த்ரிஷா இருந்தும் பூர்ணாவுடன் இணையும் அர்விந்த்சாமி

த்ரிஷா இருந்தும் பூர்ணாவுடன் இணையும் அர்விந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

poornaஅர்விந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார்.

இவர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மனோபாலா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை இதன் முதல் பாக இயக்குனர் வினோத் அமைத்துள்ளார்.

இந்நிலையில் இதில் மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார் பூர்ணா.

இவர் அரவிந்த்சாமியின் மனைவியாக நடிக்கிறாராம்.

பெண்களுக்கு மருத்துவ முகாம் நடத்திய அஜித் ரசிகர்கள்

பெண்களுக்கு மருத்துவ முகாம் நடத்திய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithஅஜித் படங்கள் பற்றிய தகவல்கள் வராவிட்டாலும் அவரது ரசிகர்கள் ஏதாவது ஒன்றை செய்து, அஜித்தை பேச வைத்து விடுகின்றனர்.

திருச்சி, பொன்மலையை சேர்ந்த மிரட்டல் ஸ்டார் அஜித் நற்பணி மன்றத்தினர் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து, பெண்களுக்கான மருத்துவ உடல் நல விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தி உள்ளனர்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயனைடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ajith girls

மதுரையில் ‘மகிழ்ச்சி நைட்’டாக மாறும் ரஜினி பிறந்தநாள்

மதுரையில் ‘மகிழ்ச்சி நைட்’டாக மாறும் ரஜினி பிறந்தநாள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

magizhchi nightவருகிற டிசம்பர் 12ஆம் தேதி 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

இவ்வருடம் டிசம்பர் 11ஆம் தேதியே கொண்டாடுவார்கள் எனத் தெரிகிறது.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவதார் என்ற நிறுவனம் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு ‘மகிழ்ச்சி நைட்’ என பெயரிட்டுள்ளனர்.

இதற்கான டிக்கெட்டுகள் (ரூ. 699, ரூ. 999) விற்பனை தயாராக உள்ளது.

மேலும் டிக்கெட்டுகள் கிடைக்கும் இடம், அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கு மட்டும் ஓகேவாம்… ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சயித்ரா

சூர்யாவுக்கு மட்டும் ஓகேவாம்… ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சயித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

serial chaitra‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் விஜய் டிவியில் மிகவும் பிரபலம்.

இதில் அமித் பார்கவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடித்து வந்தனர்.
ஆனால் பிரியா விலகவே, அவர் கேரக்டரில் சயித்ரா நடித்து வருகிறார்.

21 வயதாகும் இவருக்கு தமிழில்தான் இதுதான் முதல் சீரியலாம்.

வாய்ப்பு வந்தால் சினிமாவில் நடிப்பீர்களா? என்று இவரிடம் கேட்டதற்கு இவர் அளித்துள்ள பதில் இதுதான்….

“சூர்யானா அவ்வளவு பிடிக்கும். அவரோட எல்லாம் படமும் பாத்து இருக்கேன்.

அவரோட ஸ்டைல், மெனக்கெடல், எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

எந்த கதையாக இருந்தாலும் அவருடன் நடிக்க தயார்” என தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘கவண்’ படக்குழுவை மலைக்க வைத்த மடோனா

‘கவண்’ படக்குழுவை மலைக்க வைத்த மடோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madonnaகே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் கவண்.

இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் டி.ஆர். ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்து வருகிறார்.

அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் கேவி ஆனந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

“என் இயக்கத்தில் நடிப்பவர்களை நான் எப்போதும் பாராட்டுவதில்லை என என் யூனிட் ஆட்களே சொல்வார்கள்.

ஆனால் மடோனாவின் நடிப்பை பார்த்து நான் உட்பட எல்லோரும் கைத்தட்டினோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினியை மிரட்டிய வில்லி சூர்யாவுடன் இணைந்தார்

ரஜினியை மிரட்டிய வில்லி சூர்யாவுடன் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramya-krishnanவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு இதில் முக்கிய நடிகர்களின் கூட்டம் இணைந்து வருகிறது.

சூர்யாவுடன் கீர்த்திசுரேஷ், ரேவதியின் முன்னாள் கணவர் சுரேஷ் மேனன், செந்தில், சத்யன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் படையப்பா படத்தில் ரஜினியை மிரட்டிய நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனும் இணைய உள்ளராம்.

இன்னும் எத்தனை பிரபல நட்சத்திரங்கள் இணைய போகிறார்களோ? பார்க்கலாம்.

More Articles
Follows