வெளியீடு 2020, அக்டோபர் 30-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் 200 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரதம உறுப்பினர்கள் அக்டோபர் 30 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் (அனைத்து மொழிகளிலும் டப்ஸ்) அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பலாம்.

“இயக்குனர் சுதாவிடம் கதையை நான் கேட்ட தருணத்தில், அதை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், இந்த படத்தை 2D என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரிக்கவும் விரும்பினேன்”, என்கிறார் சூர்யா.

அவர் மேலும் கூறுகிறார், “ கேப்டன் கோபிநாத்தின் பாத்திரம் எனக்கு ஒரு சவாலாக இருந்தபோதிலும், இறுதியாக எங்கள் படைப்பை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது!

நாம் இதற்கு முன் சந்தித்திராத இப்போதிருக்கும் இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் தங்கள் வீடுகளிலிருந்து “சூரரை போற்று”- ஐப் பார்க்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த படம் எங்கள் அன்பின் உழைப்பு, இது இப்போது உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது என்பதில் சந்தோஷமாக உணர்கிறேன்.

சூரரை போற்று திரைப்படம் வெளியியிட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ‘5 கோடி ரூபாய்’ பகிர்ந்தளிக்க முடிவு செய்திருப்பதாகவும், பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த காலத்தில்’ முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ருபாய் பகிர்ந்தளிக்கப்படும், உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

விஜய் சுப்பிரமணியம்: அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய இயக்குநரும், உள்ளடக்கத்தின் தலைவர் கூறுகையில்…

“சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொன்மகள் வந்தாள் திரைப்படத்துக்கு எங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா நடித்த சூரரை போற்றுவின் உலகளாவிய பிரீமியர் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அமேசான் ப்ரைம் வீடியோவில். ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையும் சாதனைகளும் பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் – மேலும் இதுபோன்ற ஒரு மேம்பட்ட கதையை எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ”

சுதா கொங்கரா பகிர்ந்துகொள்கிறார், “சூர்யாவை இயக்குவது ஒரு மகிழ்ச்சியான விஷயம். கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்திற்கு அவர் தான் எனது முதல் மற்றும் கடைசி தேர்வாக இருந்தார். அமேசான் ப்ரைம் வீடியோவில் படத்தை பிரீமியர் செய்வது ஒரு புதிய அனுபவம் மற்றும் அதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

உலகெங்கிலும், பல்வேறு வகையான மக்கள் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்பது ஒரு படைப்பாளருக்கு உற்சாகமான விஷயம் தான்.

Suriyas Soorarai Pottru to release on OTT Amazon

இஷாந்த் & தீப்தி சர்மாவுக்கு அர்ஜுனா.; மாரியப்பன் & ரோகித் சர்மாவுக்கு கேல் ரத்னா.; விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு வருடம் தோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி கவுரவித்து வருகிறது.

ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தங்கள் துறைகளில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து மத்திய விளையாட்டுத்துறைக்கு விருதுக்காகப் பரிந்துரை செய்வர்.

தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சில தினங்களுக்கு முன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கும், மற்ற வீரர்கள் மற்ற விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு.. டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.

இவர்களை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா அட்னானு தாஸ் (வில்வித்தை), டூட்டி சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் செட்டி (பேட்மிண்டன்), சுபேதர் மணிஷ் கவுசிக், லாவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை) உள்ளிட்ட மொத்தம் 27 பேருக்கு ஆகியோருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows