தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் கதை இதுதானா?

தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் கதை இதுதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and rajkiranராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் ‘பவர்பாண்டி’ படத்தை தனுஷ் இயக்கவிருக்கிறார்.

இதில் பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.

ராஜ்கிரணின் மனைவியாக நதியா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுரியும் கலைஞர்களை பற்றிய படம்தான் இது என தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த கலைஞர்களுக்கு வயதான பிறகு அவர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் சொல்லவிருக்கிறார்களாம்.

இப்படத்தின் இயக்குனர் தனுஷை ராஜ்கிரண் செல்லமாக மருமகன் என்றுதான் அழைப்பாராம்.

சிம்பு படங்களிலேயே இதுதான் அதிகமாம்…

சிம்பு படங்களிலேயே இதுதான் அதிகமாம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbu stillsஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, சிம்பு இதில் மூன்று வேடம் ஏற்கிறார்.

இதுவரை ஸ்ரேயா மற்றும் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கேரக்டருக்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமைக்கு ரூ. 25 கோடி வரை பேசப்பட்டு வருகிறதாம்.

இதுவரை சிம்பு படங்கள் இந்த விலைக்கு விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் காதலர் தினத்தை (பிப்ரவரி 14) குறிவைத்து இப்படம் தயாராகி வருகிறது.

ஆஸ்கர் கதவை தட்டும் தனுஷின் படம்; திறக்கப்படுமா?

ஆஸ்கர் கதவை தட்டும் தனுஷின் படம்; திறக்கப்படுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsஇந்திய அரசின் தேசிய விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை குவித்த படம் விசாரணை.

வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார்.

தினேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஆடுகளம் முருகதாஸ், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படமாக ‘விசாரணை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இத்தவலை உறுதி செய்துள்ள தனுஷ், படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரின் முதல் தமிழ் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

பிரபல நடிகரின் முதல் தமிழ் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress keerthy sureshஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 12வது படத்தை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி.

இதன் மூலம் முதன்முறையாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.

இதில் தற்போது முன்னணி நாயகியான கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.

‘தப்பாக பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்….’ அடம் பிடித்த அல்லு அர்ஜுன்

‘தப்பாக பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்….’ அடம் பிடித்த அல்லு அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

allu arjun photosஞானவேல் ராஜா தயாரிக்கும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்.

சண்டக்கோழி 2 படத்தை முடித்துவிட்ட இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவிருக்கிறார்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் பேசும்போது….

தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன். என தொடங்கினார். (ஆனால் நன்றாகவே தமிழ் பேசினார்)

நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில் தான். 2௦ வருடமாக இங்கே தான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னை தான்.

நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை.

அதற்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடி தமிழ் படம் நடிக்க வேண்டும் என்பது தான்.

எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன்” என்றார் அல்லு அர்ஜுன்.

‘அல்லு அர்ஜுன் எனக்கு போட்டியாக வந்திருப்பார்’ – சிவக்குமார் பேச்சு

‘அல்லு அர்ஜுன் எனக்கு போட்டியாக வந்திருப்பார்’ – சிவக்குமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Allu arjun and siva kumarபிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது 1௦வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.

இதன் 12வது தயாரிப்பான படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குகிறார்.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சற்றுமுன் நடைபெற்றது.

இதில் நடிகர் அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் லிங்குசாமி, நடிகர் சிவகுமார், அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ், எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது சிவக்குமார் பேசியதாவது…

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர். சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது.

அல்லு அர்ஜுன் மிகவும் அழகாக உள்ளார். நல்ல வேளை அவர் 1960ல் நடிக்க வரவில்லை அப்படி வந்திருந்தால் எனக்கு போட்டியாக வந்திருப்பார்.

கடவுள் முருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அக்காலத்தில் என்னை தேர்வு செய்தனர்.

இவர் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள்” என்றார் சிவகுமார்.

More Articles
Follows