ரஜினியின் இலங்கை பயணம் ரத்து; மகிழ்ச்சி அடைந்த தலைவர்கள்

ரஜினியின் இலங்கை பயணம் ரத்து; மகிழ்ச்சி அடைந்த தலைவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth sittingரஜினிகாந்த் இலங்கைக்கு செல்லக்கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து தன் இலங்கை பயணத்தை ரத்து செய்தவதாக கூறி ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் ரஜினி என்பதை பார்த்தோம்.

ரஜினியின் இந்த முடிவை பாரதீய ஜனதா கட்சி விரும்பவில்லை.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில்…

“ரஜினிகாந்த் இலங்கை சென்றிருந்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் அவர் ரத்து செய்துவிட்டார். ” என்று கூறினார்.

ஆனால் ரஜினியின் முடிவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து, வாழ்த்தியுள்ளனர்.

அவர்களின் கருத்துக்கள் இதோ…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

“இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி. விளம்பரம் தேடுவதற்காக நாங்கள் யாரும் தலையிடவில்லை.

ரஜினிகாந்த் வந்தால் பாதகமாக அமையும் என இலங்கைத் தமிழர்கள் கூறினர். அவர் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை” என்றார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ…

“ரஜினியிடம் நான் தொலைபேசியில் பேசினேன். ஆனால் அதுகுறித்து நான் விளம்பரம் செய்யவில்லை.

மேலும் விளம்பரத்துக்காக ரஜினியின் பயணத்தை அரசியலாக்கவில்லை.

அவர் தவறான தகவல்கள் அடிப்படையில் இலங்கை செல்லவிருந்தார். தற்போது ரத்து செய்துள்ளார். அவர் ஒரு மாபெரும் மனிதர்” என்றார்.

அ.தி.மு.க அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்…

“தமிழர்களின் உணர்வை புரிந்து பயணத்தை ரஜினி ரத்து செய்ததற்கு நன்றி” என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…

“இலங்கை பயணத்தை ரத்து செய்த ரஜினிக்கு நன்றி.

அவர் முள்ளிவாய்க்கால் துன்பங்களை நேரில் கேட்டறிய வேண்டும்” என்றார்.

Political leaders reaction to Rajinis Srilanka trip cancellation

 

நயன்தாராவுடன் டூயட் பாட, பாலிசியை பறக்க விடும் சூரி

நயன்தாராவுடன் டூயட் பாட, பாலிசியை பறக்க விடும் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayathara Sooriசில தினங்களாக நயன்தாரா ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்கிறார் என்றும், அதில் ஹீரோவாக சூரி நடிக்கின்றார் என்றும் செய்திகள் வந்தன. (நம் தளத்தில் பதிவிடவில்லை)

இதுகுறித்து சூரியே தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளதாவது…

நான் ஒரு காமெடி நடிகர்.இந்த வேடங்களிலேயே நடிக்க விரும்புகிறேன்.

ஹீரோவாக சான்ஸ் வந்தும் அந்த வேடங்களை ஏற்காமல் இருக்கிறேன்.

நயன்தாரா ஒரு டாப் ஹீரோயின். இன்னும் பல வருடங்களுக்கு அவர் இடத்தை எந்த நடிகையாலும் அசைக்க முடியாது.

அவரின் கேரக்டர் முக்கியமாக இருக்கும் கதைகளையே அவர் செலக்ட் செய்து நடித்து வருகிறார்.

அவர் எப்படி? என்னுடன் ஜோடியாக நடிப்பார்.

அப்படி ஒருவேளை நயன்தாரா ஓகே சொன்னால், இருக்கிற கால்ஷீட் அவருக்கே கொடுத்து, ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை கைவிட்டு விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதானே.. நயன்தாராவுக்காக இது கூட செய்யலேன்னா எப்படிங்க..???

If Nayanthara is my pair i am ready to loose my policy says Soori

‘இம்முறை (மட்டும்) இலங்கை பயணம் ரத்து..’ – ரஜினி அறிக்கை

‘இம்முறை (மட்டும்) இலங்கை பயணம் ரத்து..’ – ரஜினி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthலைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வழங்கவிருந்தார்.

ஆனால் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கைக்கு ரஜினி செல்லக்கூடாது என தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பின.

திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோருக்கு ரஜினி செல்லக்கூடாது என்றனர்.

ஆனால் சுப்ரமணிய சுவாமி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரஜினி சென்றால் தப்பில்லை என்றனர்.

இந்நிலையில் நான் ஒரு நடிகன்.. அரசியல்வாதி அல்ல. என் இலங்கை பயணத்தை அரசியல் ஆக்க வேண்டாம்.

தமிழர்களுக்காக பலர் மடிந்த வீரமண்ணை, அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க நினைத்தேன்.

மேலும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து தினம் வருந்துகிறேன். எனவே என்னளவில் முடிந்தவரை திரு மைத்திரி பாலா சிரிசேனா அவர்களுடன் அங்கே பேச நினைத்தேன்.

ஆனால் பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இம்முறை ரத்து செய்கிறேன்.

ஆனால் இனிவரும் காலங்களில் என்னை இலங்கைக்குப் போகவிடாமல் செய்துவிடாதீர்கள். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Rajinikanth cancelled Srilanka tour

அந்த அறிக்கையின் முழு விவரம் இதோ..

 

rajini sri lanka

 

 

rajini srilanka 2

rajini srilanka 3

‘பாகுபலி’க்காக ஒரே மேடையில் ரஜினி-விஜய்..?

‘பாகுபலி’க்காக ஒரே மேடையில் ரஜினி-விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijayராஜமௌலி இயக்கியுள்ள ‘பாகுபலி 2’ படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி யூடிப்பில் சாதனை படைத்தது.

இப்படத்தின் தமிழ் பதிப்பு பாடல்கள் சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இதற்கான விழாவில் ரஜினி கலந்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்யும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில், ரஜினியும் விஜய்யும் ஒரே மேடையில் இணையக்கூடும்.

Rajini and Vijay may participate in Baahubali 2 audio launch

விஜய்-முருகதாஸ் கூட்டணி உறுதி..? தயாரிப்பாளர் யார்..?

விஜய்-முருகதாஸ் கூட்டணி உறுதி..? தயாரிப்பாளர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay murugadossஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் தன் 61வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அட்லி இப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவது தற்போது உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்பு இவர்கள் இணைந்த துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்க உள்ளதாம்.

2018ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதால், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Vijay 62 movie will be directed by AR Murugadoss

‘ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு…’ திருமாவளவன் அட்வைஸ்

‘ரஜினி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு…’ திருமாவளவன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Thirumavalavanலைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

லைக்கா நிறுவன தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை பெயரில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் இவை.

இந்த வீடுகளை ஈழத்தமிழர்க்கு வழங்கும் விழா வருகிற ஏப்ரல் 9ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடக்கிறது.

இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு வீடுகளை வழங்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் ரஜினி இலங்கை செல்லக்கூடாது என பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.

மேலும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும் இது குறித்து கூறியுள்ளார்.

இலங்கை சென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி சிக்கலில் சிக்கிக் கொள்வார். எனவே அவர் செல்வதை தவிர்க்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

Rajini should not go to Srilanka for Lyca function says Thirumavalavan

More Articles
Follows