குடிநீரில் மலம்.; பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் காவல் துறை.; இயக்குநர் ரஞ்சித் கண்டனம்

குடிநீரில் மலம்.; பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் காவல் துறை.; இயக்குநர் ரஞ்சித் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான இயக்குனர் என்றால் பா ரஞ்சித்.

இவரின் படங்களில் சாதி சார்ந்த புரட்சிகரமான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கும்.

தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தபிழக காவல் துறையை கண்டித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில்…

தொடரூம் சமூக அநீதி!.. புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்.

கூடுதல் தகவல்…

புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

police officers intimidation to victims in vegaivayal peoples pa ranjith

அடுத்த கட்டத்திற்கு செல்லும் ரஜினிகாந்தின் ‘தலைவர் 171’

அடுத்த கட்டத்திற்கு செல்லும் ரஜினிகாந்தின் ‘தலைவர் 171’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையில் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

மூத்த இயக்குனர் பி.வாசுவுடன் மீண்டும் இணைகிறார் ஜினி.

ரஜினி படத்தின் முழு ஸ்கிரிப்டை முடிக்க தற்போதைய படமான ‘சந்திரமுகி 2’ படத்திலிருந்து வாசு ஓய்வு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Superstar Rajinikanth’s ‘Thalaivar 171’ goes to the next level

வாரிசு படத்தில் குஷ்பு காணாமல் போனதற்கு இதுதான் உண்மையான காரணமா?

வாரிசு படத்தில் குஷ்பு காணாமல் போனதற்கு இதுதான் உண்மையான காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இருந்தது மற்றும் இப்படத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகை மற்றும் அரசியல்வாதியான குஷ்பு ஆவார்.

படம் வெளியானபோது ரசிகர்களும், ரசிகர்களும் அவரை படத்தில் காணவில்லை! அவரது காட்சிகள் வெட்டப்பட்டதா, அப்படியானால் ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்திய வீடியோ நேர்காணலில், குஷ்பு படத்தில் தனது கதாபாத்திரம் என்ன என்பதை வெளிப்படுத்த முடியாது என்று கூறினார்.

ஆனால் கடந்த ஆண்டு அவர் படப்பிடிப்பின் போது, ​​​​அவர் தனது சமூக ஊடகங்களில் விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் புகைப்படங்களை வெளியிட்டார்.

Is this the real reason why Kushboo was missing in Varisu?

உயிரை விட சினிமா பெருசு இல்ல..; தமிழ்நாடு / தமிழகம் எப்படி அழைப்பீங்க.?; லோகேஷ் பதில்

உயிரை விட சினிமா பெருசு இல்ல..; தமிழ்நாடு / தமிழகம் எப்படி அழைப்பீங்க.?; லோகேஷ் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவையில் வருமான வரித்துறை சார்பில் இளம் தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது…

‘விரைவில் தளபதி 67 பட அறிவிப்பு வெளியாகும்.

தமிழ்நாடு / அல்லது தமிழகம் எப்படி அழைக்க விரும்புகிறீர்கள்? என கேட்டதற்கு தமிழ்நாடு என அழைப்பேன் என்றார்.

மேலும் ரசிகர்கள் மோதல் மற்றும் மரணம் குறித்த கேள்விக்கு… “ரசிகர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இது வெறும் சினிமா தான்.

உயிரை விடும் அளவிற்கு சினிமா ஒன்றும் இல்லை. எல்லாம் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பவேண்டும் என்பதே என் கருத்து.” என்றார்.

Cinema is no better than life..; How do you call Tamil Nadu / Thamizhagam? ; Answer by Lokesh

தை பிறக்கும் நாளில் ‘தளபதி 67’.; பக்கா பிளானில் லோகேஷ் கனகராஜ்

தை பிறக்கும் நாளில் ‘தளபதி 67’.; பக்கா பிளானில் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு படம் வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU)-ன் ஒரு பகுதியாக இருக்கும் எனத் தெரிகிறது .

கமலின் ‘விக்ரம்’ பட அறிவிப்பை போல தளபதி 67 படத்துக்கும் இன்ட்ரோ வீடியோ டீசர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரித்விராஜ், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய வேடத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடிக்கவுள்ளதை அவரே அண்மையில் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Thalapathi 67’ update on pongal ; Lokesh Kanagaraj’s super plan

மீண்டும் இணையும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணி.; இந்த படமா.? அந்த படமா.?

மீண்டும் இணையும் தனுஷ் – செல்வராகவன் கூட்டணி.; இந்த படமா.? அந்த படமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன ஆகிய படங்களில் செல்வராகவன் – தனுஷ் இணைந்து பணியாற்றினர்.

இந்தப் படங்களின் வெற்றியால் இவர்களது கூட்டணிக்கு எப்போதும் ஓர் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே வந்தது.

ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தான் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் இணைந்தனர்.

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கி அவரே சிரிய கேரக்டரிலும் நடித்திருந்தார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் இணைய உள்ளனர்.

இந்த படம் ஆயிரத்தில் ஒருவன் 2 அல்லது புதுப்பேட்டை 2 இருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

விரைவில் தனுஷின் ‘வாத்தி’ படம் ரிலீசாகவுள்ளது. இதன் பின்னர் கேப்டன் மில்லர் படம் வெளியாகும்.

அதன்பிறகு சேகர் கம்முலா மற்றும் மற்றொரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்.

Dhanush – Selva Raghavan combo to reunite again?

More Articles
Follows