சூப்பர் ஸ்டார் எப்போ வர்றாரோ; ஆனால் பவர் ஸ்டார் இப்போ வந்துட்டார்..

New Project (6)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துவிட்டார். சட்டமன்ற தேர்தலே என் இலக்கு எனவும் தெரிவித்து விட்டார்.

ஆனால் இப்போது அரசியல் களத்தில் பவர் ஸ்டார் குதித்துள்ளார்.

தமிழக மக்களால் பவர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் சீனிவாசன்.

இவர் பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளார்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது… , “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்துள்ளேன். கட்சி துணைத்தலைவராக இருக்கிறேன்.

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன்.

மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், நான் துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post