விஜய் ரசிகர் மன்ற தலைவரை கொலை செய்தவர்கள் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘பைரவா’ படத்தை அவரது ரசிகர்கள் கோலாகலமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அன்றைய தினமே காஞ்சிபுரம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் ரவி மர்மமான முறையில் இறந்தார்.

அவரது மறைவிற்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

இந்நிலையில் ரவியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சீனிவாசன், அப்பு, பாபு ஆகிய மூவரும் ரவியை நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Police arrested persons who involved in Vijay fans assoication leader murder

‘ஓடி ஒளிய மாட்டேன்; களத்தில் சந்திப்பேன்..’ ஜிவி. பிரகாஷ் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்திட வேண்டும் என இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து ஒரு சிலர் கூறும்போது, இப்போது போராடும் இவர்கள், ஜனவரி முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார்கள் என்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி. பிரகாஷ் தன் வீடியோ பதிவில் கூறியதாவது…

“நாளை (ஜனவரி 17) காலை 6:30மணிக்கு என் தமிழ் சொந்தங்களோடு சேலம் ஆத்தூரில் ஏறு தழுவுதல் போட்டியில் கலந்து கொள்கிறேன்.

ஜனவரி முடிந்தால் ஓடிப்போய்விடுவார்கள்’ என்று கூறுவது தவறு.

வாழ்க்கை முழுவதும் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பேன்.

என்னுடன் எனது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரும் உதவிகளை செய்வார்கள்.

கொம்பு வச்ச சிங்கங்டா. களத்தில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

GV Prakash supports jallikattu statement

உலக மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கும் அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவிலும் சரியான உணவு, குடிநீர் கிடைக்காமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெருப்புடா பாடல் புகழ் பாடாலாசிரியரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.

“மாவட்ட, தேசிய மற்றும் உலகத்தில் உள்ள மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கிறேன்.

அறவழிப் போராட்டக்கார்களை காப்பாற்ற வேண்டும்” என கேட்டுக் கொள்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அங்கு போராட்டக்காரர்களுக்கு செல்லும் உணவுகளை போலீசார் தடுத்து நிறுத்துவதாகவும், அவர்கள் மீது தடியடி நடத்துவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Arunraja Kamaraj ‏@Arunrajakamaraj
i request all the Regional,National and international medias to come to alangaanallur and save the protesters. #humanrightsviolations

Arunraja Kamaraj invited world media to support Jallikattu

விஜய்யின் சினிமா கேரியரில் ‘பைரவா’ படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நான்கு நாட்கள் வசூலை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதாவது ரூ. 100 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய்யின் சினிமா கேரியரில் இவ்வளவு பாஸ்ட்டாக (4 நாட்களில்) ரூ. 100 கோடியை இந்த படம்தான் வசூலித்துள்ளதாம்.

Vijays Bairavaa movie collected rs 100 crores in 4 days

‘ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு…’ சரத்குமார் தந்த விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை சரத்குமார் கூறியதால், சரத்குமாரை ரஜினி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

இதற்கு சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

“இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை , மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர் கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்று குறிப்பிட்ட கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.

அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைதான் கேட்கவேண்டும் என்று தெரிவித்தேன்.

பிறகு தமிழகத்தை தமிழன்தான் என்றும் ஆளவேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிக்கை சகோதரர்கள் “ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர்”

அதற்கு நான் ரஜினி இனியவர் என் நண்பர் ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.

எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை என் சமத்துவ தழிழ் நெஞ்சங்கள் பொறுமையுடனும் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

SarathKumar Clarification about his statement on Rajinikanth

‘வழிநடத்திட வாருங்கள்…’ ரஜினியை அழைக்கும் பிஜேபி பிரமுகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 25 வருடங்களாகவே, ரஜினியை அரசியலுக்கு அழைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

அவ்வப்போது ரஜினியும் தன் சினிமாக்களில் இது தொடர்பாக வசனங்களை பேசி கைத்தட்டல்களை அள்ளி வருகிறார்.

ஆனால் தன் அரசியல் நிலையை ஆண்டவன் முடிவு செய்வார் என்று தன் ஸ்டைலில் கூறிவருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தால் தமிழக மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தமிழகத்தை வழி நடத்திட வேண்டும் என பிஜேபி பிரமுகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதம் தற்போது இணையங்களில் ரைவலாகி வருகிறது.

BJP member invite Rajini to lead Tamil Nadu

More Articles
Follows