பாகுபலி பிரபாஸின் ‘சாஹோ’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சாஹோ’.

சுஜீத் இயக்கியுள்ள இந்த படத்தில் ‌ஷரத்தா கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.

இவர்களுடன் எமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்க மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில், படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Prabhas Saaho set to release on 15th August as Independence day special

அரசியல்வாதிகளை அச்சுறுத்தும் நடிகர்கள்..; டைரக்டர் எஸ்ஏசி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’.

திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்துக் கொண்டு பேசினார்.

நாம் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை. படம் ரிலீசாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகிறது.

இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். எத்தனை முறை ஆட்சி மாறினாலும் சினிமா திருட்டை ஒழிக்க முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு பிறகு, வேறு எந்த ஆட்சியாளர்களும் சினிமாவுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

அரசியல்வாதிகளுக்கு சினிமாக்காரர்களை பார்த்து பயம். எங்கே நம்ம இடத்துக்கு இவர்கள் வந்துவிடுவார்களோ என்ற பயம்.

பைரசி இணையதளத்துக்கு அரசியல்வாதிகள் தான் ஏஜெண்டாக இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். இல்லை என்றால் அவர்களால் இத்தனை தைரியமாக செயல்பட முடியாது.” இவ்வாறு அவர் கூறினார்.

Director SA Chandrasekar talks about Actors in Politics

மோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து ‘ஒளடதம்’ படத்தின் தயாரிப்பாளர் கண்ணீருடன் தன் அனுபவத்தை ஊடகங்களில் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன் அது திரையுலகில் பரபரப்பானது.

கடந்த சில மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்து வைக்கப்பட்டிருந்த ‘ஒளடதம்’ திரைப்படம் அத்தடையிலிருந்து விடுதலை பெற்று வெற்றிகரமாக மே 24ல் வெளியாகிறது.

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஒளடதம்’. நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.
பணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சில விஷக்கிருமிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இத்தடைக்குக் காரணம்.
இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர்..அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்த படம் தான் ‘ஒளடதம்’. தனது முதல் முயற்சி சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல கருத்துக்களுடன் ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து பாடுபட்டுத் தயாரித்த படம் இந்த ‘ஒளடதம்’.

இப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

வெளிநாடுகளில் காலாவதியான மூலப்பொருட்களைக் கொண்டு மருந்து மாத்திரைகளைத் தயாரித்து இந்தியாவில் விற்கப்படும் மோசடிகளைத் தோலுரித்து வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம்தான் ‘ஒளடதம்’.

தயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சில விஷக்கிருமிகள்
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத் தடை செய்து விட்டனர்…
கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து வைத்திருக்கும் புதிய படத்தைத் தனதாக்கிக் கொள்ளும் ஒரு ஏமாற்று வேலை சமீப காலமாக தமிழ்த்திரை உலகில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் ‘ஒளடதம்’ திரைப்படத்திற்குள்ளும்
எஸ்.அஜ்மல்கான் என்பவர் தலைமையில் விஷக்கிருமிகள் உள்ளே நுழைந்து தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்..
ஒரு ஏமாற்று எம் ஓ யு ஒப்பந்த அடிப்படையில் மூன்று மாதத்திற்குள் படத்தை வெளியிடுவதாகவும் அதற்குள் பேசிய தொகையைக் கொடுத்து விடுவதாகவும் ஒப்புகொண்டு, பணத்தையும் கொடுக்காமல் மூன்று மாதத்திற்கு மேல் பல மாதங்களையும் கடத்தினர்..
சட்டப்படி அவர்களது ஒப்பந்தம் காலாவதியானபின் தயாரிப்பாளர் படத்தைத் தானே வெளியிட முன் வந்திருக்கிறார்.

இந்தச் சமயத்தில்தான் பல லட்சங்களில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாக கதை விட்டனர். முகவரிச் சான்றுக்காக தயாரிப்பாளர் கொடுத்த ஓட்டுநர் உரிமத்தின் ஜெராக்ஸ் நகலில் இருந்த கையெழுத்தை வைத்துப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.
தயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் 80 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர்..இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறை..
எத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.

மேலும் குறிப்பிட்ட இந்த நபர் இதைப்போல் இன்னும் சில தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஏமாற்றியிருக்கிறார் என்பதை தக்க சாட்சியங்களுடன் நிரூபித்திருக்கிறார்.
இந்த விஷக்கிருமிகள் இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும்
இனிமேல் குறிப்பிட்ட இந்த விஷக்கிருமிகளுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் இவர்கள் கடைந்தெடுத்த ஏமாற்றுக்காரர்கள் எனவும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
இவ்வழக்கை சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள், கே.எஸ்.சாரநாத், வீரா மற்றும் செல்வராஜ் ஆகியோர் மிகத்திறம்பட நடத்தி வெற்றி கண்டுள்ளனர்..

ஒளடதம் திரைப்படம் இதோ மே 24-ல் வெளியாகிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார் நாயகனும்
தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு.

அஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி நடிகர் சாம் ஜோன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏமாலி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சாம் ஜோன்ஸ் அந்த படத்தில் நன்றாக நடிக்க தெரிந்த இளம் நாயகன் என்ற பெயர் எடுத்தார். அடுத்து தர்மபிரபு, லிசா3டி படங்களின் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனி ஐயருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:-

லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த போதே சினிமா ஆர்வம் என்னை படிக்க விடாமல் செய்தது. எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையுடனே கல்லூரி படிப்பை முடித்தேன். ஏமாலி படத்தின் மூலம் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கும் வாய்பை பெற்றேன்.

முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.

பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார். தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். தர்மபிரபுவில் எமலோகத்தில் யோகி பாபுவும், பூலோகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம் தர்மபிரபு ஜீன் மாதம் திரைக்கு வர உள்ளது வித்தியாசமான நகைச்சுவை திரைப்படம் அது.

நான் சின்ன பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்தது இரண்டு முன்னணி இயக்குனர்களுடன் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.

விஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டெர்டெய்னராகவும் விளங்கவேண்டும் என்பதே என் ஆசை என்கிறார் சாம் ஜோன்ஸ்.

விஜய் சேதுபதி வசனம் ப்ள்ஸ் தயாரிப்பில் ​இயக்குநர் பிஜூ இயக்கத்தில் ​“சென்னை பழனி மார்ஸ்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இவர், தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்கியுள்ள படம் “சென்னை பழனி மார்ஸ்”.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்லியிருக்கும் படம் “சென்னை பழனி மார்ஸ்”. விஜய் சேதுபதியை வைத்து ஆரஞ்சு மிட்டாய் படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை கவனிக்க,
தனக்கேயுரிய ப்ளாக் காமெடி உணர்வை வசன முலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி.

“சென்னை பழனி மார்ஸ்” ட்ராவல் படமாக இருந்தாலும், அதில் இணைந்துகொள்ளும் பல்வேறு கேரக்டர்கள் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தும்.

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால்.

மிக சுவாரஸ்யமான ஒரு பயணக் கதையை திரையில் ஜாலியாகக் கண்டுகளிக்க வருகிறது “சென்னை பழனி மார்ஸ்”. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இசை : நிரஞ்சன் பாபு (அறிமுகம்)
பாடல்கள் : விக்னேஷ் ஜெயபால்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ; பிஜு
வசனம் : விஜய் சேதுபதி
தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் & ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்

சீயான் விக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா? அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

தான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். இந்த இருவரும் ஒன்றிணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

More Articles
Follows