நாளைமுதல் புதுச்சேரி மாநில தியேட்டர்களில் படம் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா டிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் உள்ள தியேட்டர்கள் மார்ச் 16ஆம் தேதி முதல் மூடப்பட்டன.

ஆனால் சென்னை சிட்டியில் உள்ள தியேட்டர்கள் மட்டும் பழைய ஹிட்டான படங்களையும் மற்ற மொழி படங்களையும் திரையிட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தமிழகத்தில் ஸ்டிரைக் கைவிடப்பட்டு தியேட்டர்கள் இயங்கி வருகின்றன.

ஆனால் தற்போதும் புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் புதுவையில் உள்ள தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

புதுச்சேரி அரசு சார்பில் விதிக்கப்படும் 25 சதவீத கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுவையில் இந்த போராட்டம் நீடித்து வந்தது.

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது கேளிக்கை வரியை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கேளிக்கை வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 30-ந்தேதி நாளை முதல் தியேட்டர்களை திறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிகர் சங்க நிலம் முறைகேடு; முகாந்திரம் இருந்தால் சரத்குமார்-ராதாரவி மீது வழக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக 29 சென்ட் நிலம் உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு அந்த நிலத்தை முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக, அச்சங்கத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் விஷால் புகார் அளித்திருந்தார்.

காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்.

ஆனால் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் விஷால் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரஜினியின் புதிய படத்தில் சகலகலா வல்லவன் பட 2 நாயகிகள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதாகி வருவதால் 2018 செப்டம்பரில் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்த இரு படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு 45 நாட்கள் ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக் முடிவடைந்த பின், காலாவை ரிலீஸ் செய்துவிட்டு பின் இதன் சூட்டிங்கை தொடங்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் ரஜினியுடன் நடிக்க த்ரிஷா மற்றும் அஞ்சலியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

10 வருடங்களுக்கு மேலாக ரஜினியுடன் நடிப்பது என் கனவு என்று நடிகை த்ரிஷா கூறிவருவதால், அவருக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ரவி நடித்த சகலகலாவல்லவன் (அப்பாடக்கர்) என்ற படத்தில் த்ரிஷா மற்றும் அஞ்சலி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Karthik Subbaraj new movie heroine updates

சினிமா-அரசியலை தாண்டி ட்விட்டரிலும் கமல்-ரஜினி போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… கடந்த 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கும் இரு துருவங்கள் இவர்கள்.

20 வருடங்களுக்கு முன்பெல்லாம் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்பதால் பலத்த போட்டி நிலவும்.

இறுதியாக ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மோதின.

அதன்பின்னர் இருவரும் படங்களை குறைத்துக் கொண்டதால் ஒரே நாளில் மோதல் இல்லாமல் போனது.

ஆனாலும் இவரது ரசிகர்கள் படத்தின் வெற்றி வசூலை ஒப்பிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தற்போது இவர்களது நடிப்பில் தலா 2 படங்கள் வெளியாகவுள்ளன.

காலா மற்றும் 2.0 படங்கள் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ளன. விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு படங்கள் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளன.

இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

எனவே மீண்டும் ஒரு போட்டி சூழ்நிலை உருவாகும் எனத் தெரிகிறது.

சினிமாவை தவிர்த்து தற்போது இருவரும் அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சியை அறிவித்துவிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்.

விரைவில் ரஜினி தன் கட்சியை அறிவிக்கவுள்ளார்.

இருவரும் தங்கள் அரசியல் பாதை வேறு வேறாக இருக்கும் என அறிவித்து விட்டதால் அரசியலிலும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ட்விட்டரில் ஒரு போட்டி தற்போது ஆரம்பித்துள்ளது.

ரஜினி டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும், கமல் டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்.

ரஜினிக்கு பின்னரே கமல் ட்விட்டரில் இணைந்தார். ஆனால் அடிக்கடி நிறைய பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

இதுவரை 514 ட்வீட்டுக்களை பதிவிட்டுள்ள இவர் 25 பிரபலங்களை பாலோ செய்கிறார்.

ஆனால் ரஜினி முன்பே ட்விட்டரில் இணைந்தாலும் சில பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார்.

அதாவது இதுவரை 116 ட்வீட்டுக்களே ரஜினி பதிவிட்டுள்ளார். இவர் 24 பிரபலங்களை பின் தொடர்கிறார்.

இனி வரும் காலங்களில் இந்த போட்டியில் யார் முந்துகிறார்? என்பதை பார்ப்போம்.

After Cinema and Politics Rajini and Kamal clash in Twitter

3 நாட்களில் பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படும் என விஷால் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் 1ஆம் தேதி தியேட்டர்களில் திரையிட உதவும் டிஜிட்டல் க்யூப் கட்டணத்திற்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து அதன்படி இன்றோடு 27 நாட்களாக அதை செயல்படுத்தி வருகிறது.

மேலும் சினிமா சூட்டிங் முதல் எந்த ஒரு நிகழ்வும் நடைபெற கூடாது என அறிவித்துவிட்டனர்.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது.

திரை உலகை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் மூன்று நாட்களில் இறுதி முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Within 3 days Cinema strike will be coming to end says Vishal

மெக்கானிக்கல் இன்ஜினியரிடம் விவசாயம் கற்கும் கார்த்தி குடும்பத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.

கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள திரு. வேணுகோபால் அவர்களின் விளைநிலங்களுக்கு சென்றுள்ளார்.

தனது விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது முயற்சி பற்றி மிகவும் பெருமையாக கூறுகிறார். இவரின் முக்கிய குணநலன்களை பார்த்து வியந்து போன கார்த்தி தனது உறவுகளுடன் செங்கல்பட்டு சென்றுள்ளார்.

நடிகர் கார்த்தி தனது புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.

அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன.

ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்.

மெக்கானிக்கல் இஞ்சினீயரான திரு. வேணுகோபால் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வேளாண்மை தொழிலை பேரார்வத்துடனும் நம்பிக்கையோடும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார்.

இந்த விளைநிலத்தின் உரிமையாளரான வேணுகோபால், நடிகர் கார்த்தி பற்றி கூறினார்.

நான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர் , நடிகர் கார்த்தியின் குடும்பம் வந்து உங்களிடம் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் விரும்புகின்றனர் என்று கூறினார்.

மறுநாளே கார்த்தி சார் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன். கார்த்தி சாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாடுடன் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்டார்.

அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு பேரின்பமாக இருந்தது .அவரின் வேலைப்பளுவிற்கு இடையில் இங்கு வந்தது பாரட்ட வேண்டியவையாகும்.

பல மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக செயற்கை பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து நமக்குதான் என்பதை உணர வேண்டும்.

எனவே செயற்கையானவற்றை தவிர்த்து இயற்கை தரும் பலன்களை பற்றி தெரிந்து கொண்டு அதன்படி வாழ முயற்சிசெய்வோம்.

மேலும், செலவில்லா விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள் இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் www.ilearnfarming.com

Actor Karthi family learing Agriculture

More Articles
Follows