தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் ‘பிச்சைக்காரன் 2’.
இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இயக்கம் மட்டுமின்றி, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படத்தை தயாரிக்க, இவரே இசையும் அமைக்கிறார்.
இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 2’, மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் டீசர் நாளை ஏப்ரல் 29-ம் தேதி சனிக்கிழமை வெளியாகவுள்ளது.
மேலும், ‘பிச்சைக்காரன் 2’ படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘Pichaikkaran 2’ to release on this may 19
