உங்க ஊருக்கு போக எங்கே பஸ் ஏறனும்..? பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள்… முழு விவரம் இதோ

pongal special bus 2021பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்…

‘இந்த ஆண்டு பொங்கல் பண்டிகயை முன்னிட்டு 11-ம் தேதியிலிருந்து 13-ம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு… பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

*பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்கள்:*

*மாதவரம் புதிய பேருந்து நிலையம் – செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்

*கே.கே.நகர் பேருந்து நிலையம் – ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

*தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் – திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ரூட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

*தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையம் –

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

*பூந்தமல்லி பேருந்து நிலையம்*

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தசி செல்லும் பேருந்துகள்

*கோயம்பேடு பேருந்து நிலையம்*

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள்…

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், கோயம்புத்தூர், பெங்களூரு.

Pongal special buses 2021 complete details

Overall Rating : Not available

Latest Post