காதலன் காந்தி தற்கொலை; கொசு மருந்து குடித்து நிலானி தற்கொலை முயற்சி

actress nilaniசின்னத்திரை நடிகை நிலானி மற்றும் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இருவரும் காதலித்து வந்தார்கள்.

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் நிலானிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் காந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில், நிலானி, காந்தி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை பார்த்தோம்.

எனவே போலீசுக்கு பயந்து நிலானி தலைமறைவானார்.

பின்னர் திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் நடிகை நிலானி.

அங்கு உதவி இயக்குநர் காந்தியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என்றும், காந்தி தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் புகார் மனு அளித்தார்.

மேலும் காந்தி தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், கூறினார்.

இந்நிலையில், நடிகை நிலானி இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரது வீட்டில் இருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவர் கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Overall Rating : Not available

Latest Post