தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக கிரண்பேடி அண்மையில் பொறுப்பேற்றார்.
தன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இவர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில், தற்போது நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுச்சேரியில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் தன்னுடைய ட்விட்டரில் “கழிவறை கட்டுவோருக்கு இலவச சினிமா டிக்கெட் தரப்பட உள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜவஹர் கூறியதாவது:
”புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் செல்லிப்பட்டு கிராமம் உள்ளது. அங்கிருந்த 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிவறை இல்லை.
எனவே கழிவறை கட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் தருவதை தெரிவித்தோம்.
மேலும் கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்துக்கு ரஜினியின் ‘கபாலி’ படத்தின் 4 டிக்கெட்டுகள் தரவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.