ஓர் உயிரை பழிவாங்கிய பிக்பாஸ் வீடு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வருகிறார்.

இதற்கான செட் சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பிளம்பராக பணியாற்றிய கரீம் இப்ராஹிம் ஷேக் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மும்பையை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் கேட்டபோது, அப்படியொரு சம்பவமே இங்கு நடைபெறவில்லை என்றும் பின்னர் விசாரித்து சொல்வதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நசரேத் பேட்டை போலீஸார் கூறுகையில்…

“பிக்பாஸ் வீட்டில் வாலிபர் தவறி விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

அவரது மரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

முதல்கட்ட தகவலில் இறந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக் என்பது தெரியவந்துள்ளது” என்றனர்

ஓயாத அலை; ஓவியாவுக்கு ஓட்டு போட சொல்லும் ஓட்டல் பில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள பலரும் அடிமையாகிவிட்டனர் என்றே சொல்லலாம்.

இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருடைய பாசத்தையும் அள்ளியுள்ளார் ஓவியா.

இவரை அங்குள்ள போட்டியாளர்கள் ஒடுக்க நினைப்பதால், ஓவியாவை காப்பாத்துங்க… சேவ் ஓவியா என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அடக்கப்படுப‌வர்கள் மேல் வரும் பரிதாபமும், ஒடுக்க நினைப்பவர்கள் மேல் வரும் பாசமுமே மக்களை ஈர்த்துள்ளது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்து ஓட்டல் பில் ஒன்றிலும் ஓவியாவுக்கு ஓட்டு போடுங்க என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இவையில்லாமல் சர்ச் மாதா திருவிழா என அனைத்திலும் ஓவியாவே தென்படுகிறார்.

பிக்பாஸ் முடியும் வரை இந்த ஓவியா அலை ஓயாது என்றே தெரிகிறது.

Even Hotel bills support Oviya in Bigg Boss show

ஜீவா-நிக்கி ஜோடிக்கு கீ கொடுத்து உதவும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இயக்கி வரும் படம் கீ.

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ படத்தை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் ஜீவா, நிக்கி கல்ராணி. அணைகா சோடி, R.J. பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்ட்டரை இன்று இரவு 8 மணிக்கு சிம்பு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மீண்டும் சிம்புவின் மன்மத(ன்) ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் புதிய படத்தின் அறிவிப்பையும் அப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் எனவும் ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தார் சிம்பு.

புதிய முயற்சியாக பாடல்கள் மற்றும் இடைவேளை இல்லாமல் இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் யுவனின் பின்னணி இசையை முழுவதுமாக முடித்துவிட்டு சூட்டிங்குக்கு செல்லவிருக்கிறோம் என்றார்.

ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும் படத்தொகுப்பாளராக ஆண்டனியும் பணிபுரியவிருக்கிறார்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சிம்பு-யுவன்-ஆண்டனி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற மன்மதன் (2004) படத்தில் இணைந்திருந்தது.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Simbu coming back with Manmadhan team after 13 years

ஒரே நேரத்தில் விஜய்-சூர்யாவுடன் டூயட் பாடும் ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.

இந்நிலையில் மெர்சல் படத்தை அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திலும் ராகுல் பிரித்தி சிங்கே நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு படங்களின் சூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Vijay and Suriya going to romance with Rakul Preet singh

பெஃப்சி ஸ்டிரைக் வாபஸ்; நாளை முதல் ரஜினி-விஜய் பட சூட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெஃப்சி மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே சம்பள பிரச்சினை எழுந்ததையடுத்து, திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.

இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர்.

மேலும் ரஜினியின் ‘காலா’, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

கடந்த 3 நாட்களாக பல்வேறு திரைப்படங்கள் பாதிக்கப்பட்டன.

ரஜினி சார் மற்றும் கமல் சார் போன்ற மூத்த கலைஞர்களும் எங்களுடைய முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.

எனவே இது சம்பந்தமாக தொழிலாளர் ஆணையரை நேரடியாக சந்தித்து ஓர் நல்ல முடிவு காண வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம் என அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளார்கள்.

மேலும் பல அமைப்புகளும், பல்வேறு துறையினரும் வேண்டுகோள் வைத்த அடிப்படையில் நாளை முதல் பணிக்குச் செல்வது என முடிவெடுத்திருக்கிறோம்.

முதலில் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்று தெரிவித்தார்கள். நாளை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதால் மட்டுமே பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளோம்.

நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எந்தவித நிபந்தனையும் வைக்க விரும்பவில்லை.

எங்களை பிளவுப்படுத்தாதீர்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இனி தன் படங்களில் பெப்சி தொழிலாளர்களும் அந்த அமைப்பை சாராத தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.” என்றார்.

எனவே நாளை முதல் நிறுத்திக் வைக்கப்பட்ட காலா, மெர்சல் பட படப்பிடிப்புகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

FEFSI President RK Selvamani announced strike has been cancelled

More Articles
Follows