அரசியல் கட்சி கன்பார்ம்; ரசிகர்கள் நிதி தருவார்கள்.. கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்துக்களை தீவிரவாதிகள் என நடிகர் கமல் குறிப்பிட்டதாக கூறி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளிக்கும் வகையில் ரசிகர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

சென்னை கேளம்பாக்கத்தில் ரசிகர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.

கமலஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் இருந்து 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த சந்திப்புக்கு வந்திருந்தனர்.

இச்சந்திப்பின் போது தமிழக அரசியல் பிரவேசம், ஏரி, குளங்களை தூர் வாருதல் தொடர்பாக பேசினார்.
ரசிகர்கள் மத்தியில் கமலஹாசன் பேசியதாவது:

பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும்.

இயற்கை சீற்றத்திற்கு ஏழை, பணக்காரர்கள் என வித்தியாசம் தெரியாது. ஏதோ ஆர்வக்கோளாறில் பதவிக்காக பிரச்சனைகளை பற்றி நான் பேசவில்லை.

பணக்காரர்கள் மட்டும் முறையாக வரிகட்டினால் போதும் நாடு ஓரளவுக்கு சரியாகி விடும். அடக்குமுறை என்பது அரசியலில் யதார்த்தமாகி விட்டது.

தமிழ்நாட்டுக்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை. தமிழக நலன்களுக்காக ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து வருகிறோம்.

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான பணத்தை ரசிகர்கள் தருவார்கள். அதனால் பயம் இல்லை.

ரசிகர்களிடம் வாங்கும் பணத்துக்கு கணக்கு வைக்க செயலி பயன்படுத்தப்படும். கட்சி தொடங்குவதற்கான முதல் பணி தான் செல்போன் செயலி.

ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 7-ம் தேதி செயலி அறிமுகம் செய்யப்படும்.

அரசியல் கட்சி தொடங்க பணம் குறித்த பயம் எனக்கு இல்லை. இது ஆரம்ப கூட்டம்தான், இதுபோன்று இன்னும் 50 கூட்டங்களை நடத்த வேண்டும். அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாகத்தான் செய்ய முடியும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Political party announcement will be soon says Kamalhassan

அடக்குமுறையின் மறுமுகம்தான் களத்தூர் கிராமம்: வெற்றிமாறன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரண் கே.அத்வைதனின் இயக்கத்தில் இளையராஜா இசையில் கிஷோர், சுலீல்குமார் நாயகர்களாக நடித்துள்ள படம் களத்தூர் கிராமம்.

அக்டோபர்-27ஆம் தேதி படம் 80 திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் அடக்கு முறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது என இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது…

“இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தை பொருத்தவரை எனக்கு மன நிறைவான படம். இரண்டுமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்த மன வருத்தத்தையும் நிறைய பொருட்செலவையும் ஏற்படுத்தியது.

முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போன காரணத்தினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இளைஞன்.. சினிமாவுக்கு புதியவன்.. திரையரங்குகள் உறுதி செய்யும் போராட்டம் போன்றவை மன அழுத்தத்தின் உச்சத்தில் என்னை கொண்டுபோய் நிறுத்தியது. இருந்தாலும் விடாப்படியாக, ஒரு நல்ல படத்தை மக்கள் மத்தியில் சரியாக கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இன்று படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கு மன நிறைவை தந்துள்ளது. நல்ல சினிமாவை நேசிக்கக் கூடிய சில திரையரங்க நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது ஆறுதலைத் தந்தது. அவர்களாகவே படத்தைக்கேட்டு வாங்கி திரையிட்டார்கள்.

பெரிய நடிகர்கள் நடித்தால் அல்லது பெரிய தயாரிப்பாளர் படம் என்றாலோ, பெரிய இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்.

சில நல்ல படங்கள் வரும்போது அதைப் பார்த்துவிட்டு பாராட்டினால் சிறு படங்கள் வெற்றிபெறும். இயக்குநர் வெற்றிமாறன் விதிவிலக்காக எங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. அவருக்கு நன்றி! என்றார்.

களத்தூர் கிராமம் படத்தில் கிஷோர், யாக்னா ஷெட்டி, ரஜினி மஹாதேவய்யா, சுலீல் குமார், மிதுன்குமார், அஜய்ரத்னம், தீரஜ் ரத்னம் ஆகியோர் நடிப்பிலும், இசைஞானியின் இசை ஆளுமையிலும், இயக்குநர் சரண் கே.அத்வைதனின் தெளிவான திரைக்கதை இயக்கத்திலும் உருவாகி உள்ளது.

Director Vetrimaaran praises Kalathur Gramam movie

நெஞ்சில் துணிவிருந்தால் படத்திலும் மெர்சல் மெசேஜ் உள்ளது: சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வருகிற நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் கூறியதாவது…

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

இந்த படம் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது.

இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துவுள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.

என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார். சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம்.

இப்படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி. வெண்ணிலா கபடி குழுவுக்கு பின் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம்.

இந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும். இந்த படம் என்னுடைய பாணியில் அமைந்ததாக இருக்கும்.

என்னுடைய அனைத்து படங்களிலும் சமூக நீதி இருக்கும். ராஜபாட்டை ஒரு தோல்வி படமாக இருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கும்.

மெர்சல் படத்தில் இருக்கும் சமூக அக்கறை கொண்ட செய்தியை போன்று ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திலும் ஒரு அழுத்தமான சமூக அக்கறை கொண்ட செய்தி உள்ளது.

இந்த படத்தில் விக்ராந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் மிக முக்கியமான நடிகராக வளம் வருவார்.

புது முகங்களை கொண்டு படம் எடுப்பது தானாக அமைகின்றது. என்னுடைய library-ல் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர் சாமியின் குதிரை’ , ‘ஜீவா’ ,’ மாவீரன் கிட்டு’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் இது போன்ற படங்கள் தான் காலத்திற்கும் நிற்கும்.

மிக பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அப்படம் வெற்றியடையும் போது அந்த வெற்றி நடிகரை மட்டுமே சாரும். புது முகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடையும் போது அந்த வெற்றி அப்படத்தின் இயக்குநரையே சேரும்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 10 வெளியாகின்றது. இது விறுவிறுப்பான படமாக அமையும்.’ நான் மகான் அல்ல’, பாண்டியநாடு’ போன்ற படங்களை போல் கிளைமாக்ஸ் இருக்கும்.

இந்த படத்தின் கதை உங்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்.என்று இயக்குநர் சுசீந்திரன் கூறினார்.

Nenjil Thunivirundhal movie has Mersal social message says Suseenthiran

உதவி தேவைப்படுவோருக்கு உதவ விஷால் உருவாக்கிய V SHALL ஆப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காகவே நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் V SHALL என்ற அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

Vishal going to launch V SHALL app on December 2017

கமல் மீது வழக்கு; விசாரணையை நவ.22-க்கு ஒத்திவைத்தது வாரணாசி கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பன்முக திறமைக் கொண்ட கமல்ஹாசன் தமிழ் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இனி இல்லை என கூறமுடியாது என்று கருத்தை தெரிவித்திருந்தார்.

அதில் இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி இந்துக்கள் விட முடியாது எனவும் தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.

இதற்கு இந்துக்கள் அமைப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் கமல்ஹாசன் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப் பதிவுசெய்து உள்ளனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் அட்டப்படி 500, 511, 298, 295(ஏ) & 505(சி) ஆகியபிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது போல் வாரனாசி முனிசிபல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் இந்து மதத்தை புண்படும் வகையில் பேசிய கமல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு விசாரணைக்கு வரவே, விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது வாரணாசி நீதிமன்றம்.

Kamal court case on Uttar Pradesh news updates

சிவா-அஜித் கூட்டணியில் முதன்முறையாக இணையும் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம் படம் வெற்றிப் பெறவே, தொடர்ந்து சிவா இயக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அஜித்.

வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தனது 58 படத்தையும் சிவாவே இயக்கட்டும் என அஜித் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க யுவன் சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் மங்காத்தா, ஆரம்பம் படத்திற்கு யுவன் இப்படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தாலும் சிவா படத்திற்கு இவர் இசையமைப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Yuvan shankar raja may compose music for Ajith 58 directed by Siva

More Articles
Follows