‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு பிறகு பிரபாஸின் மார்கெட் இந்தியளவில் உயர்ந்துவிட்டது.

இதனையடுத்து சாஹோ’ என்ற பிரம்மாண்டமான படத்தில் நடித்தார்.

தற்போது ‘ராதே ஷ்யாம் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

பிரபாஸின் 22வது படமான ‘ஆதி புருஷ்’ பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த படம் ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும் இதில் ராமர் கேரக்டரில் பிரபாஸ் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஓவியாவின் காதல் தத்துவங்கள்…; காதலில் விழுந்து விட்டாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

களவாணி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஓவியா.

அதனை தொடர்ந்து சில படங்களில நடித்து பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு ஓவியாவை தெரியாதவர்களே தமிழ் நாட்டில் இருக்க முடியாது என்கிற லெவலுக்கு பிரபலமானார்.

ஆனால் பிக்பாஸ் கொடுத்த புகழ் அவருக்கு சினிமா வாய்ப்புகளை அள்ளி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் லவ் என்ற ஒரு பதிவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்.. நாம் மிகவும் நேசிப்பவர்கள் நம் அருகில் இல்லாமல் இருந்தாலும், நம்மை விட்டு ஒருபோதும் அவர்கள் விலகி போவதில்லை. அவர்கள் அருகில் இல்லாமல் இருக்கலாம், அவர்களது குரலை கேட்க முடியாமலும் பார்க்க முடியாமலும் இருக்கலாம்.

ஆனால் அவர்கள் எப்போதும் நம் அருகில் இருப்பதுப் போன்ற ஒரு உணர்வு இருக்கும்.

நேசித்தவர்களை நாம் மிஸ் செய்தாலும் அவர்கள் நமக்கு எப்போதும் அன்புக்குரியவர்கள், விருப்பத்துக்குரியவர்கள்’ என ஓவியா பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பலருக்கும் ஓவியாவுக்கு என்னாச்சு..? காதலில் விழுந்துவிட்டாரா? என கேட்டு வருகின்றனர்.

ஒரு குட்டி ஸ்டோரி சொல்றேன்.. ஒரு குட்டி வந்ததுதான் சார் ஒரு ஸ்டோரி… ஆர்.ஜே. விஜய் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வானொலி தொகுப்பாளர், மேடை நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் ஆர்ஜே. விஜய்.

நடிகர் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவை இவர் தான் தொகுத்து வழங்கினார்.

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் இவர்.

இந்த படத்தை ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஆர்ஜே விஜய் தனது சமூக வலைத்தளத்தில் அவர் அப்பாவான ஸ்டோரியை வித்தியாசமாக பதிவிட்டுள்ளார்.

‘ஒரு குட்டி ஸ்டோரி சொல்றேன்’, ஒரு குட்டி வந்ததுதான் சார் ஒரு ஸ்டோரி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ஜே விஜய்யை நாமும் வாழ்த்துவோம்.

ஒயிட் ஷாடோஸ் GDL போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒயிட் ஷாடோஸ் GDL போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி, மற்றும் லோகோவை வெளியிட்டனர் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மற்றும் ப்ரதீப் வி ப்ளிப் DGP-CBCID

நடனம் ஆடுபவர்களும், அதை ரசிப்பவர்களும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இவர்களை உற்சாகப் படுத்தவும் ஊக்கப்படுத்தவும் கோகுல் டான்ஸ் லீக் என்ற போட்டி நடைபெற இருக்கிறது.

உலகத்தில் உள்ள 24 நாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் இந்த போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள். ஆன் லைன் மூலம் 24 நாடுகளில் உள்ள நடன குழுக்கள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்துள்ளார்கள்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நடன இயக்குனர்கள், அம்பாஸ்டர்கள் இருக்கிறார்கள். சென்னையிலும் இதுபோல் ஒவ்வொரு குழுவுக்கும் நடன இயக்குனர்கள் இருக்கிறார்கள். இந்த போட்டி டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் தலைமையில், ஒயிட் ஷேடோ நிறுவனத்தின் சிஇஓ வினோத் சிரஞ்சீவி நடத்துகிறார்.

இதற்கான போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை குஷ்பூ கண்ணுக்கு என்னாச்சு..? கண்ணில் கட்டு எதற்கு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை குஷ்பூ இன்று தன் ட்விட்டரில்.. கண்ணில் ஒரு கட்டு போட்டுள்ள ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

குஷ்புவே அந்த புகைப்படத்திற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

‘இன்று காலை தனது கண்ணில் கத்தி வைக்கப்பட்டதால் (ஆபரேஷன்) சில நாட்கள் ஆக்டிவாக இருக்க மாட்டேன். விரைவில் திரும்ப வந்துவிடுவேன். வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணியவும், வெளியே சென்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி விசாரிக்கையில் குஷ்பூ கண்ணில் சிறு கட்டி ஒன்று இருந்ததாகவும், அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

குஷ்பு விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் குஷ்பு பதிவிட்டுள்ளதாவது…

Hi friends, will be inactive for a while as I had to go under a knife for my eye this morning.. promise to be back soon. Take care, wear a mask if heading out and maintain a distance.

Eye operation updates of Actress Kushbhoo

MGR-க்கு அடுத்து SPB-க்கு கூட்டு பிரார்த்தனை; ரஜினி கமல் பாரதிராஜாவுடன் நீங்களும் பங்கேற்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இனிமையான குரலால் இந்திய ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இவர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இதனால் இவரது ரசிகர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.

அவர் பூரண குணமடைந்து திரும்பி வர வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

எஸ்பிபி.யின் மகனும் பாடகருமான எஸ்பி. சரண் தினமும் தன் அப்பாவின் உடல் நலம் குறித்து பேசிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் கூட்டு பிரார்த்தனை செய்ய நடிகர்கள், ரசிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்..

இயக்குனர் பாரதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: .

என் இனிய தமிழ் மக்களே.. இந்தியத் திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்தும், மொழிகளை வலிமைப்படுத்திக் கொண்டும் ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி தான்.

தற்போது அவன் கொரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு முடக்கப்பட்டுள்ளான் என்று நினைக்கும்போது கண்ணீர் மல்கிறது. அவன் நிலையைக் கண்டு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அனைத்து துறைக் கலைஞர்கள், பொது மக்கள் என அனைவரும் வேதனை அடை வதை பார்த்து நெஞ்சம் பதறுகிறது. அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்தவன், பண்பாளன், மாபெரும் கலைஞன். அந்த கலைஞன் மீண்டு வரவேண்டும். நாம் மீட்டு வரவேண்டும்.

அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினி காந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை (20-8-2020வியாழக்கிழமை)) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெறப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்..

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையிலிருந்த போது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார்.

அதே போல் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் குரலில் பொன்மனச்செம்மலான எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் வாருங்கள். இனம், மொழி, மதம் கடந்து ஒரு மகா கலைஞனை மீட்டெடுப்போம். அவன் குரல் காற்றில் மீண்டும் ஒலிக்க வேண்டும். ஒன்று கூடுவோம். பிரார்த்திப்போம்..

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்..

Director Bharathiraja request stars and fans of SPB for mass prayer

More Articles
Follows