தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வினு வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா ‘வுல்ஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அஞ்சு குரியன், லட்சுமி ராய், எம்.எஸ்.பாஸ்கர், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீகோபிகா மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்பரீஷன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பிப்ரவரி 3 அன்று ‘வுல்ஃப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், ‘வுல்ஃப்’ படத்தை மார்ச் மாதம் திரையரங்களில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Prabhu Deva’s ‘Wolf’ First look poster released
